Jeevanulla Naatkalellaam
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதை
அவருக்கு கொடுத்திடுவோம் (2)
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக நாம் வாழ்ந்திடுவோம் (2) – ஜீவனுள்ள
1. இயேசுவும் தனக்காய் வாழாமல் – அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்கு தந்தாரே
இதற்கு பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள
2. ஊழியம் செய்வது பாக்கியமே – அதின்
பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஓர் நாள் வந்திடுவாரே
அன்று இதன்பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம் – ஜீவனுள்ள
3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன – நான்
நலமாயிருந்தால் அது போதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ இன்றே வா – ஜீவனுள்ள
4. உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்றும்
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள
Jeevanulla naatkalellaam
Yaesuvukaai vaazhvoam
iruppadhuvoa oru vaazhvu – adhai
Avarukku koduthiduvoam (2)
Vaazhndhiduvoam naam vaazhndhiduvoam
Yaesuvukaaga naam vaazhndhiduvoam (2) – Jeevanulla
1. Yaesuvum thanakkaai vaazhaamal – avar
Namakkaai thaanae vaazhndhaarae
Uyiraiyum kooda namakku thandhaarae
Idharku badhilaai enna seivoamae
Naamum vaazhndhiduvoam yaesuvukaai – Jeevanulla
2. Oozhiyam seivadhu baakkiyamae – adhin
Palanoa indru naam ariyoamae
Kartthar oar naal vandhiduvaarae
Andru idhanpalan kondu varuvaarae
Kandu magizhndhiduvoam thalliduvoam – Jeevanulla
3. Yaaroa seiyattum enakkenna – naan
Nalamaayirundhaal adhu poadhum
Endrae suyamaai vaazhvadhinaalae
Pinnaal neeyum varunthiduvaayea
Endru unarvaayoa indrae vaa – Jeevanulla
4. Ulagathaiyae sondhamaakkinaalum
Adhinaalae laabam ondrumillaiyae
Yaesuvukaai nee edhai seidhaayoa
Adhuvae unakku udhavidumendrum
Oayaadhu uzhaithiduvoam yaesuvukaai – Jeevanulla