All Songs by david

Enakkagave Yavaiyum Seithu Mudither- எனக்காகவே யாவையும் செய்து

Enakkagave Yavaiyum Seithu Mudither
எனக்காகவே யாவையும்
செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும்
சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே

1. நான் எனது பிள்ளைக்கு
நல்ல ஈவைக் கொடுக்கிறேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும்
கொடுத்துடுவாரே (நினைப்பதற்கும்..)

2. அன்றாடம் வேண்டிய
ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல்
காக்கும் தேவனே (நினைப்பதற்கும்..)

3. ஆபிரகாமை அழைத்திரே
ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும்
ஆசிர்வதியும் (நினைப்பதற்கும்..)

Enakaagave Yaavaiyum
Seithu Mudiththeer
Nandri Nandri Aiyaa
En Paavangal Yaavaiyum
Sumanthu Kondeere
Nandri Nandri Aiyaa

Ninaippatharkum Jebippatharkum
Athigamaaga Tharupavare

1. Naan Enathu Pillaikku
Nalla Eevaik Kodukkindren
Parama Pidhaa Adhaippaarkkilum
Koduththuduvaare (Ninaippatharkum)

2. Andraadam Vendiya
Aakaaram Thaarume
Theemai Ennai Anukaamal
Kaakkum Devane (Ninaippatharkum)

3. Aabirakaamai Azhaiththire
Aasirvaatham Koduththeere
Athu Pola Ennaiyum
Aasirvathiyum (Ninaippatharkum)

En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும்

En Janagal Oru Pothum
என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
எதிரிகள் உன்னை துரத்தினாலும்
உன்னோடு கூட நான் இருப்பதனால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
பரிகாரியாய் நான் இருப்பதினால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
குறைவுகளால் மனம் கலங்கினாலும்
உனக்காக யாவையும் செய்திடுவேன்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

Santhosam Santhosam Santhosame – சந்தோஷம் சந்தோஷம்

Santhosam Santhosam Santhosame
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே

1. கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்

2. போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

Sandhoasham sandhoasham sandhoashamae
Paraloaga sandhoashamae
Sandhoasham sandhoasham sandhoashamae
Avar samoogathil sandhoashamae
Yaesuvin samoogathil sandhoashamae

1. Karththarin yuthdhathil naam nirkumpoadhu
Kalangida thaevaiyillai
Kaigalai uyarththi aaraadhiththaal
Perum vetriyai thandhiduvaar

2. Poaraattam paadugal nam vaazhvil vandhaalum
Soarndhidavae vaendaam
Ulagaththai jeyiththavar nammudan irukkaiyil
Jeyam jeyam jeyam namakkae

Appa Pithave Konjam Parunga – அப்பா பிதாவே கொஞ்சம்

Appa Pithave Konjam Parunga
அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
உன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க

1. காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயா
உன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்
வேறு எங்கிலும் போக மனசில்லப்பா
ஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும்

2. கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே
முழு மனசா வந்து முத்தமிட்டிங்க
பார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவே
பாச தந்தை எப்போதும் நீங்க தானே

3. ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயா
எல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்
காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவே
புரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே

Um Prasannam Nadi Vandean – உம் பிரசன்னம் நாடி

Um Prasannam Nadi Vandean
உம் பிரசன்னம் நாடி வந்தேன்
கிருபையினால் நோக்கிடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே

என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயம் அதில் ஆறுதலே
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே — என் இயேசுவே

2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே — என் இயேசுவே

Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே

Nandri Sollamal Irukkave

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன் – 2 (1)

1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் – 2
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் – 2 (…நன்றி சொல்லாமல்)

2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீரைய்யா – 2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை
வாழ வைத்தீரையா – 2 (…நன்றி சொல்லாமல்)

3. தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் – 2
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் – 2 (…நன்றி சொல்லாமல்)

Nandri Sollaamal Irukkave Mudiyaathu
Pala Nanmai Seytha Yesuvukke
Nandri Nandri Nandri Endru Solli Naan Thuthippen
Naalthorum Pottruven – 2 (1)

1. Eththanaiyo Nanmaikalai En Vaazhvil Seythaare
Yeraalamaay Nandri Solven – 2
Aththanaiyum Ninaiththu Ninaiththu Naan Thuthippen
Aandavarai Pottruven – 2 (…Nandri Sollaamal)

2. Marana Pallaththaakkil Naan Nadakkum Pothellaam
Paathukaaththeer Aiyaa – 2
Meendum Jeevanai Koduththu Neer Ennai
Vaazha Vaiththeeraiyaa -2 (…Nandri Sollaamal)

3. Devan Aruliya Solli Mudiyaatha
Eevukalukkaay Sthoththiram – 2
Alavillaa Avarin Kirupaikalukkaay
Aayul Muzhuthum Sthoththiram – 2 (…Nandri Sollaamal)

 

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்

Nadaka Solli Thaarum
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம்

Kalvari Mamalai Oram
கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ….

1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையா உருக் குலைந்து சென்றனரே

2. சிலுவை தன் தோள் அதிலே சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார்
நிந்தனை நமக்காய் சகித்தார்

Kalvaari Maa Maalaiyoram
Kodunra Kaatchi Kandaen
Kannil Neer Valinthiduthae
Enthan Meetpar Yesu Atho

1. Yerusalaemin Veethikalil
Iratha Vellam Kolamida
Thirukolam Ninthanaiyaal
Urukulainthu Sentanarae

2. Siluvai Than Tholathilae
Sitharum Than Vaervaiyilae
Sirumai Adainthavaraai
Ninthanai Nammakai Sakithaar

Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு

Ummai Pol Yarundu
உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா
இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் — உம்மைப்

1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்
அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான்

2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும்

3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும்

Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ

Nenje Nee Kalanguvatheno
நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)
நெஞ்சே நீ தவிப்பதேனோ …
ஒரு கணம் கூட உன் சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை

1. தளர்ந்திடும் போது தாங்கிடும்
தூயவர் தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போது காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார்( 2)
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார்
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்