Song Category: Tamil

Ontrai Sernthu – ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

Ontrai Sernthu
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே

லலலாலலாலலா

அன்பின் மாதிரி ஆனவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

Koda Kodi Sthothiram – கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி

Koda Kodi Sthothiram
பல்லவி
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே

அனுபல்லவி
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன்

1. பாவியை மீட்க பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏது முண்டோ? – பூவுலகில்

2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங்கொண்டாலும்
தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே – எந்தனுக்காய்

3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடு வராது காக்கும் நம் மீட்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் – இறையவனை

4. தாவீது கோத்திர சிங்கமாய்வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்துக்கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் – நித்தியமாய்

5. குயவனின் கையில் களிமண்ணைப்போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா – ஏழையென்னை

Thalai Saikkum Kal – தலை சாய்க்கும் கல்

Thalai Saikkum Kal
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

thalai saaykkum kal neerayyaa
moolaikkal neerayyaa

ael peththael ithu vaanaththin vaasal
en iyaesaiyaa aaseervaathaththin vaasal

maerku kilakku vadakku therku parampuvaay enteerae aathi
poomiyin thoolaippol un santhathi
perukum entu vaakkuraiththeerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

poomiyin vamsangal unakkul
un santhathikkul aaseervathikkappadum
entu aaseervaatha vaaykkaalaaka
ennai maattineerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

sellum idamellaam ennodu irunthu
ennai kanappaduththuveer
thakappan thaesaththukku thirumpum varaiyil
ennai kaappaattuveer
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir -enakku

Ennai Padaithita – என்னை படைத்திட்ட

Ennai Padaithita
என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
என் தேவை எல்லாம் அறிந்தவரே

அர்ப்பணித்தேன் முழுதுமாய்
படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
தந்துவிட்டேன் இன்றே

1. என்னை வரைந்திட்ட வல்லவரின் கரங்களில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
உம்மால் முடியாது என்று ஒன்று இல்லை
நம்பி வந்தேன் இன்றே

Ennai Padaithita Paramanin Paadhathil
Padaithen muzhu nambikaiyodu
Thayin karuvil therinthavar neer
En thevai ellam arinthavarae

Arpanithaen muzhuthumai
Padaithiten en aasai ellam
Aavi athma sariram ellam
Thanthuviten indrae

1. Ennai varanthita vallavarin karangalil padathen muzhu nambikaiyodu
Ummal mudiyathu endru ondru illai nambi vanthen indrae

Anbu Kooruvom Nam Devanagiya – அன்பு கூருவோம் நம் தேவனாகிய

Anbu Kooruvom Nam Devanagiya

அன்பு கூறுவோம் நம் தேவனாகிய கர்த்தரில்
அவரே நம் தேவன் என்றென்றும் அவரில் வாழ்ந்திட

நம் இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார்
அவர் வருகையை சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

1. திருடனை போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவணியனுள்ளோர் அழுது புலம்பி கதறுவாரே

2. அந்த நாளில் ஆயத்தமானோர் இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்து பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

Anbu Kooruvom Nam Devanaagiya Kartharil
Avarae Nam Devan Endrendrum Avaril Vazhdhida

Chorus
Nam Yesu Magarajan Seekiram Varugirar
Avar Varugaiyai Sandhikka Ayathamaavom Naam

1. Thirudanai Pol Avar Varugai Theeviramai Miga Nerungiduthae
Aayathamilla Avaniyanullor Azhudhu Pulambi Katharuvarae

2. Andha Naalil Aayathamanor Yesuvidam Paranthiduvom
Ivvuzhaga Vazhvai Mudithu Paraloga Vaasal Saerndhiduvom

Abishega Olivamaram – அபிஷேக ஒலிவ மரம்

Abishega Olivamaram
அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவேன்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்

என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவர்

பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
இந்த உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பேன்

Puvil Naam Yen Ootham – பூவில் நான் என் ஓட்டம் முடித்து

Puvil Naam Yen Ootham
பூவில் நான் என் ஓட்டம் முடித்து
விண்ணில் என் வெகு மதிக்காய்
பறந்திடுவேன் மறுரூபமாய்
பரன் இயேசு ராஜன் சமூகம்

தூதர் சேனை யாவுமே
அணி அணியாய் என்னை
வரவேற்க நிற்கின்றசூத
வெள்ளையங்கி தரித்து
எந்தன் நேசர் முன்பாக
அல்லேலூயா பாடுவேன்

1. வெகுநாளாய் காண ஆவலாய்
காத்திருந்த எந்தன் நேசரை
மகிமையிலே காணும்
வேளையிலே
திருமார்பில் சாய்ந்திடுவேன்
– தூதர்

2. நித்திய கை வேலையில்லாத
புது சாலேம் நகரமதில்
மணவாட்டியாய் சதாகாலமாய்
பரமனோடு என்றும்
வாழுவேன்
– தூதர்

Thedungal Kandadiveer – தேடுங்கள் கண்டடைவீர்

Thedungal Kandadiveer
தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவோம் அதிகாலமே

1. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் – எந்த
சேதமும் வந்தணுகாமல்
இந்தப் புதுதினம் கண்டடைய
தந்தனரே தமது கிருபை – தேடுங்கள்

2. நல்ல சுகம் பெலன் தந்து – தம்
வல்ல நல் ஆவியும் ஈந்து
வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார் – தேடுங்கள்

3. ஊண் உடை தந்தாதரித்து – இந்த
ஊழிய பாதையில் காத்து
கூப்பிடும் வேளை செவிகொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே – தேடுங்கள்

4. ஜீவனும் உள்ள நாளெல்லாம் – என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசைய்யா இயேசுவை ஸ்தோத்தரிப்போம் – தேடுங்கள்

4. காலையில் ஸ்தோத்திரக் கீதம் – இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
நல்ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகளும் செய்துழைப்பேன் – தேடுங்கள்

5. கர்த்தரை நான் எப்பொழுதும் – என்
கண் முன்னில் நிறுத்தி நோக்க
நாள் முழுதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதை காட்டிடுவார் – தேடுங்கள்

En Nesar Yesuvin Mel – என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே

En Nesar Yesuvin Mel
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்

லீலி புஸ்பம் சரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூய பிதா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா

கன்னியர்கள் நேசிக்கும் தேவா
கர்த்தரின் நாமம் பரிமளமே
இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழத்துக் கொண்டார்

நேசக்கொடி மேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தரின் ஆறுதலே

தென்றலே வா வாடையே எழும்பு
தூதாயீம் நற்கனி தூயருக்கே
வேலி அடைத்த தோட்டமிதே
வந்திங்கு உலாவுகின்றார்

நாட்டினிலே பூங்கனி காலம்
காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
கன்மலை சிகரம் என் மறைவே
இந்நேரமே அழைத்தார்

நித்திரையே செய்திடும் ராவில்
நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
என் கதவருகே நின்றழைத்த
இயேசுவை நேசிக்கிறேன்

நேசத் தழல் இயேசுவின் அன்பே
நேசம் மரணம் போல் வலிதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே

தூய ஸ்தம்பம் போலவே எழும்பி
தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன்

En Nesar Yesuvin Mel Saarnthae
Thunba Vanaantharathil Nadanthida
Inba Nal Vaalvatainthaen

Leeli Puspam Saronin Rojaa
Paalilum Vennmai Thooya Pithaa
Poorana Roopa Sauntharyamae
Paer Sirantha Iraivaa

Kanniyarkal Naesikkum Devaa
Kartharin Naamam Parimalamae
Yesuvin Pinnae Odi Vanthom
Ennaiyum Ilathu Konndaar

Nesakkoti Mel Paranthonga
Naesar Pirasannam Vanthiranga
Kichchali Marathin Geel Atainthaen
Karththarin Aaruthalae

Thentalae Vaa Vaataiyae Elumpu
Thoothaayeem Narkani Thooyarukkae
Vaeli Ataiththa Thottamithae
Vanthingu Ulaavukintar

Naattinilae Poongani Kaalam
Kaattuppuraavin Paattalikkum
Kanmalai Sikaram En Maraivae
Innaeramae Alaiththaar

Niththiraiyae Seythidum Raavil
Niththam En Aathmaa Nal Vilippae
En Kathavarukae Nintalaiththa
Yesuvai Naesikkiraen

Naesath Thalal Yesuvin Anpae
Naesam Maranam Pol Valithae
Vellangal Thirannda Thannnneerkalaal
Ullam Annainthidaathae

Thooya Sthampam Polavae Elumpi
Thaeva Kumaaran Vanthiduvaar
Amminathaapin Iratham Pola
Antu Paranthu Selvaen

Ezhuntharulum Deva – எழுந்தருளும் தேவா

Ezhuntharulum Deva
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் -4
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் -2
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் -2
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் -2
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் -2

சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் -2

1. நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்
நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் -2
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் -2
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்

2. நீர் எழுந்தருளும் போது சமுத்திரம் எல்லாம் விலகி ஓடிடும்
பர்வதங்களும் மெழுகு போல உருகி மறைந்திடும் -2
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் -2
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்

Ezhuntharulum Deva Ezhuntharulum -4
Manushar Sabayai Merkollathirukka Ezhuntharulum
Saththuru Sabayai Thodaraathirukka Ezhuntharulum -2
Ezhuntharulum Deva Ezhuntharulum -2
Manushar Sabayai Merkollathirukka Ezhuntharulum
Saththuru Sabayai Thodaraathirukka Ezhuntharulum -2
Ezhuntharulum Deva Ezhuntharulum -2

Sabaikku Oththaasayaga Ippo Ezhuntharulum
Sabai Umakkullae Marainthirukka Ezhuntharulum -2
Ezhuntharulum Deva Ezhuntharulum -2

1. Neer Ezhuntharulum bothu Pagaingar Ellam Sitharundu Ooduvaar
Neethimaangalo Umakkul Magizhnthu Paadi Thuthipparkal -2
Devareer Ezhuntharuli Seeyonukku Iranguveer -2
Atharku Thayai Seiyum Kaalam Vanthathae
Sabaikku Thayai Seiyum Kaalam Vanthathae -Ezhuntharulum

2. Neer Ezhuntharulum bothu Samuthiram Ellam Vilagi Odidum
Parvathangalum Mezhugu Pola Uruki Marainthidum -2
Devareer Ezhuntharuli Seeyonukku Iranguveer -2
Atharku Thayai Seiyum Kaalam Vanthathae
Sabaikku Thayai Seiyum Kaalam Vanthathae -Ezhuntharulum