Song Category: Tamil

Kanmalaiyai Noaki Aaraadhipoam – கன்மலையை நோக்கி ஆராதிப்போம்

Kanmalaiyai Noaki Aaraadhipoam

கன்மலையை நோக்கி ஆராதிப்போம்
கன்மலையை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த கன்மலை கிறிஸ்துவே
எங்கள் கன்மலை கிறிஸ்துவே (2)

ராஜாவை நோக்கி ஆராதிப்போம்
தேவனை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த ராஜா இயேசுவே
எங்கள் தேவன் இயேசுவே (2)

எஜமானை நோக்கி ஆராதிப்போம்
எல்ஷடாய் நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த எஜமான் இயசுவே
எங்கள் எல்ஷடாய் இயேசுவே (2)

இரட்சகரை நோக்கி ஆராதிப்போம்
உன்னதரை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த இரட்சகர் இயேசுவே
எங்கள் உன்னதர் இயேசுவே (2)

Kanmalaiyai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (2)
Andha kanmalai kristhuvae
Engal kanmalai kristhuvae (2)

Raajaavai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (2)
Andha raajaa yaesuvae
Engal theavan yaesuvae (2)

Ejamaanai noakki aaraadhipoam
Elshadaai noakki thudhi seivoam (2)
Andha ejamaan yaesuvae
Engal elshaddaai yaesuvae (2)

Ratchagarai noakki aaraadhipoam
Unnadharai noakki thudhi seivoam (2)
Andha ratchagar yaesuvae
Engal unnadhar yaesuvae (2)

Thadukki Vizhundhorai – தடுக்கி விழுந்தோரை

Thadukki Vizhundhorai
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்

தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை (2)

1. போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே (2)
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே (2)

உம் நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை -2

2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர் (2)
கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர் (2) – உம்

3. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன (2)
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் (2) – உம்

4. அன்பு கூறும் எங்களை அரவனைத்து
அதிசயம் செய்கின்றீர் (2)
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர் (2) – உம்

Thadukki vizhundhoarai thangukireer
Thaazhtha pattoarai thookkugireer

Thagappanae thandhaiyae
Umakkuthaan aaraadhanai (2)

1. Poatrudhalukkuriya periyavarae
Thooyavar thooyavarae (2)
Ellaarukkum nanmai seibavarae
Irakkam migundhavarae (2)

Um naamam uyaranumae
Adhu ulagengum paravanumae
Thagappanae thandhaiyae
Umakkuthaan aaraadhanai -2

2. Ummai noakki manraadum yaavarukkum
Arugil irukkindreer (2)
Kooppidudhal kaettu kurai neekkuveer
Viruppam niraivaetruveer (2) – Um

3. Uyirinangal ellaam ummaithaanae
Noakki paarkkindrana (2)
Aetravaelaiyil unavalithu
Aekkamellaam niraivaetruveer (2) – Um

4. Anbu koorum engalai aravanaithu
Adhisayam seigindreer (2)
Patrikkonda yaavaraiyum paadhugaathu
Paraloagam kootti selveer (2) – Um

Manamirangum Dheivam – மனமிரங்கும் தெய்வம்

Manamirangum Dheivam
மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்

2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்

3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்

4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்

Manamirangum dheivam yaesu
Sugam thandhu nadathi selvaar
Yegoavaa raphaa indrum vaazhgindraar
Sugam tharum dheivam yaesu
Sugam indru tharugiraar

1. Paedhuru veettukkul nuzhainthaar -maami
Karathaipidithu thookkinaar
Kaaichchal udanae andru neengitru
Karththar thonduseidhu magizhndhaal

2. Kushtaroagiyai kandaar-yaesu
Karangal neetti thottaar
Sithamundu suthamaagu -endru
Solli sugathai thandhaar

3. Nimira mudiyaadha kooni -andru
Yaesu avalai kandaar
Kaigal avalmaelae vaithaar-udan
Nimirndhu thudhikka seidhaar

4. Piravikkurudan barthimaeyu andru
Yaesuvae irangum endraan
Paarvaiyadaindhu magizhndhaan-udan
Yaesu pinnae nadandhaan

Nirmoolamaagaathiruppathu – நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா

Nirmoolamaagaathiruppathu

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்
கிருபை கிருபை
மாறாத கிருபை

1. கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே – 2
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2

2. கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2

3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2

Nirmoolamaagaathiruppathu undhan maa kirubai
Mudivae illaadhadhu undhan manadhurukkam
Kirubai kirubai
maaraadha kirubai

1.kirubaiyinaalae ratchitheerae
Needhimaanaaga maatrineerae – 2
Uyirththezha seidheer kiristhuvoadae kooda
Unnadhangalil amaraseitheer – 2

2.Kirubaiyin magimaikku pugazhchiyaaga
Sondha pillaiyaai munkuritheerae – 2
Parisutha irathathaal meetpalitheerae
Paavam anaithaiyum mannitheerae– 2

3. Dhaevanin balatha sathuvathaalae
Narseidhi arivikkum thiruthondanaanaen – 2
Kiristhu yaesuvin alavatra selvathai
Arivikkindraen naan kirubaiyinaal – 2

Thaai Kooda Pillaigalai – தாய் கூட பிள்ளைகளை

Thaai Kooda Pillaigalai

தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
நேற்று அல்ல இன்று அல்ல
தாயின் கருவில் தோன்று முன்னே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவன் இயேசு மாறிடாரே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

Indha Mangalam Selikavea – இந்த மங்களம் செழிக்கவே

Indha Mangalam Selikavea

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

Bayanthu Kartharin – பயந்து கர்த்தரின் பக்தி

Bayanthu Kartharin
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Balanai Piranthar

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்

1. உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட – இயேசு

2. விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானிடவதாரமாய்த்
தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு

3. ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு

4. கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு

5. அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு

Dhivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை

Dhivya Anbin Sathathai
திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்

இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா

1. என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன் – இன்னும்

2. திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷமாகிறேன் – இன்னும்

3. இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் – இன்னும்

Devanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள்

Devanai Uyarthi Thuthiyungal
தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனை உயர்த்தி துதியுங்கள்
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி – நம்

1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
ஆரவாரம் என்றுமே

2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்படுத்தினார்

3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு

4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
தன்னில் நம்மை மன்னாதி
மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
சமாதானம் தங்கிடுமே

5. புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
பனிபோல் கிருபையை
பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடும்

6. சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார்