Motcha Yaathirai Selkirom – மோட்ச யாத்திரை செல்கிறோம்

Motcha Yaathirai Selkirom

மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள் – இம்மாய லோகம்
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்த செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்

ஆனந்தமே ஆ அனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

1. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே

2. ஆள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்

3. மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்

4. கர்த்தர் என் அடைக்கலம் கவலை
இல்லையே – இக்கட்டு துன்ப
நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்

5. ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
எக்காள தொனியுடன் வருகிறார்

Motcha Yaathirai Selkirom
Meloga Vaasikal – Immaaya Logam
Thaandiyae Em Veedu Thontuthae
Kadantha Selkirom Karaiyin Oramae
Kaathirunthu Raajyam Kandadaivom

Aananthamae Aa Ananthamae
Aandavarudan Naam Endrum Aaluvom
Aathi Murpithaakalodu Thootharumaai
Aarparipudan Koodi Vaaluvom

1. Sathiya Suvisesham Eduththuraiththumae – Tham
Niththiya Raajya Makkalai Aayaththamaakkavae
Thaesamengumae Alainthu Selkirom
Naesar Yesu Vaakkuraikal Nampiyae

2. Aalli Thoovidum Vithai Sumanthu Selkirom Tham
Annal Yesuvin Samugam Munnae Selluthae
Kanneer Yaavumae Kadaisi Naalilae
Kartharae Thudaithu Emmai Thaetruvaar

3. Megasthambam Agini Velicham Kaatiyae
Nal Aekamaai Vanaanthira Vali Nadathuvaar
Ilakkai Nookiyae Thavaridaamalae
Ippuvi Kadanthu Akkarai Servom

4. Karthar En Ataikalam Kavalai
Illaiyae – Ikattu Thunba
Naeramo Kalakamillaiyae
Kastam Neekuvaar Kavalai Pokuvaar
Kaividaamal Nithamum Nadathuvaar

5. Aaravaarathodemmai Alaithu Sendrida Tham
Aavalodu Vaanilae Thootharkal Soolnthida
Kaakka Vallavar Nal Vaakuraithavar
Ekkaala Thoniyudan Varukiraar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *