Song Category: Tamil

Aaviyaanavare Thooya Aaviyaanavare – ஆவியானவரே தூய ஆவியானவரே

Aaviyaanavare Thooya Aaviyaanavare
ஆவியானவரே தூய ஆவியானவரே
எங்கள் மத்தியிலே அசைவாடும் ஆவியே-2

ஆவியே தூய ஆவியே-4
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
எங்கள் தூய ஆவியே-2

1. அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அக்கினியாய் பயன்படுத்திடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-2
– ஆவியானவரே தூய…..

2.வரங்களினால் என்னை நிரப்பிடுமே
வல்லமையாய் பயன்படுத்திடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-2
– ஆவியானவரே தூய…..

3. பெலத்தின்மேல் பெலன் நான் அடைய
பெலத்தால் என்னை நிறைப்பிடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-4
– ஆவியானவரே தூய…..

Umaku Sithamundu Soneere – உமக்கு சித்தமுண்டு சொன்னீரே

Umaku Sithamundu Soneere

உமக்கு சித்தமுண்டு சொன்னீரே
அவன் சுத்தமானானே – 2
மனதுருகி கையை நீட்டி
அற்புதம் செய்தவரே – 2

உமக்கு சித்தமுண்டு சொன்னீரே
அவன் சுத்தமானானே -2

எனக்காக யவையும் செய்தீர்
எனக்காக சிலுவையில் மரித்தீர்-2
எனக்காக அடிமையின் ரூபமாய்
எனக்காக சிலுவையில் சாபமாய்-2
எனக்காக எனக்காக எனக்காக
யாவையும் செய்தீர்

உமக்கு சித்தமுண்டு சொன்ணீரே அவன் சுத்தமானானே – 2

தாழும்புகளால் சுகமானேன்
இரத்தத்தினால் கழுவப்படேன் – உம் -2
உமக்காக யாவையும் சகிப்பேன்
உமக்காக சிலுவையைச் சுமப்பேன்-2

உமக்காக உமக்காக உமக்காக சாட்சியாய் வாழ்வேன்

உமக்கு சித்தமுண்டு சொன்னீரே
அவன் சுத்தமானானே – 2
மனதுருகி கையை நீட்டி
அற்புதம் செய்தவரே – 2

Umaku Sithamundu Soneere
Avan Suthamanane
Manathurugi Kaiyai Neeti
Arputham Seibavare

Umaku Sithamundu Soneere
Avan Suthamanane

Enakaga Yavaiyum Seitheer
Enakaga Siluvaiyil Maritheer
Enakaga Adimaiyin Roopamai
Enakaga Siluvaiyil Sabamai
Enakaga Enakaga Enakaga
Yavaiyum Seitheer

Umaku Sithamundu Soneere
Avan Suthamanane

Thazhumbukalal Sugamanen
Um Rathathinal Kazhuvapaten
Umakaga Yavaiyum Sagipen
Umakaga Siluvaiyai Sumapen

Umakaga Umakaga Umakaga
Satchiyai Vazhven

Umaku Sithamundu Soneere
Avan Suthamanane
Manathurugi Kaiyai Neeti
Arputham Seibavare

Devakumaran Yesu – தேவகுமாரன் இயேசு

Devakumaran Yesu
தேவகுமாரன் இயேசு
இரட்சகராக பிறந்தார்
ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே
சமாதானாபிரபு அவரே

அநேகரின் சிந்தனைகளை
வெளிப்படுத்த இயேசு பிறந்தார்
அடையாளமாய் மாறுவதற்க்கு
இயேசு நியமிக்கப்பட்டாரே

பிரகாசிக்கும் ஒளியாக
இயேசு ராஜன் பிறந்தாரே
இவ்வுலக மக்களுக்காக
இயேசு மகிமையாய் பிறந்தாரே

நமக்கொரு பாலன் பிறந்தார்
கர்த்தத்துவம் தோளின் மேலே
அவர் நாமம் அதிசயம்
வல்லமையான தேவனே

Devakumaaran Yesu
Iratchagaraaga Piranthaar
Aalosanai Karthar Nithiya Pithaavae
Samaathaanaapirabu Avarae

Anaegarin Sinthanaikalai
Velipadutha Yesu Piranthaar
Adaiyaalamaai Maaruvatharku
Yesu Niyamikappatarae

Piragaasikum Oliyaaka
Yesu Raajan Piranthaarae
Ivvulaka Makkalukkaaka
Yesu Magimaiyaai Piranthaarae

Namakoru Paalan Piranthaar
Karthathuvam Tholin Maelae
Avar Naamam Athisayam
Vallamaiyaana Devanae

Yesu Pirandharae Endhan Ullathilae – இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே

Yesu Pirandharae Endhan Ullathilae
இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே
இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்
பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே
சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே

ஹாலேலூயா ஹாலேலூயா

தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட
மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே

கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட
வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே

Rap:
The One Who Is Seated At The Most High Throne,
He Came To Redeem Us, Christ Was Born
The Big Reason For This Season, He Is King Let’s Rock And Roll.
No More Worries, He Is Here, The Game Changer There Is No More Fear
Born In A Manger Still Not A Stranger
Jesus Christ! Man He Is My Savior

It’s True! There Is A King To Rule. Son Of God!!
Man He’s So Cool, He Loved Us So Much,
Came Down For Us. John 3:16 That’s The Truth!
You Gotta Realize Open Up Your Eyes
You Gotta Realize Start Being Wise
You Gotta Realize Forget The Rules!
Jesus Is The Way To Choose.

Yesu Pirandharae
Endhan Ullathilae
Yesu Pirandharae
Magilndhu Padiduvom

Paavangal Pokida Ratchagar Pirandharae
Saabangal Neekida Nithiyar Pirandharae

Thudhargal Padida Sashthrigal Thozhudhida
Meipargal Vanangida Arpudham Nadandhida
Needhiyin Sooriyanai Yesu Pirandharae

Kattugal Avilndhida
Vidudhalai Thandhida
Vyadhigal Neengida
Adhisaiyam Nadandhida
Needhiyin Sooriyanai Yesu Pirandharae

Maanida Uruvil Avatharitha – மானிட உருவில் அவதரித்த

Maanida Uruvil Avatharitha

மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

2. கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி

3. இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

4. அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

5. கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்

Maanida Uruvil Avatharitha
Maasudar Oliyae Kiristhaesuvae

1. Aathuma Meetpaiyum Yerpadutha
Avaniyilae Unakaai Uthithaar
Andi Varuvaai Vendi Adaivaai
Annalae Aathuma Vinai Neekuvaar

2. Koovi Alaipathu Deva Satham
Kurusil Vadivathu Thooya Ratham
Paava Mannippu Aathma Iratchippu
Paakkiyam Nalkida Avarae Vali

3. Yesuvin Naamathil Vallamaiyae
Ithai Naaduvorku Viduthalaiyae
Thunba Katugal Kaaval Siraikal
Indru Akatruvaar Neeyum Nambi Vaa

4. Arputhangal Karthar Seithiduvaar
Athisayangal Avar Kaatiduvaar
Unmai Niraintha Ullam Thiranthu
Un Karthar Yesuvai Visuvaasipaai

5. Karthar Unnai Ini Kaividaarae
Kadaisi Varai Thalaraathae Nambu
Endrum Nallavar Karthar Vallavar
Yesuvidam Vanthaal Purambae Thallaar

Yesu Piranthaar Pethalakem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

Yesu Piranthaar Pethalakem Oorilae

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
மரியாளின் மைந்தனாய் இயேசு
பிறந்தார் பாவங்களைப் போக்கவே
மனுவாய் அவதரித்தாரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலு அல்லேலு
அல்லேலூயா

இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு
வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு
பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட
பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு

மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு
ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு
மேன்மையை வெறுத்தவர்
தாழ்மையை தரித்தவர்
ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு

Karuvil Irundhae – கருவில் இருந்தே

Karuvil Irundhae
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே

தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்

1. தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்

நன்றி ஐயா இயேசய்யா – 4

2. கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்

3. மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்

4. துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்
பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீர்

Karuvil Irunthe Thaangi Vantheer Kirubaiyinaale
Inaal Varai Thaangukireer Irakkathinaale

Thaangineer Thappuvitheer Sumantheer Sugam Thantheer

1. Thagapan Pola Tooki Thinam Sumanthu Varugireer
Thaayaipola Aartri Thinam Thetri Varugireer

Nandri Iyaa Yesaiyaa

2. Kalugu Pola Sumanthu Thinam Parakka Seikinreer
Kanmani Pola Karaipadaamal Kaathu Varuginreer

3. Meitpan Pola Karangalaale Yenthi Magizhkinreer
Madiyil Vaithu Thinam Thinam Unavu Ootukireer

4. Thukkangal Paadugal Belaveenangal
Paavangal Noigal Sumanthu Theerthire

Aavikullakum Ennai Aavikullakum – ஆவிக்குள்ளாக்கும்  என்னை ஆவிக்குள்ளாக்கும்

Aavikullakum Ennai Aavikullakum
ஆவிக்குள்ளாக்கும்  என்னை ஆவிக்குள்ளாக்கும்
ஜீவத்தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாக்கும்
ஊற்றுத் தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாக்கும்
இப்போ இன்றும் என்றும் என்னை ஆவிக்குள்ளாக்கும் -2

1.ஏசாயாவை ஆவிக்குள்ளாக்கினீரே
எரேமியாவை ஆவிக்குள்ளாக்கினீரே
எசேக்கியலை  ஆவிக்குள்ளாக்கினீரே
என்னையும் இன்று நீர் ஆவிக்குள்ளாக்கும் – 2

2. யோவானை ஆவிக்குள்ளாக்கினீரே
வெளிப்பாட்டு அபிஷேகத்தால் நிரப்பினீரே
பவுலையும்  ஆவிக்குள்ளாக்கினீரே என்னையும் இன்று நீர் ஆவிக்குள்ளாக்கும் -2

3. பரிசுத்த வாழ்வுக்காய் ஆவிக்குள்ளாக்கும்
பரலோக தூதர் சூழ ஆவிக்குள்ளாக்கும்
பரிமள  தைலமாம் ஆவிக்குள்ளாக்கும்
பரலோகம் சேர்ந்திட ஆவிக்குள்ளாக்கும் -2

Aarathika Koodinoom – ஆராதிக்கக் கூடினோம்

Aarathika Koodinoom
ஆராதிக்கக் கூடினோம்
ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
வல்ல இயேசு நம் தேவன்
என்றென்றும் அவர் நல் தேவன்

1. தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே என் மனம் பாடுதே -2
மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே

2. சீயோன் பெலனே வெற்றி சிகரமே
சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்
ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்
நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே

3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்
அல்லேலூயா என் ஆவி பாடுதே
ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே

4. தேவ சாயல் சபையில் தோன்றுதே
தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்
தேவ சேவையே என் கெம்பீர சேவை
தேவ ஆவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன்

Aaraathika Koodinom Aarparithu Paadiduvom
Valla Yesu Nal Devan Endentrum Avar Nam Devan

1. Deva Vaasasthalam Entrum Inbamaanathae
Magimai Devan Kiristhu Yesu Parasanam Ingae
Magimai Magimaiyae! En Manam Paaduthae Makkal Mathiyil
En Makilchi Ponguthae!

2. Seiyon Pelanae! Vetti Sikaramae!
Senaikalin Karthar Yesu Kiriyai Seigiraar
Jeevan Pelanum Aasirvaathamae Nithiya Jeevan
Indrum Ennil Ongi Nirkuthae!

3. Karthar Samugam En Vaalvin Maenmaiyae
Karthar Yesu Raajan Entrum Uyarnthu Nirkiraar
Allelooyaa En Aavi Paaduthae Aaraathanai
Alagu Ennai Kavarnthu Kondathae!

4. Deva Saayal Sapaiyil Thontuthae
Devar Naduvil Yesu Niyaayam Seigiraar
Deva Sevaiyae En Kembeera Sevai
Devaaviyil Nirainthu Aadipaaduvaen

Kadal Kondhalithu Ponga – கடல் கொந்தளித்துப் பொங்க

Kadal Kondhalithu Ponga
கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

1. கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி, மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே

2. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

Kadal Konthalithu Ponga
Kappal Aadi Sellkaiyil
Puyal Kaatru Seeri Veesa
Paai Killinthu Pokaiyil
Yesu Engalidam Vanthu
Kappalottiyaayirum
Kaatramaithu Thunai Nindru
Karai Serah Seithidum

1. Kappalilae Povorukku
Kadum Mosam Varinum
Idi, Min Muzlakkam Kaatru
Umakkellaam Adangum
Irulil Neer Paranjothi
Veyilil Neer Nilalae
Yaathiraiyil Thisai Kaati
Saavil Engal Jeevanae

2. Engal Ullam Ummai Nokkum
Inba Thunba Kaalathil
Engal Aavi Ummil Thangum
Igapara Sthalathil
Yesu Engalidam Vanthu
Kappalottiyaayirum
Kaatramaithu Thunai Nindru
Karai Serah Seithidum