Karuvile Thaiyin Uruvaana – கருவிலே தாயின் உருவான

Karuvile Thaiyin Uruvaana
கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்

இரட்சித்தீரே கிருபையால்
காத்தீரே தயவினால்
மீட்டீரே இரத்தத்தால்
தூக்கினீர் இரக்கத்தால்
அன்பே தெய்வீக அன்பே
உம் அன்பை என்மேல்
ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான்

என் ஆசை நாயகா
இனிய மணவாளா
எப்போது உம்முகத்தை
நேரில் காண்பேனோ
ஏக்கமே என் எண்ணமே
நித்திய இல்லம் நோக்கி
தொடருகிறேன் – ஆராதிப்பேன் நான்

குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே
அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை
என்ன சொல்லி பாடிடுவேன் – ஆராதிப்பேன் நான்

17 thoughts on “Karuvile Thaiyin Uruvaana – கருவிலே தாயின் உருவான

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *