Song Category: Tamil

Kartharai Padiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

Kartharai Padiye Potriduvome

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை – 2
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே – 2

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைபோல் வேறு நேசரில்லையே – 2

1. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே – 2
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார் – 2 (…இயேசு)

2. போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க – 2
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்க திடமளித்தார் – 2 (…இயேசு)

3. கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த – 2
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார் – 2 (…இயேசு)

4. சீயோனில் சிறப்புடன் சேர்த்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே – 2
முகமுகமாகவே காண்போமே அவரை
யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம் – 2 (…இயேசு)

Karththarai Paadiye Pottriduvome
Karuththudan Thudhippom Iniya Naamamadhai – 2
Kadalin Aazham Pol Karunaiyodirakkam
Karai Illai Avaranbu Karaiyattradhe – 2

Yesu Nallavar Yesu Vallavar
Yesuvai Pol Veru Nesarillaiye – 2

1. Kodumaiyor Seeral Peruvellam Pola
Adikkaiyil Modhiye Madhilgalin Meedhe – 2
Belanum Ivvezhaikkum Eliyorkkum Dhidanaai
Veyilukku Odhungum Vin Nizhalumaanaar – 2 (…Yesu)

2. Poraattam Sothanai Ninthai Avamaanam
Koramaai Vanthum Kirubaiyil Nilaikka – 2
Deva Kumaaranin Visuvaasaththaale Naan
Jeeviththu Sevikka Thidamaliththaar – 2 (…Yesu)

3. Kallum Mullugalulla Kadina Paadhaiyile
Kalakkangal Nerukkangal Agamadhai Varuththa – 2
Ellaiyilla Edhir Emakku Vandhaalum
Vallavar Yesu Nam Mun Selgiraar – 2 (…Yesu)

4. Seeyonil Sirappudan Serththida Yesu
Seekkiram Varum Naal Nerungi Vandhiduthe – 2
Mugamugamaagave Kaanbome Avarai
Yugayugamaagave Vaazhndhiduvom – 2 (…Yesu)

Karthar Kirubai Endrumullathu – கர்த்தர் கிருபை என்றுமுள்ளது

கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
என்றென்றும் மாறாதது
ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை
ஆண்டு நடத்திடுதே

கர்த்தர் நல்லவர்
நம் தேவன் பெரியவர்
பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மையுள்ளவர்

1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
கரத்தைப் பிடித்து நடத்தினாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
தோளில் சுமந்து நடத்தினாரே

2. வியாதி படுக்கை மரண நேரம்
பெலனற்ற வேளையில் தாங்கினாரே
விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே

3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே
வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
தைரியப்படுத்தி நடத்தினாரே

4. கண்ணீர் கவலையாவையும் போக்க
கர்த்தர் இயேசு வருகின்றாரே
கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம்
அவரோடு நாமும் பறந்து செல்வோம்

 

Um Kirubaikkaagavae – உம் கிருபைக்காகவே கெஞ்சி

Um Kirubaikkaagavae

உம் கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்
என் மேல் மனமிரங்கி வாழ வையுமே-2

வாழ வைங்கப்பா-2
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

1.மனிதர்கள் முன்பாக தலைகுனியாமல்
யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே-2

வாழ வைங்கப்பா-2
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

2.கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமே
அன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே-2

வாழ வைங்கப்பா-2
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

3.சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்
விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ-2

வாழ வைங்கப்பா-2
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

4.தள்ளாட்டம் தடுமாற்றம் நிறைந்த உலகிலே
உம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே-2
-உம் கிருபைக்காகவே

Enna Seiyya Virumbukintreer – என்ன செய்ய விரும்புகின்றீர்

Enna Seiyya Virumbukintreer

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2)
என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரே
நான் என்ன செய்ய விரும்புகின்றீர்

1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்
அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்
கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லை
கர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை

2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்க
தவறாமல் பேசும் உம் சித்தம் செய்ய
பாடுகளின் பாதை ஆனாலும்
ஓடுவேன் உமக்காக எந்நாளும்

3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தை
உம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்க
உந்தனின் சமூகத்தில் நிற்கும்போது
நான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க

Unga Mahimai – உங்க மகிமை

Unga Mahimai
உங்க மகிமை மகிமை மகிமை
என்னை நிரப்பி மூடனுமே
அதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே

இயேசுவே தகப்பனே
என் இயேசுவே தகப்பனே

என்னை மீண்டும் நினைத்தருளும்

பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்க
என்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே
விட்டதையும் நான் இழந்ததையும்
திரும்ப தந்திடுமே

முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்
அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்
அக்கினியாய் என்னை மாற்றிடுமே
இரட்டிப்பான வல்லமையால்
நிரப்பிடுமே
என்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே

Unga magimai magimai magimai
Ennai nirappi moodanumae
Adhai Bhadhikira kaariyangalai naan thukki yeriyanumae
Yesuvae thagapanae
En Yesuvae thagapanae
Ennai meendum ninaitharulum

Pidha thandha magimayai enakku thandheenga
Ennudaya madhiyeenathal izhandhu vitaenae
Vittadhayum naan izhandhadhayum
Vittadhayum naan izhandhadhayum
Thirumba thandhidumae
Enakku thirumba thandhidumae

Mundhina magimayin menmai paarkilum
Adhigamai magimayaal ennai nirapidum
Akkiniyai ennai maatridumae
Akkiniyai ennai maatridumae
Rettipana vallamayal nirapidumae
Ennai rettipana abishaegathal nirapidumae

Avar Tholgalin Melae – அவர் தோல்களின் மேலே

Avar Tholgalin Melae
அவர் தோல்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே

அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே – 2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் – 2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள்
எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் – 2 (…யெகோவாயீரே)

2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே – 2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான்
அசைக்கப் படுவதில்லையே – 2 (…யெகோவாயீரே)

Avar Tholgalin Mele Nan Sainthirupathal
Kavalai Ondrum Enakillaiyae
En Thevaigalellam Avar Parthukolvathal
Nan Avarukulle Magizhnthirupenae

Avar Varthaiyin Mele Nan Sarnthirupathal
Kavalai Ondrum Enakillaiyae
En Thevaigalellam Avar Parthukolvathal
Nan Kartharukul Magilthirupanae

Yegova Yire Enthan Devan
Thevaigal Yavum Santhipeerae
Yegova Rapha Enthan Devan
Ennalum Sugam Tharuveerae – 2

1. Marana Irulin Pallathakil Nadaka Nernthalum
En Appa Enodirupathale Bayapadamaten – 2
Enaku Virothamai Ayirangalum Pathinaayirangal
Ezhunthaalum Anjidamaten – 2 (… Yegova Yire)

2. Nerukkathilae Kartharai Nokki Koopiten
Ennai Visalathil Konduvanthu Meetukondarae – 2
En Patchathil Karthar Irupathinalae Orupothum Nan
Asaika Paduvathillayae – 2 (… Yegova Yire)

En Thalaiyai Uyarthubavar – என் தலையை உயர்த்துபவர்

En Thalaiyai Uyarthubavar
என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்

1. ஒன்றுக்கும் உதவாத என்னை அவர்கள் தள்ளியே புதைத்தனர் -2
புதைக்க பட்டு மறந்த என்னை நீர் மீண்டும் துளிர்க்க செய்தீர் -2
புதைத்து சென்றோர்க்கெலாம் என்னை கனி தர உயர்த்தி வைத்தீர் -2

என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்

2. அபாத்திரமான என்னை நீர் பாத்திரம் ஆக்கியவர் -2
மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய எந்தன் தகுதி அவர் -2
எனக்குள்ளே வாசமாய் இருக்கும் எந்தன் நீதி அவர் -2
எனக்குள்ளே வாசமாய் இருக்கும் எந்தன் ஜீவன் அவர் -2

என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்

3. ஞானிகள் வெட்கம் அடைய பைத்தியம் என்னை நீர் தெரிந்துகொண்டீர் -2
ஒன்றுக்கும் ஆகாத என்னை உம் கிருபை உயர்த்தியதே -2
என்னால் ஆனது அல்ல இது உந்தன் ஈவுகளே -2

என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார் }-2

En Thalaiyai Uyarthubavar
Ennodu Irukindraar

En Paathiram Nirambi Valiya
Abishegathal Nirapugirar

1. Ondrukum Uthavadha Ennai
Avargal Thalliye Pudhaithanar
Pudhaika Pattu Marandha Ennai
Neer Meendum Thulirka Seithir
Pudhaithu Sendrorkkelam
Ennai Kani Thara Uyarthi Veithir

2. Abathiram Maana Ennai
Neer Paathiram Aakiyavar
Maha Parisutha Sthalathukul
Nulaya Endhan Thaguthi Avar
Enakulley Vaasamai Irukum
Enthan Jeevan Avar

3. Niyanigal Vetkam Adaiya – Paithiyam
Ennai Neer Therindhukondeer
Ondrukum Aagadha Ennai
Um Kirubai Uyarthiyadhey
Ennal Aanadhu Alla
Idhu Undhan Ivugaley

Artist: Baba George | Kanmalay George

Umathu Mugam Nooki – உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

Umathu Mugam Nooki

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை

இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே

ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே

Umathu Mugam Nooki Paarthavarkal
Vetkappattu Povathillai
Umathu Thiru Naamam Arinthavarkal
Kaividappaduvathillai
Nampinorai Neer Marappathillai
Ummai Thaeti Vanthorai Veruppathillai

Utaintha Paaththiram Entu
Neer Evaraiyum Thalluvathillai
Ontukkum Uthavaathor Entu
Neer Evaraiyum Solluvathillai

Yesu Makaa Raajaa Engal Naesaa
Irakkaththin Sikaram Neerae

Aelaikalin Pelan Neerae
Eliyorin Nambikkai Neerae
Thikkator Vaethanai Arinthu
Uthavudum Thakappan Neerae

Iratha Satchi Kootam – இரத்த சாட்சிக் கூட்டம்

Iratha Satchi Kootam
இரத்த சாட்சிக் கூட்டம் சத்திய பாதையில்
நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்
ஜீவன் சுகம் பெலன் யாவையும் ஈந்ததால்
சுத்த சுவிசேஷம் ஓங்குதே

1. ஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட
ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட
கல்வாரியில் மரித்தே உயித்தெழுந்த
கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் போர்வீரரே

3. நாடு, நகரமோ, காடு மலையோ நாடித் தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்
மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி
கண்டறிந்த சாட்சி கூறுவோம் – போர்வீரரே

4. தாகமோ, பசியோ நோக்கிடாமலே லோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே
முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே
இன்னமும் முன்னேறி சேவிப்போம் போர்வீரரே

5. உன்னத அழைப்பை என்றும் காத்திட ஊக்கமாய் உறுதியாய் தகுதி
பெற்றிட ஆவியிலே அனலாய் நிலை நின்றிட ஆண்டவர் அருள் பொழிகுவார் போர்வீரரே

6. சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்
சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்
வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்
வல்ல விசுவாச சேவையில் – போர்வீரரே

7. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே –
நாம்
ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள்
ஆர்ப்பரித்துக் கூடி வாழுவோம் போர்வீரரே

Entha Neramum Eppothume – எந்த நேரமும் எப்போதுமே

Entha Neramum Eppothume
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை

இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

1. இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே — எந்த

2. சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே — எந்த

3. சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை
ஒரு போதும் கெட்டுப் போகாதே
தம்மை தேடுவோரை காத்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமே — எந்த

4. ஒவ்வொரு ஆண்டிலும் கர்த்தர்
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத் தத்தம் தந்து நடத்துவார் — எந்த

5. குமரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக் கொள்ளுவோம் — எந்த