Parisutha Janamaai Ennaiyum
பரிசுத்த ஜனமாய் என்னையும் தெரிந்தெடுத்தீர்
எல்லா ஜனம் பார்க்கிலும் சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)
பாடுவேன் நான் இயேசுவையே
துதிப்பேன் நான் தேவனையே (2)
என்னோடு பாடுங்கள் அல்லேலுயா
எல்லோரும் பாடுவோம் அல்லேலுயா அல்லேலுயா (2)
இயேசுவே என் புகழ்ச்சி
என் உள்ளத்தின் மகிழ்ச்சி
இகழப்பட்ட என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)
கீர்த்தியும் புகழ்ச்சியும்
உண்டாகச்செய்வீர் நிச்சயம்
நீதிமானாய் என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)
மகிபனின் புகழையே
அனுதினம் நான் பாடுவேன்
மகிமையாய் என்னையும்
ஜொலித்திருக்கப்பண்ணுவீர் (2)