Sathurvin Kootaiyai
சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய
யூதா முதலில் செல்லட்டுமே
நம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரிய
துதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே
யூதாவின் செங்கோல்
துதியின் ஆளுகை
நம் தேவனின் ராஜ்யம்
என்றும் துதியின் ராஜ்யம்
யூதாவே நீ எழுந்து துதி
தேவ சமூகம் உன்னோடுதான்
துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய்
துதி அபிஷேகம் உன்னோடு தான்
யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும்
உன் கரமும் சத்துருவின் பிடரியின் மேல் இருக்கும்
சமாதானத்தின் தேவனவர்
உன்னை விட்டு நீங்கமாட்டார்
ஜாதிகளும் ஜனங்களுமே
உன்னிடத்தில் சேர்த்திடுவார்