Koda Kodi Sthothiram – கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி

Koda Kodi Sthothiram
பல்லவி
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே

அனுபல்லவி
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன்

1. பாவியை மீட்க பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏது முண்டோ? – பூவுலகில்

2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங்கொண்டாலும்
தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே – எந்தனுக்காய்

3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடு வராது காக்கும் நம் மீட்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் – இறையவனை

4. தாவீது கோத்திர சிங்கமாய்வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்துக்கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் – நித்தியமாய்

5. குயவனின் கையில் களிமண்ணைப்போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா – ஏழையென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *