Song Category: Tamil

Unakkagavae Naan Kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன்

Unakkagavae Naan Kaathirukiren

உனக்காகவே நான் காத்திருக்கிறேன்
உள்ளத்தையே நீ தருவாயா-[3]

உனக்காகவே நான் வந்தேனே
உனக்காகவே நான் சிலுவை சுமந்தேன்
உனக்காகவே நான் மரித்தேனே
உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன்

அனுபல்லவி

உனக்காகவே மீண்டும் வருகிறேன்
உனக்காகவே நான் உனக்காகவே
உனக்காகவே – [3] நான் உனக்காகவே – (உனக்காகவே நான்)

சரணங்கள்

1. பாவத்தை எல்லாம் மன்னித்தேனே…
துக்கத்தை எல்லாம் சுமந்தேனே…
நோய்களை எல்லாம் குணமாக்கினேன்….
கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே….- [உனக்காகவே மீண்டும்]

2. உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்….
உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்….
உனக்காக தியாகம் செய்திட்டேனே…
உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்…- [உனக்காகவே மீண்டும்]

Unakaagave Naan Kaathirukkiren
Ullathaiye Nee Tharuvaayaa – 3

Unakaagave Naan Vanthene
Unakaagave Naan Siluvai Sumanthen
Unakaagave Naan Marithene
Unakaagave Naan Uyirthelunthen

Unakaagave Meendum Varugiren
Unakaagave Naan Unakaagave
Unakaagave – 3
Naan Unakaagave (Unakaagave Naan)

1. Paavaththai Ellam Mannithene
Thukkathai Ellam Sumanthene
Noygalai Ellam Gunamaakkinen
Kanneerai Ellam Thudaithittene (Unakaagave Meendum)

2. Unakaaga Paadugal Yetrukonden
Unakaaga Kaayangal Yetrukonden
Unakaaga Thyagam Seithittene
Unakaaga Muttrilum Arpanithen (Unakaagave Meendum)

Yesuve Ummai Paduven Naan – இயேசுவே உம்மை பாடுவேன்

Yesuve Ummai Paduven Naan
இயேசுவே உம்மை பாடுவேன் – நான்
நேசரே உம்மை போற்றுவேன்
உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மை
என்றும் பாடிடுவேன்

1. பாவத்தை போக்க பலியாக வந்த
பரனே உம்மைப் பாடுவேன்
பாவத்தை வெறுத்து பாவியை அணைத்து
பரமனே உம்மை பாடுவேன்
பாரினில் வந்து பழி சுமந்தீரே
பாவ பலியாய் அடிக்கப் பட்டீரே
பரமனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா
உம்மையே நான் பாடுவேன்
சாவினை வென்று சாத்தானை ஜெயித்த
யேசுவே உம்மை பாடுவேன்
சகலமும் படைத்த சீர் இயேசு நாதா
அகிலமும் போற்றும் ஆருயிர் நாதா
தேவனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

3. தேவகுமாரா தேற்றரவாளனே
உம்மையே நான் பாடுவேன்
ஆறுதல் தந்து என்னை தேற்றி
மார்புடனே இருப்பவரே
தேடி வந்த தேவ சுதனே
தன்னையே தந்த தேவாதி தேவா
தினமும் உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

Valla Kirubai Nalla Kirubai – வல்ல கிருபை நல்ல கிருபை

Valla Kirubai Nalla Kirubai
வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை

உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே (2)

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (2)

1. அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல்
கிருபை தாங்கினதே
ஹே முடி கூட கருகாமல்
புகை கூட அணுகாமல்
கிருபை தாங்கினதே

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)

2. பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
கிருபை தாங்கினதே
என் நெருக்கத்தின் நேரத்தில்
நசுங்கி நான் போகாமல்
கிருபை தாங்கினதே

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)

3. வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் காத்த கிருபை

உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே (2)

அல்லே அல்லேலூயா
அல்லே அல்லேலூயா (4)

Valla kirubai nalla kirubai
Vazhuvaamal kaatha suththa kirubai
Akkiniyil vaegaamal kaatha kirubai
Thanneeril moozhgaamal thaangum kirubai

Um kirubai ennai thaangidudhae
Um kirubai ennai nadathidudhae (2)

Allae allae looyah
Allae allae looyah (2)

1. Akkiniyin soolaiyil vendhu vendhu poagaamal
Kirubai thaanginadhae
Hae mudi kooda karugaamal
Pugai kooda anugaamal
Kirubai thaanginadhae

Allae allae looyah
Allae allae looyah (2)

2. Palavidha soadhanai nerukkiya naerangal
Kirubai thaanginadhae
En nerukkaththin naerathil
Nasungi naan poagaamal
Kirubai thaanginadhae

Allae allae looyah
Allae allae looyah (2)

3. Valla kirubai nalla kirubai
Vazhuvaamal kaatha suththa kirubai
Akkiniyil vaegaamal kaatha kirubai
Thanneeril moozhgaamal thaangum kirubai

Um kirubai ennai thaangidudhae
Um kirubai ennai nadathidudhae (2)

Allae allae looyah
Allae allae looyah (2)

Thookki Sumapeerae – தூக்கி சுமப்பீரே

Thookki Sumapeerae
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

1. குழப்பங்கள் என்னை குழப்பும்போது
குழந்தை போல நான் உம் முன் வருவேன்
போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது
யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2)

2. பாரங்கள் என்னை அழுத்தும்போது
உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
யாருமின்றி நான் கலங்கும்போது
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (2)

அல்லேலூயா
அல்லேலூயா (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

Thookki sumapeerae vaazhnaalellaam (2)
Undhan thoalgalil naan kidappaen
Bayamindri vaazhndhiduvaen

1. Kuzhappangal ennai kuzhappum poadhu
Kuzhandhai poala naan um mun varuvaen
Poaraattangal ennai noakki gerjikkum poadhu
Yoodha raaja singathidam adaikalam puguven (2)

2. Baarangal ennai azhuthum poadhu
Um paadhathai naan pidithu kolvaen
Yaarum indri naan kalangum poadhu
En Nanbanaaga neerae ennai nadathi selveer (2)

Halleluiyah
Halleluiyah (2)
Undhan thoalgalil naan kidappaen
Bayamindri vaazhndhiduvaen

Oadivaaroyo Nanbaa – ஓடி வாராயோ நண்பா உன்

Oadivaaroyo Nanbaa
ஓடி வாராயோ நண்பா உன்
நேசர் அழைக்கிறார் இன்றே
இன்றே திரும்புவாய் கண்டு

1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது
அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்
குரலின் பெயரை அழைத்தே
தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடி

2. கள்ளமற்ற அன்பை வார்த்தே
காத்துக் கொள்வதும் அவர் கரம்
ஒன்றுமில்லா தூசி நம்மை
உயர்த்துவதும் அவர் கரம் – ஓடி

3. சீறும் புயலின் தீமை நின்றே
மறைத்து காப்பதும் அவர் கரம்
பாதை மாறிய கால்களுக்கு தீபம்
காட்டும் அவர் கரம் – ஓடி

4. உற்ற உறவும் கைவிட்டாலும்
உரிமை கொள்ளும் அவர் கரம்
உண்மை அறிவும் சிறந்த ஞானமும்
ஏந்தி தருவதும் அவர் கரம் – ஓடி

5. மாமுடி மன்னர் வருகைக்காக
காத்திருக்கும் தாசர்கள்
அன்பின் பிணைப்பில் ஆறுதல் பெற்றே
அழைத்துக் காப்பதும் அவர் கரம் – ஓடி

6. எங்கு பார்த்தாலும் காயம் காயம் தோய்ந்த
ஒளியின் கரங்கள் காணுதே
வந்து பலத்த மார்பில்
சாய்ந்து கொள்ள மாட்டாயோ – ஓடி

Oru Kodi Paadalgal – ஒரு கோடிப்பாடல்கள்

Oru Kodi Paadalgal
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…

ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே

2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)

Ummai Pola Maaranume – உம்மை போல மாறணுமே

Ummai Pola Maaranume
உம்மை போல மாறணுமே இயேசையா

நான் உம்மை போல மாறணுமே -2

உம்மை போல மாற்றிடுமே இயேசையா
எனை
உம்மை போல மாற்றிடுமே -2

1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே

உம்மை போல பரிசுத்தம் தாருமே

பரிசுத்த ஆவியால் நிரப்பியே

பரிசுத்த பாதையில் நடத்துமே

அன்புள்ள மனதுருக்கம் தாருமே

உம்மை போல அன்பாக மாற்றுமே

அன்புள்ள ஆவியால் நிப்பியே

அழகான பாதையில் நடத்துமே

2. சாந்தமும் தாழ்மையும் தாருமே

உம்மை போல மன்னிக்க உதவுமே

ஞானத்தின் ஆவியால் நிரப்பியே

பரலோக பாதையில் நடத்துமே

ஜெபத்தின் ஆவியை தாருமே

உம்மை போல ஆத்ம பாரம் தாருமே

மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே

உந்தனின் பாதையில் நடத்துமே

Ummai poala maaranumae yaesaiyyaa
Ummai poala maaranumae – 2
Ummai poala maatridumae yaesaiyyaa
Ummai poala maatridumae – 2

Parisuththam parisuththam parisuththam thaarumae
Ummai poala parisuththam thaarumae
Parisuththa aaviyaal nirappiyae
Parisuththa paadhaiyil nadathumae
Anbulla manadhurukkam thaarumae
Ummai poala anbaaga maatrumae
Anbulla aaviyaal nirappiyae
Azhagaana paadhaiyil nadathumae

Saanthamum thaazhmaiyum thaatumae
Ummai poal mannikka udhavumae
Gnaanathin aaviyaal nirappiyae
Paraloaga paadhaiyil nadaththumae
Jebathin aaviyai thaarumae
Ummai poala aathma baaram thaarumae
Mandraattin aaviyaal nirappiyae
Undhanin paadhaiyil nadaththumae

Kalanguvathen Kanneer – கலங்குவதேன் கண்ணீர்

Kalanguvathen Kanneer
கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

நேசரின் கரங்களே தேற்றுமே

இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்

உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்

அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்

கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..

புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்

அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்

நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்

நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்

தோல்வியில் ஜெயம் தருவார்

வியாதியில் சுகம் தருவார்

Kalanguvadhaen kanneer viduvadhumaen
Naesarin Karangalae thaetrumae
Yaesuvin kaayangal aatrume

Saorndhu paona un ullam paarkkiraar
Udaindhupaona un nenjam kaangiraar
Azhaiththa dhaevan unnai nadaththi selvaar
Kaneergal thudaippaar kavalaigal maatruvaar
Pudhu jeevan ootruvaar pudhu sirushtiyaakkuvaar

Avarukkaana un izhappugal paarkkiraar
Avarukkaana un alaichchalgal kaangiraar
Needhi dhaevan unakku niyaayam seivaar
Nichchayam palan tharuvaar urudhiyaai uyarththiduvaar
Thoalviyil jeyam tharuvaar
Viyaadhiyil sugam tharuvaar

Azhaithavare Azhaithavare – அழைத்தவரே! அழைத்தவரே!

Azhaithavare Azhaithavare
அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே

1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே

2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே

Valla Kirubai Nalla

Valla Kirubai Nalla Kirubai
Vaaluvaamal Kaatha Sutha Kirubai
Akkiniyil Vegaamal Kaatha Kirubai
Thanneerilae Moolgaamal Thaangum Kirubai-2x

Um Kirubai Ennai Thaangidudhae
Um Kirubai Ennai Nadathidudhae -2x
Halle Halle Lujah Halle Halle Lujah
Halle Halle Lujah Halle Halle Lujah-2x

1. Akkiniyil Soolayil Vendhu Vendhu Pogaamal
Kirubai Thaanginadhae
En Mudi Kooda Karugaamal
Pugai Kooda Anugaamal
Kirubai Thaanginadhae-2x
Halle Halle Lujah Halle Halle Lujah
Halle Halle Lujah Halle Halle Lujah-2x

2. Paala Vidha Sodhanai Nerukkiya Naerangal
Kirubai Thaanginadhae
En Nerukkathin Naerathil Nasungi Naan Pogaamal
Kirubai Thaanginadhae-2x
Halle Halle Lujah Halle Halle Lujah
Halle Halle Lujah Halle Halle Lujah-2x