All Songs by david

Mesiyaa Thaan Porandhaachu – மேசியா தான் பொறந்தாச்சு

Mesiyaa Thaan Porandhaachu
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே
பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)
தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்
பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (2)
பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -2

மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)

Piranthar Piranthar Kiristhu – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து

Piranthar Piranthar Kiristhu
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க

1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார்

2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார்

2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள் – பிறந்தார்

For song Piranthar Piranthar Vanavar

Amaithiyan Naliravu – அமைதியான நள்ளிரவு – Silent Night

Amaithiyan Naliravu – Silent Night
1. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்

2. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்

3. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்

Daiva Sneham Varnichidan – ദൈവസ്നേഹം വര്‍ണ്ണിച്ചീടാന്‍

Daiva Sneham Varnichidan Vakkukal Pora
ദൈവസ്നേഹം വര്‍ണ്ണിച്ചീടാന്‍ വാക്കുകള്‍ പോരാ
നന്ദി ചൊല്ലിത്തീര്‍ക്കുവാനീ ജീവിതം പോരാ
കഷ്ടപ്പാടിന്‍ കാലങ്ങളില്‍ രക്ഷിക്കുന്ന സ്നേഹമോര്‍ത്താല്‍

എത്ര സ്തുതിച്ചാലും മതി വരുമോ? (ദൈവസ്നേഹം..)

1. സ്വന്തമായൊന്നുമില്ല സര്‍വ്വതും നിന്‍ ദാനം
സ്വസ്തമായുറങ്ങീടാന്‍ സമ്പത്തില്‍ മയങ്ങാതെ
മന്നിന്‍ സൌഭാഗ്യം നേടാനായാലും
ആത്മ നഷ്ടമായാല്‍ ഫലമെവിടെ? (ദൈവസ്നേഹം..)

2. സ്വപ്നങ്ങള്‍ പൊലിഞ്ഞാലും ദുഃഖത്താല്‍ വലഞ്ഞാലും
മിത്രങ്ങള്‍ അകന്നാലും ശത്രുക്കള്‍ നിരന്നാ‍ലും
രക്ഷാകവചം നീ മാറാതെന്നാളും
അങ്ങെന്‍ മുന്നേ പോയാല്‍ ഭയമെവിടെ? (ദൈവസ്നേഹം..)

Daiva Sneham Varnichidan Vakkukal Pora
Nandhi cholli theerkuvanee jeevitham pora
Kashtappadin kaalangalil
Rakshikkunna snehamorthal
Ethra sthuthichaalum mathivarumo…

Daivasneham varnicheedan vakkukal pora…..

1. Swanthamaayonnumilla Sarvathum nin daanam
Swasthamaayurangeedaan Sambathil mayangaathey
Mannil saubhagyam nedanaayaalum
Athmanashtamaayaal bhalamevidey (Daivasneham…)

2. Swapnangal polinjaalum Dukhathaal valnjaalum
Mithrangal akannalum Shathrukkal nirannalum
Rakshakavacham nee maaraathennalum
Angen munpe poyaal bhayamevidey (Daivasneham…)

Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து

Samathanam Othum Yesu
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர்

2. நேய கிருபையின் ஓர் சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர்

3. ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே

5. மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

Seer Thiree Yega Vasthe – சீர்திரியேக வஸ்தே நமோ

Seer Thiree Yega Vasthe
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !

பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்

1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத்
தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ !
சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய்
சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய்
எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார்

2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற‌
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார்

3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர் – பார்

ஆகமங்கள் புகழ் தேவா நமோ நமோ !
வாகு தங்கு குருநாதா, நமோ நமோ !
சருவ லோகாதிபா, நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம் !

Paadi Thuthi Maname – பாடித் துதி மனமே

Paadi Thuthi Maname

பாடித் துதி மனமே, பரனைக்
கொண்டாடித் துதி தினமே

அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்- பாடி

சரணங்கள்
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து – பாடி

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக – பாடி

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள், இரத்த சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி

Paadi Thuthi Maname
paranai kondaadi thuthi manamae

Neediththa kaalamathaaka paran emai
Nesiththa patchathai vaasiththu vaasiththu – Paadi

1. Theerkka tharisikazhlai kondu munnura
Seppina thaevaparan yintha kaalaththil
Maarkkamathaaka kumaaranai kondu
Vizhlakkina anpai vizhlainthu thiyaaniththu – Paadi

2. Sontha janamaaka yoothar yirunthida
Tholaiyil kidantha puramaantharaam emai
Manthaiyil saerththu paraaparan thammudai
Maintharkazhlaakkinae santhoshaththukaaka – Paadi

3. Eththanai theerkkar, anaeka apposthalar,
Eththanai pothakarkazhl, yiraththa saatchikazhl,
Eththanai vendumo, aththanaiyum thanthinku
Yiththanaiyaai kirupai vaiththa nam karthanai – Paadi

Ayan Yesu Kuda Iruka – ஆயன் இயேசு கூட இருக்க

As the shepherd Jesus is with me
I have no worries
He walks with me holding my hands
I do not need anyone

1. He will take me
to the still waters
Lord will give me
green grass everyday

2. I have no fear for darkness
No fear of enemies
His rod and staff is
Forever for me

ஆயன் இயேசு கூட இருக்க
எனக்கு கவலையில்ல 
கையப் புடிச்சுக் கூட நடக்க
யாரும் தேவையில்ல (2)

1. அமைதி நீர் நிலைக்கு என்னை
அழைத்துச் சென்றிடுவார் 
பசும்புல் தினம் எனக்கு
பரமன் தந்திடுவார் – ஆயன்

2. இருட்டு பயமில்ல எனக்கு
எதிரி பயமில்ல 
கோலும் கைத்தடியும் எனக்கு
காலமும் இருக்கும் – ஆயன்
Ayan Yesu Kuda Iruka

Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

Arparipom Innanaalil
ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
கிறிஸ்தேசு ஜனித்ததால்
வின் மன்னோரும் எவ்வான்மாவும்
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் என்றென்றும் பாடிடவே

1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
நம் மீட்பர் ஜனித்ததால்
வான் பூமியும் சிருஷ்டிகளும்
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே

2. உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்

Joy to the world song in tamil

Joy to the world

Joy to the world! The Lord is come
Let earth receive her King!
Let every heart prepare Him room

And heaven and nature sing
And heaven and nature sing
And heaven, and heaven and nature sing

Joy to the world! the Savior reigns
Let men their songs employ
While fields and floods
Rocks, hills and plains
Repeat the sounding joy
Repeat the sounding joy
Repeat, repeat the sounding joy

No more let sins and sorrows grow
Nor thorns infest the ground
He comes to make
His blessings flow
Far as the curse is found
Far as the curse is found
Far as, far as the curse is found

He rules the world with truth and grace
And makes the nations prove
The glories of His righteousness
And wonders of His love
And wonders of His love
And wonders and wonders of His love

Refer:
Joy to the world in Tamil – Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்