All Songs by david

Magilvoom Magilvoom – மகிழ்வோம் மகிழ்வோம்

Magilvoom Magilvoom
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்

பல்லவி
ஆஆ…. ஆனந்தமே
பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே

1. சின்னச்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
“ஜீவன் பெற்றுக்கொள்” என்றுரைத்தார்

2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொருப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

3. அவர் வரும் நாளிலே என்னைக் கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார்
அவர் சமூகமத்தில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

1. Magilvoom Magilvoom
thinam agamagilvoom
Yesu raja nam sonthamaginaar
Intha paarthalathil sonthakararavar
enthan ullathil sonthamanar

Ha aanathanmay paramanathamay
ithu maa perum bakkiyamay – intha

2. Chinnam cheruvayathil
ennai kurithuvittar
Thuram poyenum kandukondar
Thamathu jeevanai enakum alithu
Jeevan petrukkol endruraithar

3. Yentha sulnilaiyum avaar anbinindru
Ennai pirikaathu kathukolvar
Ennai nambiavar thantha poorupathanai
Avar varum varai kathu kollven

4. Avar varum nallilae ennai karam asaithu
anbaai kupituu seirthukolvar
Avar samugamathil angay aavarudanay
aadi paadiyay magilthiduven

Enakku Othasai Varum – எனக்கொத்தாசை வரும்

Enakku Othasai Varum
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்

1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்

2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே

3. என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே

4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே

5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்

Enakkoththaasai varum parvatham naeraai
En kangalai aeredupaen

1. Vaanamum boomiyum padaiththa
Valla dhaevanidamirundhae
Ennukkadangaa nanmaigal varumae
En kangal aeredupaen

2. Malaigal peyarnthagandridinum
Nilaimaari puviyagandridinum
Maaridumoa avar kirubai ennaalum
Aarudhal enakkavarae

3. En kaalai thallaada vottaar
Ennai kaakkum dhaevan urangaar
Isravaelai kaakkum naldhaevan
Raappakal urangaarae

4. Valappakkaththin nizhal avarae
Vazhuvaamal kaappavar avarae
Sooriyan pagalil chanthiran iravil
Saedhappaduththaadhae

5. Eththeengum ennai anugaamal
Aaththumaavai kaakkumen dhaevan
Poakkaiyum varaththaiyum paththiramaaga
kaappaarae ithu mudhalaai

Siluvaiyo Anbin Sigaram – சிலுவையோ அன்பின்

Siluvaiyo Anbin Sigaram
சிலுவையோ அன்பின் சிகரம்
சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர்

1. கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பை
எண்ணி என்ன சொல்லிடுவேன்

உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்

2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

3. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
நீர் செய்த நன்மை யாவும் என்றும் நினைத்திடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

Yenathu Ullam Yaruku – எனது உள்ளம் யாருக்கு

Yenathu Ullam Yaruku
எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்

என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே – இயேசையா

1. அன்னை தந்தை அறியவில்லையே – என்
உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்
உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது

2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது

3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
என் உள்ளம் நொந்து சோகமானது
என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே

Ummaiyallamal Enakku Yarundhu – உம்மை அல்லாமல் எனக்கு

Ummaiyallamal Enakku Yarundhu
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு – 4
என் இயேசையா அல்லேலூயா – 4

1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே – 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2

2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே – 2
என் எல்லாமே ஐயா நீர் தானே – 2

3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே – 2
எந்நாளுமே ஐயா நீர்தானே – 2

Isravelin Rajave – இஸ்ரவேலின் ராஜாவே

Isravelin Rajave
இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே – (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

1. திருக்கரம் என்னை தாங்கி
கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதற்கு
பலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே

2. எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே

3. என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே

Isravaelin Raajaavae
En dhaevanaam kartharae
Naan ummai vaazhthugiraen
Nanmaigal ninaikiraen

Yaesuvae – (4)
Nandri nandri naadhaa
Alavillaa anbirkaaga

1. Thirukaram ennai thaangi
Kadum pratchanaigalilum
Munnaeri selvadharku
Belathai neer thandhadharkaai – Yaesuvae

2. Edhirkiravar munbilum
Thallinavar matthiyil
Pandhi aayathappaduthi
Anbaaga ganam pannineer – Yaesuvae

3. Enna naan seluthiduvaen
Aayiram paadalgaloa
En uyir kaalam muzhudhum
Ratchippai uyarthiduvaen – Yaesuvae

Ennai Jenippithavarum – என்னை ஜெனிப்பித்தவரும்

Ennai Jenippithavarum
என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னைப் பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே

கண்மலையே கண்மலையே – 2
உமக்கே ஆராதனை – 4

1. தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவே இல்லாத உண்மையான அன்பு – 2
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மறித்தீரே – 2
எனக்காக உயிர்த்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

2. என் மேல் கிருபை வைத்து இரட்சிப்பைத் தந்தவரே
இதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா – 2
என் மேலே அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை -2
நித்திய ஜீவனை தந்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

3. உமக்கு நிகரான தெய்வம் ஒன்றும் இல்லையப்பா
அகில உலகத்திற்கும் ஆண்டவரும் நீர் தானே – 2
முடிவில்லா இராஜியத்தை
அரசாலும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் – 2
நித்திய மகிழ்ச்சியே நீர் தானே – 4
உமக்கே ஆராதனை – 4

Ennai jenippithavarum neerthaanae
Ennai petreduthavarum neerthanae
Enakku paeru vachavarum neerthaanae
Ennai valarthavarum neerthaanae

Kanmalayae kanmalaiyae – 2
Umakkae aaradhanai – 4

1. Thaayin anbilum maelaana anbu
Alavae illadha unmaiyaana Anbu – 2
Enakkaaga adikkappatteer
Enakkaaga norukkappatteer
Naan vaazha maritheerae – 2
Enakkaaga uyrittheerae – 4
Umakkae aaradhanai – 4

2. En mel Kirubai vaithu ratchippai thandhavarae
Idharkku eedu inai boomiyilae illaiyappaa – 2
En Melae anbu vaiththu
Parigaaram seidheerae
Paavamillai maranamillai – 2
Nithiya jeevanai thandheerae – 4
Umakkae aaradhanai – 4

3. Umakku nigaaraana dheivam ondrum illayappaa
Agila ulagathirkkum aandavarum neerthaanae -2
Mudivillaa raajiyathai
Arasaalum dheivam neerae
Kanneerellam thudaithiduveer – 2
Nithiya Magizhchiyae neerthaanae -4
Umakkae aaradhanai – 4

Enni Enni Thuthi Seivai – எண்ணி எண்ணி துதிசெய்வாய்

Enni Enni Thuthi Seivai

எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே – 2

1. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ – 2
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் – 2 (…எண்ணி)

2. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே – 2
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர் – 2 (…எண்ணி)

3. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே – 2
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே – 2 (…எண்ணி)

4. சோர்ந்திடும் நேரத்தில்
சார்ந்திட தேவன் உண்டே – 2
உலகத்தில் இருப்பவனிலும்
உன்னில் இருப்பவர் பெரியவரே – 2 (…எண்ணி)

5. ஓட்டத்தை முடித்திட
கிரீடத்தை சூடிட – 2
உதவிடுவார் உயர்த்திடுவார்
உந்தன் கண்ணீர் மாறிடுமே – 2 (…எண்ணி)

Enni Enni Thuthi Seivaai
Ennadangaatha Kirubaigatkaai
Indrum Thaangum Tham Puyame
Inba Yesuvin Naamame

1. Yorthaan Purandu Varumpol
Ennattra Paarangalo – 2
Eliyaavin Devan Enge
Unthan Visuvaasa Sothanaiyil – 2 (…Enni)

2. Unak Kethiraagave
Aayutham Vaaikaathey – 2
Unnai Azhaithavar Unmai Devan
Avar Thaasarku Neethiyavar – 2 (…Enni)

3. Unnai Nokkum Yethiriyin
Kannin Munnil Patharaathe – 2
Kanmani Pol Kaakkum Karangalil
Unnai Moodi Maraiththaare – 2 (…Enni)

4. Sornthidum Neraththil
Saarnthida Devan Unde – 2
Ulagaththil Iruppavanilum
Unnil Iruppavar Periyavare – 2 (…Enni)

5. Ottaththai Mudiththida
Kreedaththai Soodida – 2
Udhaviduvaar Uyarththiduvaar
Unthan Kanneer Maaridume – 2 (…Enni)

Megangaludane Varugiraar – மேகங்களுடனே வருகிறார்

Megangaludane Varugiraar
மேகங்களுடனே வருகிறார்
கண்கள் யாவும் அவரைக் காணும்
குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
கோத்திரங்கள் பார்த்து புலம்பும் (2)
வருகிறார் வருகிறார் வருகிறார்
இயேசு வருகிறார்
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)

1. இருந்தவரும் இருக்கின்றவரும்
வருபவரும் சர்வ வல்லவர் (2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (2)
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
– மேகங்களுடனே

2. அல்பாவும் ஒமேகாவும்
ஆதியும் அந்தமுமானவர் (2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (2)
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
– மேகங்களுடனே

3. முந்தினவரும் பிந்தினவரும்
மரித்தவரும் உயிரோடிருக்கிறார் (2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (2)
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
– மேகங்களுடனே

Maegangaludanae varugiraar
Kangal yaavum avarai kaanum
kutthinavargal avarai kaanbaargal
Koatthirangal paarthu pulambum (2)
Varugiraar varugiraar varugiraar
Yaesu varugiraar
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (2)

1. Irundhavarum irukkindravarum
Varubavarum sarva vallavar (2)
Yaesuvae umakae magimai
Raajanae umakae magimai (2)
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (2)
– Maegangaludanae

2. Alphaavum omegaavum
Aadhiyum andhamumaanavar (2)
Yaesuvae umakae magimai
Raajanae umakae magimai (2)
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (2)
– Maegangaludanae

3. Mundhinavarum pindhinavarum
Maritthavarum uyiroadirukkiraar (2)
Yaesuvae umakae magimai
Raajanae umakae magimai (2)
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (2)
– Maegangaludanae

Yesu Nallavar Paattu Paadungal – இயேசு நல்லவர் பாட்டு

Yesu Nallavar Paattu Paadungal
இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)
ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்
ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் (2)
இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)

1. இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்
அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் (2)
மனதுருக்கம் நிறைந்தோரவர்
மன்னிப்பில் தயை பெருத்தோரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

2. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்
அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் (2)
உலகெங்கும் சென்றிடுங்கள்
ஊரெங்கும் சொல்லிடுங்கள் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

3. சாத்தானை சிலுவை மீதில் ஜெயித்தாரவர்
சாவின்று முற்றுமாய் ஒழித்தாரவர் (2)
பாதாள வல்லமைகள்
பரிகரிக்க பிறந்தாரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்