All Songs by david

Valibane Kanikaye – வாலிபனே கன்னிகையே

Valibane Kanikaye
வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!

1. நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரே
புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
சோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதே
சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே

2. ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதே
ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
தீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதே
தீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே

3. சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதே
சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதே
கடமையினை மறந்து விட்ட தாவீதை போல
கணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே

4. பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதே
தோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதே
கர்த்தரை நீ மறந்து விட்டு காலம் தள்ளாதே
புத்தியில்லா கண்ணிகைப்போல் கதவைத் தட்டாதே

5. வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
இல்லையென்றால் இரட்சிப்பின்றி அழிந்திடுவாயே
காலம் இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே

Visuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று

Visuvasa Kappal Ondru
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)

1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

Sutham Panna Padatha – சுத்தம் பண்ணப் படாத

Sutham Panna Padatha
சுத்தம் பண்ணப் படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே ..
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

1. பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள் (2)
எதிர் காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் (2)

2. தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள் (2)
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் செய்திடுங்கள் (2)

3. வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் (2)
பாவத்தை சுமக்கும் பாரதத்தில்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் (2)

Ootra Pada Vendume – ஊற்றப்பட வேண்டுமே

Ootra Pada Vendume

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – 2

எண்ணெய் அபிஷேகமே.. என் தலையை நனைக்க
ஆவியில் நிரப்புமே.. பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே.. நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம்.. எந்தன் ஆவல் தீர்த்திடும் (…ஊற்றப்பட)

1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – 2 (…எண்ணெய்)

2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – 2 (…எண்ணெய்)

3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் – 2 (…எண்ணெய்)

4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – 2 (…எண்ணெய்)

5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – 2 (…எண்ணெய்)

Oottrappada Vendume Unnathaththin Aavi
Uyirppikka Vendum Emmai Devaa
Munmaariyaaga Andru Pozhinthitta Aaviyai
Pinmaariyaaga Indru Pozhinthidume – 2

Yennai Abishegame.. En Thalaiyai Nanaikka
Aaviyil Nirappume.. Paaththiram Vazhinthodum
Neechchal Aazham Moozhgiye.. Nesar Anbil Magizha
Akkini Abishegam.. Enthan Aaval Theerththidum (…Oottrappada)

1. Deva Mainthan Yesuvai Visuvaasiththom
Bhothikkum Aaviyaale Niraiththidume – 2 (…Oottrappada)

2. Jeba Venduthalile Thariththiruppom
Jegaththile Saatchiyaaga Emmai Niruththum – 2 (…Oottrappada)

3. Orumanathodu Koodi Vanthullom
Deva Puththirar En Muththirai Podum – 2 (…Oottrappada)

4. Jeeva Baliyaaga Emmai Oppuvikkirom
Sagala Saththiyaththilum Emmai Nadaththum – 2 (…Oottrappada)

5. Aaviyin Varangalai Arul Seyyum Devaa
Aaviyin Kanigal Endrum Eenthidave – 2 (…Oottrappada)

Meghangal Naduve – மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

Meghangal Naduve
1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

Galeeliya Kadaloram – கலிலேயா கடற்கரையோரம்

Galeeliya Kadaloram
கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே

Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர்

Anbarin Nesam
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய

1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய

3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய

4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய

5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய

Ithuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

Ithuvarai Seitha
இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )

1. உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)

2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)

3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே

Chinna Chittu Kuruviye
சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு …….
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
அழகாக படைச்சது யாரு

1. ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா

3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா – அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

4. ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல…ல…ல…ல…ல…ல…

Padago Padagu Kadalile – படகோ படகு கடலிலே

Padago Padagu Kadalile
படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே

1. வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே – படகோ

2. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே – படகோ