Song Category: Tamil

Indha Mangalam Selikavea – இந்த மங்களம் செழிக்கவே

Indha Mangalam Selikavea

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

Bayanthu Kartharin – பயந்து கர்த்தரின் பக்தி

Bayanthu Kartharin
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Balanai Piranthar

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்

1. உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட – இயேசு

2. விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானிடவதாரமாய்த்
தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு

3. ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு

4. கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு

5. அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு

Dhivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை

Dhivya Anbin Sathathai
திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்

இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா

1. என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன் – இன்னும்

2. திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷமாகிறேன் – இன்னும்

3. இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் – இன்னும்

Devanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள்

Devanai Uyarthi Thuthiyungal
தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனை உயர்த்தி துதியுங்கள்
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி – நம்

1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
ஆரவாரம் என்றுமே

2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்படுத்தினார்

3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு

4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
தன்னில் நம்மை மன்னாதி
மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
சமாதானம் தங்கிடுமே

5. புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
பனிபோல் கிருபையை
பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடும்

6. சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார்

Naan Nirkum Boomi – நான் நிற்கும் பூமி – Nambuven Yen Yesu Oruvarai – நம்புவேன் என் இயேசு ஒருவரை

Naan Nirkum Boomi
1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2)
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)

நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)

2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – (2)
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)

நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)

Nambuven Yen Yesu Oruvarai

1. Naan nirkum boomi nilaikulaindhu azhindhaalum
En nambikkaiyin asthibaaram asaindhaalum – (2)
Naan nambuvadharku ondrumillai endraalum
Nambuvaen en yaesu oruvarai -(2)

Nambuvaen en yaesu oruvarai -(4)

2. En paadhai ellaam andhagaaram soozhndhaalum
Vaazhkai mudindhadhu maruvaazhvu illai endraalum -(2)
Ennai thaetruvadharku yaarumillai endraalum
Nambuvaen en yaesu oruvarai -(2)

Nambuvaen en yaesu oruvarai -(4)

Abishegam Illatha Aarathanai Vendamaiya – அபிஷேகம் இல்லாத ஆராதனை

Abishegam Illatha Aarathanai Vendamaiya
அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றுமையா
என் சுயங்கள் மாறிட வேண்டுமையா – 2
சுத்த ஆவியால் என்னை நிரப்பும் ஐயா – 2
சுகமாய் நான் வாழவேண்டுமய்யா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

அபிஷேக வாழ்க்கை மாறிடவே
என் அபிஷேக நாதரே வாருமை ஐயா – 2
உன்னதத்தின் ஆவியை ஊற்றுமையா – 2
உமக்காய் நான் வாழ்வேனையா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா
அனலோடு ஆராதனை செய்யணுமையா – 2
ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க – 2
ஆந்த தைலத்தால் ஊற்றுமையா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா
அனலோடு ஆராதனை செய்யணுமையா – 2
ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க – 2
ஆந்த தைலத்தால் ஊற்றுமையா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

Aarathanai Nayagan Neere – ஆராதனை நாயகர் நீரே

Aarathanai Nayagan Neere
ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – ஆராதனை

2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவும் முடங்கிடவே
மகிழ்வுடன் துதித்திடுவேன் – ஆராதனை

3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – ஆராதனை

Aaraadhanai naayagan neerae
Aaraadhanai vaendhanum neerae (2)
Aayul mudiyum varai
Ummai thozhudhiduvaen (2)

1. Aayiram paergalil sirandhoar
Aandavar Yaesu neerae (2)
Vidivellliyae engal piriyam neerae
Endrendrum thozhudhiduvaen (2)

2. Maandhargal poatridum dheivam
Magimaiyin dhaevan neerae (2)
Muzhangaal yaavumae mudangidumae
Magizhvudan thudhithidavae (2)

3. Mudivillaa raajiyam arula
Thirumbavum varuvaen endreer (2)
Aayathamaai naangal saerndhiduvae
Anudhinam vanangiduvaen (2)

Ezhundhidu Ezhundhidu – எழுந்திடு எழுந்திடு

Ezhundhidu ezhundhidu

பூமியும் அதின் நிறைவும்,

உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,

அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;

அநாதி கதவுகளே, உயருங்கள்;

மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார்

யார் இந்த மகிமையின் ராஜா?

அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்;

அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;

அநாதி கதவுகளே, உயருங்கள்;

மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார்

யார் இந்த மகிமையின் ராஜா?

அவர் சேனைகளின் கர்த்தரானவர்;

அவரே மகிமையின் ராஜா

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை

நீ துதி செய்

நோய்களையும் குணமாக்கினவரை

நீ துதி செய்

மரணத்தின் கட்டுகள் உடைத்தவரை

நீ துதி செய்

உன்னை அழைத்தவர் உன்னை நடத்திடுவார்

நீ துதி செய்

நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை

நீ துதி செய்

குறைகளையெல்லாம் போக்கினவரை

நீ துதி செய்

கவலைகள் கண்ணீர் துடைத்தவரை

நீ துதி செய்

உன் தனிமையிலே துணை நின்றவரை

நீ துதி செய்

ஓ ஓ

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு

இராஜன் வந்தாரே

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு

இராஜன் வந்தாரே

நம் இராஜன் வந்தாரே

இயேசு இராஜன் வந்தாரே (2)

சிறகுகளால் உன்னை அனைத்தவரை

நீ துதி செய்

வழிகளிலெல்லாம் காப்பவரை

நீ துதி செய்

கோட்டையும் அரணுமானவரை

நீ துதி செய்

தம் கரங்களில் உன்னை தாங்கினவரை

நீ துதி செய்

பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை

துதி செய்

போராட்டங்களெல்லாம் நீக்கினவரை

நீ துதி செய்

தேற்றரவாளனை அனுப்பினவரை

நீ துதி செய்

தம் இராஜ்ஜியத்தில் நம்மை சேர்ப்பவரை

நீ துதி செய்

ஓ ஓ

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு

இராஜன் வந்தாரே

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு

இராஜன் வந்தாரே

நம் இராஜன் வந்தாரே

இயேசு இராஜன் வந்தாரே (2)

துதி செய் அவரை

துதி செய் (12)

Boomiyum adhin niraivum

Ulagamum adhilulla kudigalum kartharudaiyadhu

Avarae adhai kadalgalukku maelaaga asthibaarapaduthi

Adhai nadhigakukku maelaaga sthaabithaar

Vaasalgalae ungal thalaigalai uyarthungal

Anaadhi kadhavugalae uyarungal

Magimaiyin raajaa utpravaesikkiraar

Yaar indha magimaiyin raajaa

Avar vallamaiyum paraakkiramumulla karthar

Avar yuthathil paraakkiramumulla kartharaamae

Vaasalgalae ungal thalaigalai uyarthungal

Anaadhi kadhavugalae uyarungal

Magimaiyin raajaa utpravaesikkiraar

Yaar indha magimaiyin raajaa

Avar saenaigalin kartharaanavar

Avarae magimaiyin raajaa

Thaazhmaiyilae unnai ninaithavarai

Nee thudhi sei

Noigalaiyum gunamaakinavarai

Nee thudhi sei

Maranathin kattugal udaithavarai

Nee thudhi sei

Unnai azhaithavar unnai nadathiduvaar

Nee thudhi sei

Nerukathilae unnai ninaithavarai

Nee thudhi sei

Kuraigalaiyellaam poakinavarai

Nee thudhi sei

Kavalaigal kanneer thudaithavarai

Nee thudhi sei

Un thanimaiyilae thunai nindravarai

Nee thudhi sei

Oo

Ezhundhidu ezhundhidu thudhi bali seluthidu

Raajan vandhaarae

Ezhundhidu ezhundhidu thudhi bali seluthidu

Raajan vandhaarae

Nam raajan vandhaarae

Yaesu raajan vandhaarae (2)

Siragugalaal unnai anaithavarai

Nee thudhi sei

Vazhigallellaam kaapavarai

Nee thudhi sei

Kaottaiyum aranumaanavarai

Nee thudhi sei

Tham karangalil unnai thaanginavarai

Nee thudhi sei

Paavathin pidiyil thappuvithavarai

Nee thudhi sei

Poaraattangalellaam neekinavarai

Nee thudhi sei

Thaetraravaalanai anupinavarai

Nee thudhi sei

Tham raajiyathil nammai saerppavarai

Nee thudhi sei

Oo

Ezhundhidu ezhundhidu thudhi bali seluthidu

Raajan vandhaarae

Ezhundhidu ezhundhidu thudhi bali seluthidu

Raajan vandhaarae

Nam raajan vandhaarae

Yaesu raajan vandhaarae (2)

Thudhi sei avarai

Thudhi sei (12)

Thai Pola Thetri – தாய்போல தேற்றி

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

Thaai Pola Thetri Thandhai Pola Aatri
Tholmeedhu Sumandhidum En Yesaiyya
Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
Ummai Pola Aravanaikka Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
Pani Pola Urukida Seibavarae
Kanmani Pol Ennai Kaappavarae
Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thaaipola Thaettri

1. Belaveena Neram En Kirubai Unakku Podhum
Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
Nizhal Pola En Vaazhvil Varubavarae
Vilagaamal Thunai Nindru Kaappavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thaaipola Thaettri

2. Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
Thozhan Pola Purindhu Konda En Yesaiya
Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya