Azhaithavare Azhaithavare
அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே
1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே
2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே
Chinna Manushanukkulla
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்
1. தெருவில் பேதுருவைத் தேடி
ஓடி வந்ததே ஓர் கூட்டம்
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாமப் போனதையா ஓடி
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
2. பெரிய ராட்சதனை பார்த்து
ஓடி ஒளிந்ததையா Army
கூலா வந்தானையா தாவீது
கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு – 2
இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு – 2
இது ஒப்பில்லாத அன்பு.. பூரண அன்பு (2) (…இயேசுவின்)
1. குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு – 2
ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு – 2 (…இது ஒப்பில்லாத)
2. மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட மஹா பெரிய அன்பு – 2
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு – 2 (…இது ஒப்பில்லாத)