Song Category: Tamil

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு

Yesu Rajanin Thiruvadikku

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே

2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே

3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்

4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்

5. அல்லேலுயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலுயா அல்லேலுயா ஆமென்

Santhosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே

Santhosha Vinnoliye

சந்தோஷ விண்ணொளியே
இயேசு சாந்த சொரூபியவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்

இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார்

பூலோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஒன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே

ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவன் சுதன் இவர்
இயேசுவல்லால் வேறு யாருமில்லை
இரட்சண்யம் ஈந்திடவே

ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும்
இயேசுவைப் பின்பற்றுவோம்

எங்கள் சமாதானப் பிரபு இவர்
இயேசு அதிசயமானவர்
வேதம் நிறைவேறும் காலமே
வேகம் வருகின்றாரேே

Santhosha Vinnnnoliyae
Yesu Saantha Soroopiyavar
Pallathaakkin Leeli Saaronin Rojaa
Paaril Malarnthuthiththaar

Inba Paralogam Thuranthavar
Thunbam Sakiththida Vanthavar
Paava Manitharai Meettavar
Paliyaakavae Piranthaar

Pooloka Maenmaikal Thaedaathavar
Paerum Pukalum Naadaathavar
Ontana Mey Thaevan Yesuvae
En Aathma Iratchakarae

Jeevan Vali Saththiyam Ellaamivar
Thaevaathi Thaevan Suthan Ivar
Yesuvallaal Vaetru Yaarumillai
Iratchannyam Eenthidavae

Aadampara Vaalvai Veruthavar
Annal Elimaiyaai Vaalnthavar
Emmaiyum Thammai Pol Maattidum
Yesuvai Pinpattuvom

Engal Samaathaana Pirapu Ivar
Yesu Athisayamaanavar
Vaetham Niraivaerum Kaalamae
Vaekam Varukintarae

Anantha Geethangal Ennalum – ஆனந்த கீதங்கள் எந்நாளும்

Anantha Geethangal Ennalum

பல்லவி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா

சரணங்கள்

1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த

2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த

3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த

4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த

5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் – ஆனந்த

Anbaana Engal Deva Aaviye – அன்பான எங்கள் தேவ

Anbaana Engal Deva Aaviye

அன்பான எங்கள் தேவ ஆவியே
அன்போடு வரவேற்கிறோம் -(2)
அடியார்கள் நாங்கள்
ஒரு மனத்தோடே உம்மை
அன்போடு வரவேற்கிறோம் -(2)

ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க
அப்பா பிதாவே என்று அழைக்க (2)
அபிஷேக நாதரே வரவேற்கிறோம்
அன்போடு வரவேற்கிறோம் (2)

பக்தி விருத்தியடைந்து
நாங்கள் பாடித் துதித்திட
பரிசுத்தமாகி தேவனை ஆடிப்பாடிட (2)
பரிசுத்த ஆவியே உம் பெலன் வேண்டுமே
அன்போடு வரவேற்கிறோம் (2)

பாவசாப ரோகங்கள் ஓடிப்போய்விட
தேவ சாயலாக நாங்கள் தினம் மாறிட (2)
ஆவியாலே கனி தந்து தினம் வாழ்ந்திட
அன்போடு வரவேற்கிறோம் (2)

Anbaana engal dhaeva aaviyae
Anboadu varavaerkiraom (2)
Adiyaargal naangal
Oru manaththoadae ummai
Anboadu varavaerkiraom (2)

Aaviyoadum unmaiyoadum aaraadhikka
Appaa pidhaavae endru azhaikka (2)
Abishaega naadharae varavaerkiraom
Anboadu varavaerkiraom (2)

Bakthi viruthiyadaindhu
naangal paadi thudhithida
Parisuthamaagi dhaevanai aadipaadida (2)
Parisutha aaviyae um belan vaendumae
Anboadu varavaerkiraom (2)

Paavasaaba roagangal oadippoaivida
Dhaeva saayalaaga naangal dhinam maarida (2)
Aaviyaalae kani thandhu dhinam vaazhndhida
Anboadu varavaerkiraom (2)

Enakkaga Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து

Enakkaga Yavaiyum Seithu
எனக்காகவே யாவையும்
செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும்

சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)

நான் எனது பிள்ளைக்கு
நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும்
கொடுத்திடுவாரே (2)
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)

அன்றாடம் வேண்டிய
ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே (2)
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)

ஆபிரகாமை அழைத்தீரே
ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும் ஆசிர்வதியும் (2)
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)

Enakkaagavae yaavaiyum
Seidhu mudittheer
Nandri nandri aiyaa
En paavangal yaavaiyum

Sumandhu kondeerae
Nandri nandri aiyaa

Ninaippadharkum jebipadharkum
Adhigamaaga tharubavarae (2)

Naan enadhu pillaikku
Nalla eevai kodukkindraen
Parama pidhaa adhaippaarkkilum
Kodutthiduvaarae (2)
Ninaippadharkum jebipadharkum
Adhigamaaga tharubavarae (2)

Andraadam vaendiya
Aagaaram thaarumae
Theemai ennai anugaamal
Kaakkum dhaevanae (2)
Ninaippadharkum jebipadharkum
Adhigamaaga tharubavarae (2)

Aabirakaamai azhaittheerae
Aaseervaadham koduttheerae
Adhu poala ennaiyum
Aasirvadhiyum (2)
Ninaippadharkum jebipadharkum
Adhigamaaga tharubavarae (2)

Yesu Ennai Kaividamatar – இயேசு என்னை கைவிடமாடார்

Yesu Ennai Kaividamatar
இயேசு என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்
அவர் என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்
அவர் என்னை கைவிடமாடார்

இயேசு என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது
அவர் என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது
இயேசு என்னை கைவிடவில்லை

Ulagin Oliye Unmaiyin Vilakke – உலகின் ஒளியே உண்மையின்

Ulagin Oliye Unmaiyin Vilakke

உலகின் ஒளியே உண்மையின் விளக்கே
உயிரினில் கலந்திட வா
மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை
மாண்புறச் செய்திட வா (2)
இயேசு பாலனே இதயம் வாருமே
மனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா

இருள் வாழ்வை அகற்றிட வருவீர்
புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (2)
பல கோடி உள்ளங்கள் மகிழ
நீர் பகலவனாய் உதித்திடுவீர் (2)
எந்தன் உள்ளம் உன்னைப் பாடும்
என்றும் உந்தன் உறவைத் தேடும்
என் உயிரே வருவீர் – உலகின்

புகழ் தேடி அலைகின்ற போது என்னில்
புதுவாழ்வை அளித்திட வருவீர் (2)
கரைசேரா ஓடங்கள் ஆனோம்
நீர் கரை சேர்க்கும் துடுப்பாவீர் (2)
உந்தன் வரவால் உள்ளம் மகிழும்
எந்தன் உயிரும் உம்மில் இணையும்
விண்மலரே வருவீர் – உலகின்

Poorana Alagullavare – பூரண அழகுள்ளவரே

Poorana Alagullavare

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

அனுபல்லவி
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

சரணங்கள்
1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன்

2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன்

3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் – போற்றுவேன்

Ummodu Pesa Enakoru – உம்மோடு பேச எனக்கொரு

Ummodu Pesa Enakoru
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)
என் உள்ளம் கவர்ந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
இயேசைய்யாஇயேசைய்யா
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை

எந்நாளும் உம் அருகே
நான் ஓடோடி வந்திடுவேன்
பொல்லாத இவ்வுலகில்
உம்மையல்லாமல் யாருமில்லை (2)
என் நேசரே என் இராஜனே
உம்மார்பினில் நான் சாய்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு

கல்லான என் மனசு
உம் சொல்லால உருகியது
பூவான என் உசுறு
புது பாமாலை பாடிடுது (2)
என் தேவனே என் ஜீவனே
உம் நன்மைகள் நான் சொல்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு

Thudhipen Ummai – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்

Thudhipen Ummai

துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
மகிமை செலுத்தித் துதிப்பேன் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை
அனைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

சோதனை என்னில்
வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில்
வந்த போதும் கிருபை தந்தீர் (2)

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
கண்ணீர் என்னில்
வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை
அனைத்துக் காத்துக் கொண்டீர் (2)

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
புகழும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

Thudhiyum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Kirubaigal ennil
Peruga seidheerae sthoathiram
Um karangalaal ennai
Anaithu kondeerae sthoathiram (2)

Thudhiyum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Soadhanai ennil
Vandha poadhum neer kaatheer
Vaedhanai ennil
Vandha poadhum kirubai thandheer (2)

Magimai ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Kanneer ennil
Vandha poadhum neer thudaitheer
Um karangalaal ennai
Anaithu kaathu kondeer (2)

Magimai ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Pugazhum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Thudhiyum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)