Song Category: Tamil

Kirusthukul Valum Ennaku – கிறிஸ்துவுக்குள் வாழும்

Kirusthukul Valum Ennaku
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு -3

1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

Kristhuvukkul vaazhum enakku
Eppoadhum vetri undu
Vetri undu -3

1. Ennenna thunbam vandhaalum
Naan kalangidavae maattaen
Yaar enna sonnaalum
Naan soarndhu poagamaattaen

2. En raajaa munnae selgiraar
Vetri pavani selgiraar
Kuruththoalai kaiyil eduththu
Naan oasannaa paadiduvaen

3. Saaththaanin adhigaaramellaam
En naesar pariththu kondaar
Siluvaiyil araindhu vittaar
kaalaalae mithiththu vittaar

4. Paavangal poakkivittaar
Saapangal neekki vittaar
yaesuvin thazhumbugalaal
Sugamaanaen sugamaanaen

5. Maegangal naduvinilae
En naesar varappoagiraar
Karampidiththu azhaiththu selvaar
Kanneerellaam thudaippaar

En Meiparae Yesaiya – என் மேய்ப்பரே இயேசையா

En Meiparae Yesaiya
என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்
2. அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்
3. ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்
4. கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே
5. நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்
6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே
7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

Enthan Yesu Kai Vidamattar – எந்தன் இயேசு கைவிடமாட்டார்

Enthan Yesu Kai Vidamattar
எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
அல்லேலூயா – 8

1. நிந்தனை போராட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்
2. கடந்ததை மறக்கின்றேன்
கண்முன்னால் என் இயேசுதான்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகைப் போல் எழும்பிடுவேன்
3. சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்
4. ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே

En Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்

En Athumavum Sariramum
என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்லா
என்னில் இயேச வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

1. அப்பா உம் திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

2. கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

En Athumavum Sariramum
En Andavarke Sontham
Inni Vaalvathu Naanallaa
Ennil Yesu Vaalkintar

Yesu Deva Arppanniththaen
Ennaiyae Naan Arppanniththaen
Yettukkollum Yenthikkollum
En Ithayam Vaasam Seiyum

1. Appaa Um Thirusiththam – En
Antada Unavaiyaa
Naan Thappaamal Um Paatham
Thinam Eppothum Amarnthiruppaen

2. Karththaavae Um Karaththil
Naan Kaliman Polaanaen
Unthan Istampol Vanainthidum
Ennai Ennaalum Nadaththidum

Nalaya Thinathai – நாளைய தினத்தைக் குறித்து

Nalaya Thinathai
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா
3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே

Oppatra En Selvame
ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
உம் பாதம் ஓடி வந்தேன்
1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன்
2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா
3. கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும்

Ennai Thedi Yesu Vanthar – என்னைத் தேடி

Ennai Thedi Yesu Vanthar
என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
1. மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்
2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்
3. சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
4. தெரிந்துகொண்டார் என்னை
தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ

Ummai Nokki – உம்மை நோக்கிப்

Ummai Nokki Parkindrien
உம்மை நோக்கிப் பார்க்கிறேன்
உம்மை நினைத்து துதிக்கிறேன்
இயேசையா ஸ்தோத்திரம் (4)

1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்
2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே
3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் – நான்
என்னை மறக்கின்றேன்

Appa Veetil Eppothum Santhosham – அப்பா வீட்டில்

Appa Veetil Eppothum Santhosham

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம – 2

ஆடுவோம் கொண்டாடுவோம்
பாடுவோம் நடனமாடுவோம் – 2
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே – 2 (…நம்ம அப்பா)

1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்து விட்டார் – 2 (…ஆடுவோம்)

2. பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கி விட்டார் – 2 (…எனவே ஆடுவோம்)

3. பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்து விட்டேன் – 2 (…எனவே ஆடுவோம்)

4. ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய – 2 (…எனவே ஆடுவோம்)

5. வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் – 2 (…ஆடுவோம்)

6. அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட – 2 (…ஆடுவோம்)

Appaa Veettil Eppothum Santhoshame
Aadalum Paadalum Ingu Thaane – Namma – 2

Aaduvom Kondaaduvom
Paaduvom Nadanamaaduvom – 2
Alleluyaa Aananthame
Yellaiyillaa Perinbame – 2 (…Namma Appaa)

1. Kaaththirunthaar Kandu Kondaar
Kanneerellaam Thudaiththu Vittaar – 2 (…Aaduvom)

2. Parisuththa Muththam Thanthu
Paavamellaam Pokki Vittaar – 2 (…Enave Aaduvom)

3. Paavaththile Mariththirunthen
Puthiya Manithanaai Uyirththu Vitten – 2 (…Enave Aaduvom)

4. Aaviyennum Aadai Thanthaar
Athikaaram Ennum Mothiram Thanthaar – Thooya (…Enave Aaduvom)

5. Vasanamennum Saththunavai
Vaazhnaalellaam Oottukiraar – 2 (…Aaduvom)

6. Aninthu Kondom Mithiyadiyai
Appaavin Suvisesham Ariviththida – 2 (…Aaduvom)

Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே

Yaezhaigalin Belane
ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயினிலே குளிர் நிழலே

1. கர்த்தாவே நீரே என் தேவன்
நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உன் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே

2. தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்