Song Category: Tamil

Thuthibaliyai Selutha – துதிபலியை செலுத்த

Thuthibaliyai Selutha
துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசய்யா
உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசய்யா (2)

நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் (2)
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே (2)

1. என்னிலே ஒன்றுமில்லை
ஆனாலும் நேசித்தீரே (2)
என்னிலே நன்மையில்லை
ஆனாலும் உயர்த்தினீரே (2)
தகப்பனைப் போல
என்னை சுமந்தீரைய்யா
ஒரு தாயைப் போல
என்னைத் தேற்றினீரே (2)
சுமந்தீரைய்யா தேற்றினிரே
சுமந்தீரைய்யா என்னை தேற்றினிரே

ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா

2. பிறந்த நாள் முதலாய்
தூக்கி எரியப்பட்டேன் (2)
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை (2)
பிழைத்திரு என்று
என்னை தூக்கினீரே
உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர் (2)
பிழைக்கச் செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
பிழைக்கச் செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர்

ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா

Thuthibaliyai selutha
Vandhoam Yaesaiyyaa
Ummai aaraadhikka
Koodi Vandhoam Yaesaiyyaa (2)
Neer uyarndhavar neer vallavar (2)
Indha ulagai aalum dheivam neerae (2)

1. Ennilae onrumillai
Aanaalum naesitheerae (2)
Ennilae nanmaiyillai
Aanaalum uyarthineerae (2)
Thagappanai poala
Ennai sumandheeraiyyaa
Oru thaayai poala
Ennai thaetrineerae (2)
Sumandheeraiyyaa thaetrineerae
Sumandheeraiyyaa ennai thaetrineerae

Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa

2. Pirandha naal mudhalaai
Thooki eriyappattaen (2)
Oru kannum enmaelae
Irakamaai irundhadhillai (2)
Pizhaithiru endru
Ennai thookkineerae
Um maganaagavae
Ennai aetrukondeer (2)
Pizhaika seidheer aetrukondeer
Pizhaika seidheer ennai aetrukondeer

Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa

Neer Thiranthaal Adaipavanillai – நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை

Neer Thiranthaal Adaipavanillai
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2)

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2)

1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்
பூமியில் இல்லையே (2)
பலவானின் வில்லை ஒடித்து
கீழேத் தள்ளுகிறார் (2)
தள்ளாடும் யாவரையும்
உயர்த்தி நிறுத்துகிறார் (2)
உயர்த்தி நிறுத்துகிறார் – இல்லை இல்லை

1. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்ப விடாமல்
கடலில் அழித்தவராம் (2)
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி (2)
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அனுகாது (2)
என்றும் அனுகாது – இல்லை இல்லை

2. தேவனைத் துதிக்கும் துதியாலே
எரிகோ விழுந்தது
பவுலும் சிலாவும் துதித்த போது
சிறையும் அதிர்ந்தது (2)
துதியாலே சாத்தானை
கீழேத் தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம் (2)
கொடியை ஏற்றிடுவோம் – இல்லை இல்லை

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) – இல்லை இல்லை

Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai (2)

Illai illai illai
En vaasalai adaippavan illai
Illai illai illai
Ennai ethirppavan boomiyil illai (2)

1. Kartharai poala parisuthamullavar
Boomiyil illaiyae
Kartharai poala vallamaiyu’l’lavar
Boomiyil illaiyae (2)
Balavaanin villai odithu
Keezhae thallugiraar (2)
Thallaadum yaavaraiyum
Uyarthi niruthugiraar (2)
Uyarthi niruthugiraar – Illai illai

2. Naasiyin suvaasathaal sengkadalai
Avar irandaai pilandhavaraam
Paarvoan saenaiyai thappa vidaamal
Kadalil azhithavaraam (2)
Marana irul soozhndhidum vaelaiyil
Paskaa aattukkutti (2)
Vaadhai engal koodaarathai
Endrum anugaadhu (2)
Endrum anugaadhu – Illai illai

3. Dhaevanai thudhikkum thudhiyaalae
Erigoa vizhundhadhu
Pavulum silaavum thudhitha poadhu
Siraiyum adhirndhadhu (2)
Thudhiyaalae saathaanai
Keezhae thalliduvoam
Thirandha vaasal nam munnae
Kodiyai aetriduvoam (2)
Kodiyai aetriduvoam – Illai illai

Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai (2) – Illai illai

Uyirththezhunthaare – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா

Uyirththezhunthaare
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே

1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்

2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்

3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்

4. மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெய மெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்

5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
அல்லேலுயா துதி சாற்றிடுவோம் – உயிர்

6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே – உயிர்

Uyirthezhundhaarae allaelooyaa
Jeyithezhundhaarae
Uyirudan ezhundha meetpar yaesen
Sondhamaanaarae

1. Kallarai thirandhidavae
Kadum saevagar payandhidavae
Vallavar yaesu uyirthezhundhaarae
Valla pidhaavin seyalidhuvae – Uyir

2. Marithavar mathiyilae
Jeeva dhaevanai thaeduvaaroa?
Needhiyin adhibadhi uyirthezhundhaarae
Nithiya nambikkai perugidudhae – Uyir

3. Emmaa voor seeshargalin
Ellaa mana irul neekkinaarae
Emmana kalakkangal neenginadhaalae
Ellaiyillaa paramaanandhamae – Uyir

4. Maranamun koor engae?
Paadhaalamun jeyam engae?
Saavaiyum noayaiyum paeyaiyum jeyithaar
Sabaiyoarae thudhi saatriduvoam – Uyir

5. Aaviyaal indrum endrum
Aa emmaiyum uyirppikkavae
Aaviyin achaaram enakkalithaarae
Allealuyaa thudhi saatriduvoam – Uyir

6. Parisuthamaaguthalai
Bayathoadendrum kaathukkolvoam
Ekkaalam dhonikkaiyil maruroobamaaga
Ezhumbuvoamae magimaiyilae – Uyir

Thuya Thuya Em Yesu Natha – தூயா தூயா எம் இயேசு நாதா

Thuya Thuya Em Yesu Natha
தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

1. விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மாபெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம் – தூயா தூயா

2. சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
சாத்தானைத் தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம் – தூயா தூயா

3. மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம் – தூயா தூயா

Thooyaa thooyaa em yaesu naadhaa
Um naamam vaazhtha perukg
Thudhigalin paathirarae
Thudhigal umakku thandhoam

1. Vin thurandheer mannil vandheer
Maaperum anballavoa
Paavam sumandheer saabamaaneer
Paadham panindhiduvoam – Thooyaa Thooyaa

2. Saavai vendreer uyirthu ezhundheer
Saathaanai thoarkaditheer
Nithiya vaazhvai emakku thandheer
Nittham thozhuthiduvoam – Thooyaa Thooyaa

3. Meendum varuveer mannil nirpeer
Maarboadu anaithiduveer
Mangaa vaazhvai emakku tharuveer
Mannaa thozhuthiduvoam– Thooyaa Thooyaa

Vaalnaalelaam Kalikurnthu – வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

Vaalnaalelaam Kalikurnthu
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

Appa Naan Enna Seiya Vendum – அப்பா நான் என்ன செய்ய வேண்டும்

Appa Naan Enna Seiya Vendum
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)
அருளும் அருளும் அருளும் கரத்தால்
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)

1. உம் வேலை செய்வதுக்காசை
உமக்காக நிற்பது வாஞ்சை (2)
உம் சித்தம் என்னடைக்கலமாய்
நீர் எனக்கு உயிருக்கு உயிராய் (2) – அப்பா

2. உன் ஜீவன் எனக்காக தந்தீர்
உம் இரத்தம் எனக்காக சிந்தி (2)
என் ஜீவ நாள் முழுவதும் நான்
உமக்காக ஸ்தோத்திரம் செய்வேன் (2) – அப்பா

Appaa naan enna seiya vaendum
Appaa naan engu sella vaendum (2)
Arulum arulum arulum karathaal
Appaa naan enna seiya vaendum
Appaa naan engu sella vaendum (2)

1. Um vaelai seivadhukaasai
Umakkaaga nirpadhu vaanjai (2)
Um sitham ennadaikkalamaai
Neer enakku uyirukku uyiraai (2) – Appaa

2. Un jeevan enakkaaga thandheer
Um rattham enakkaaga sindhi (2)
En jeeva naal muzhuvadhum naan
Umakkaaga sthoathiram seivaen (2) – Appaa

Ellam En Yesuve – எல்லாம் என் இயேசுவே

Ellam En Yesuve
எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே
புதிதாய் என் ஜீவியம் மாற்றுகின்றார்
எனக்கெல்லாம் இயேசுவே
எனக்கென்றுமே

He is my everything He is my all
He is my everything Both great and small
He makes my life complete Makes everything new
He is my everything Now how about you?

Ellam En Yaesuvae Ellam Avarae
Sirithum Perithayinum Ellam Avarae
Puthithai En Jeeviyam Marrukinrar
Enakkellam Yaesuvae
Enakkenrumae

Appa Neenga Seidha Nanmai – அப்பா நீங்க செய்த நன்மை

Appa Neenga Seidha Nanmai
அப்பா நீங்க செய்த நன்மை

அது கோடி கோடி உண்டு (2)
நினைத்து பார்க்கும் உள்ளம்

அது எனக்கு இல்லையே

நினைத்து பார்க்கும் உள்ளம்

அது எனக்கு வேண்டுமே

1.பாவங்கள் செய்து மரித்தேன்

ஆனால் ஜீவனைத் தந்தீரே

பாவங்கள் இருந்த இடத்தில்

உம் கிருபை வைத்தீரே (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

தாரும் தேவனே (2) – அப்பா

2. நன்மைகள் என்னிடம் இல்லை

ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்

நான் உம்மை நினைக்கவில்லை

ஆனால் நீர் என்னை நினைத்தீரே (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

தாரும் தேவனே (2) – அப்பா

3. ஏழை என்னை நினைத்து

ஆசீர்வதித்தீரே

கரம் பிடித்து அன்பாய்

நடத்திச் சென்றீரே (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

தாரும் தேவனே (2) – அப்பா

Appaa neenga seidha nanmai

Adhu koadi koadi undu (2)
Ninaithu paarkkum ullam 

Adhu enakku illaiyae 

Ninaithu paarkkum ullam

Adhu enakku vaendumae

1.Paavangal seidhu marithaen

Aanaal jeevanai thandheerae 

Paavangal irundha idathil

Um kirubai vaitheerae (2)
Nanri solla oar ullam thaevai 

Thaarum dhaevanae (2) – Appaa

2. Nanmaigal ennidam illai

Aanaal nalladhai seiya vaitheer

Naan ummai ninaikkavillai

Aanaal neer ennai ninaitheerae (2)
Nanri solla oar ullam thaevai 

Thaarum dhaevanae (2) – Appaa

3. Aezhai ennai ninaithu

Aaseervadhitheerae 

Karam pidithu anbaai 

Nadathi sendreerae (2)
Nanri solla oar ullam thaevai 

Thaarum dhaevanae (2) – Appaa

Thanjavuru Bomma – தஞ்சாவூரு பொம்ம

Thanjavuru Bomma
தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம
நான் இயேசுசாமி செஞ்சி வச்ச
பொம்ம ஏ பொம்ம
பூமிகூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம
நம்ம இயேசுசாமி செஞ்சி வச்ச
பொம்ம ஓ பொம்ம
ஒடி ஒடி வாங்க எல்லாம் ஒன்னு சேருவோம்
ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம்
எட்டுத் திக்கும் பாடி மகிழ்வோம்
எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சி உள்ளவர – தஞ்சாவூரு

1. காத்துக்கு காய்ச்சல் வந்தா தூங்கிடுமோ எப்போதும்
தூங்கினால் இந்த பூமி என்னாகும் என்னாகும்
இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதும் இல்லையே
அவரின்றி நம்மைக் காக்க வேறு யாரும் இல்லையே
புரியாத எல்லோருக்கும் அடையாளம் காட்டுவார்
தன்னைத்தான் மாற்றிக்கொள்ள வழி தன்னை தந்து
உன்னைக் காத்திடுவார் வாழ்வை உயர்த்திடுவார்
அன்பை பொழிந்திடும் என் இயேசுவே – தஞ்சாவூரு

2. நிலவுக்கு திரையைப் போட்டா என்னாகும் என்னாகும்
இரவுக்கே தூக்கம் கெட்டு திண்டாடும் திண்டாடும்
தேவனை பாடாவிட்டால் என்னாகும் என்னாகும்
வாழ்கின்ற இந்த வாழ்க்கை பொய்யாகும் பொய்யாகும்
அறியாத அன்பனுக்கு கருணைத்தான் காட்டுவார்
அறிவித்தால் பாவம் தன்னைப் போக்கிடுவார்
என்றும் போற்றிடுவோம் உம்மில் நிலைத்திடுவோம்
அன்பின் வடிவான என் தேவனே – தஞ்சாவூரு

Thanjaavooru bomma thalaiyaattum bomma
Naan yaesusaamy senju vacha
Bomma ae bomma
Boomikooda bomma koalgal ellaam bomma
namma iyeasusaami chegnsi vacha
Bomma o bomma
Oadi oadi vaanga ellaam onnu saeruvoam
Aadippaadi naalum avar naamam thudhippoam
Ettu thikkum paadi magizhvoam
Ellaam valla yaesu thandha indha moochi ullavara – Thanjaavooru

1. Kaathukku kaaichal vandhaa thoongidumoa eppoadhum
Thoonginaal indha boomi ennaagum ennaagum
Israelai kaakkum dhaevan thoonguvadhum illaiyae
Avarindri nammai kaakka vaeru yaarum illaiyae
Puriyaadha elloarukkum adaiyaalam kaattuvaar
Thannaithaan maatrikkolla vazhi thannai thanthu
Unnai kaathiduvaar vaazhvai uyarthiduvaar
Anbai pozhindhidum en yaesuvae – Thanjaavooru

2. Nilavukku thiraiyai poattaa ennaagum ennaagum
Iravukkae thookkam kettu thindaadum thindaadum
Dhaevanai paadaavittaal ennaagum ennaagum
Vaazhgindra indha vaazhkkai poiyaagum poiyaagum
Ariyaadha anbanukku karunaithaan kaattuvaar
Arivithaal paavam thannai poakkiduvaar
Endrum poatriduvoam ummil nilaithiduvoam
Anbin vadivaana en dhaevanae – Thanjaavooru

Thunbam Unnai – துன்பம் உன்னை

Thunbam Unnai
துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்

பல்லவி
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி

2. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்