1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்
தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ !
சொந்தக் குமாரன் தந்தாய்
சொல்லரும் நலமீந்தாய்
எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார்
2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார்
அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்- பாடி
சரணங்கள்
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து – பாடி
2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக – பாடி
3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள், இரத்த சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி
Anbu Koorven Indru Ummil
அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் நான் ஆத்ம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் உம் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை
நாளும் எனதுள்ளம்
நன்றி மிகுந்து பொங்க 2..
1. ஓ..! என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலையீந்தீர் என்னை மீட்க
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை
நாளும் எனதுள்ளம்
நன்றி மிகுந்து பொங்க – ..அன்பு கூர்வேன்
Arparipom Innanaalil
ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
கிறிஸ்தேசு ஜனித்ததால்
வின் மன்னோரும் எவ்வான்மாவும்
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் என்றென்றும் பாடிடவே
1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
நம் மீட்பர் ஜனித்ததால்
வான் பூமியும் சிருஷ்டிகளும்
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே
2. உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்
Yesu Ennodu Irupathal
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)
கலங்கலே நான் கலங்கலே
பயமில்லே எனக்கு பயமில்லே (2)
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)
1. கர்த்தரின் பாதத்தில் நித்தம் அமருவேன்
அன்பரின் மார்பினின் சாய்ந்து மகிழுவேன் (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
மகிழுவேன் துதித்து மகிழுவேன் (2) – இயேசு என்னோடு
2. இளமையிலே நான் இயேசுவைத் தேடுவேன்
உலக ஆசையை உதறித் தள்ளுவேன் (2)
தள்ளுவேன் உதறித் தள்ளுவேன்
வாழுவேன் உமக்காய் வாழுவேன் (2) – இயேசு என்னோடு
3. பரிசுத்த வாழ்க்கையை நாடி ஓடுவேன்
பிறருக்கு சாட்சியாய் வாழ்ந்து காட்டுவேன் (2)
காட்டுவேன் வாழ்ந்து காட்டுவேன்
ஜீவிப்பேன் சாட்சியாய் ஜீவிப்பேன் (2) – இயேசு என்னோடு
கலங்கலே நான் கலங்கலே
பயமில்லே எனக்கு பயமில்லே (2)
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)