Aananthame Aananthame – ஆனந்தமே! ஆனந்தமே!

Aananthame Aananthame

ஆனந்தமே! ஆனந்தமே! ஆனந்தமே!
அப்பா உந்தன்
சமூகத்திலே அனந்தமே!

1. எனக்காக மரித்தீரே நன்றி ஐயா!
எனக்காக உயிர்த்தீரே நன்றி ஐயா!
பாவமெல்லாம் மன்னித்தீரே நன்றி ஐயா!
புதுவாழ்வு எனக்குத் தந்தீர் நன்றி ஐயா! – ஆனந்தமே

2. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா!
அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!
ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!
உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – ஆனந்தமே

3. அன்பு காட்டி அரவணைத்தீர் நன்றி ஐயா!
அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!
ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!
உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – அனந்தமே

Aananthamae! Aananthamae! Aananthamae!
Appaa Unthan
Samookaththilae Ananthamae!

1. Enakkaaka Mariththeerae Nanti Aiyaa!
Enakkaaka Uyirththeerae Nanti Aiyaa!
Paavamellaam Manniththeerae Nanti Aiyaa!
Puthuvaalvu Enakkuth Thantheer Nanti Aiyaa! – Aananthamae

2. Kadantha Naatkal Kaaththeerae Nanti Aiyaa!
Aravannaiththu Thaettineerae Nanti Aiyaa!
Aaruthalai Thantheerae Nanti Aiyaa!
Ummai Aaraathikka Vaiththeerae Nanti Aiyaa! – Aananthamae

3. Anpu Kaatti Aravannaiththeer Nanti Aiyaa!
Aravannaiththu Thaettineerae Nanti Aiyaa!
Aaruthalai Thantheerae Nanti Aiyaa!
Ummai Aaraathikka Vaiththeerae Nanti Aiyaa! – Ananthamae

Anbaai Nadathum Aaviye – அன்பாய் நடத்தும் ஆவியே

Anbaai Nadathum Aaviye

அன்பாய் நடத்தும் ஆவியே
ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த
வல்லமையின் ஆவியே
விடுதலையின் ஆவியே
வந்து எம்மை அபிஷேகியும்

1. அற்புதங்கள் நடக்கணும்
அதிசயத்த பாக்கணும்
ஆத்துமாக்கள் பெருகிடணும்
அஸ்திபாரம் அசையணும்
அந்தகாரம் ஒழியணும்
இயேசுவையே அறியவேண்டும் – அரவணைக்கும்

2. யோசுவாக்கள் எழும்பணும்
எலியாக்கள் பெருகணும்
கிதியோன்கள் புறப்படணும்
எஸ்தர்கள் எழும்பணும்
எரிகோக்கள் உடையணும்
ஏசு தேவன் என்று முழங்கணும் – அரவணைக்கும்

Agilathai Aalum Deivam – அகிலத்தை ஆளும் தெய்வம்

Agilathai Aalum Deivam

அகிலத்தை ஆளும் தெய்வம்
ஆண்டவர் இயேசுவையே
ஆர்வமுடன் தொழுவோம்-2

வானமும் பூமியை
வார்த்தையால் படைத்தவரை
வாருங்கள் நாம் தொழுவோம்-2

1. பாவத்தை சாபத்தை
நோய் பிணியை அகற்ற
பாரினில் வந்துதித்தாரே
பரலோக மைந்தன் அவர்
பரிசுத்த தேவன் அவர்
ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை

2. வழிதப்பி போன நம்மை
வழிகாட்டும் மேய்ப்பனாக
பாரினில் வந்துதித்தாரே
அவரே நம் இருள் நீக்கும்
ஒளியாக வந்த தெய்வம்
ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை

Intha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை

Innaal Varaiyil

இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
இனிமேலும் என்னை நடத்துவார்
ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
எந்தன் அன்பு இயேசுவே – இந்த

1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
துன்பம், துக்கம், துயரம் என்னை
சூழ்ந்து கொண்ட வேளையில்
துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த

2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
என்று நான் குழம்பி,
அலைந்து துடித்த வேளையில்
உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே – இந்த

3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
எங்களை வாட்டின வேளையில்
இனியும் இந்த நிந்தைகள்
பூமியில் இராதபடி
முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே – இந்த

Vazhi Nadathum Valla Devan Undu – வழிநடத்தும் வல்ல தேவன் உண்டு

Vazhi Nadathum Valla Devan

வழிநடத்தும் வல்ல தேவன்
உண்டு மகனே(ளே)
உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார்
கலங்கிடாதே

1. கல்லானாலும் முள்ளானாலும்
கர்த்தர் இயேசு நடத்திடுவார்
காடானாலும் மேடானாலும்
கர்த்தர் இயேசு சுமந்திடுவார்
அவர் கரம்பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

2. வியாதி வியாகுலமோ?
பசியோ நிர்வாணமோ?
நிந்தைகளோ? அவமானமோ?
நாயகன் இயேசு நடத்திடுவார்
அவர் கரம் பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

Ummaiyandri Yaarundu – உம்மையன்றி யாருண்டு

Ummaiyandri Yaarundu

உம்மையன்றி யாருண்டு
உலகினில் எனக்கு
உயிருள்ள இயேசுவே
உதவிட வாருமே – உம்மையன்றி

உலகமும் மாயை ஐயா
உற்றாரும் மாயை ஐயா
செல்வமும் மாயை ஐயா
செல்வாக்கும் மாயை ஐயா-2

நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
நீரே என் கன்மலையே – உம்மையன்றி

பணமும், பதவிகளும்
படிப்பும், பட்டங்களும்
பதவியும், பந்தங்களும்
நிலையற்ற தல்லவே-2

நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
நீரே என் கன்மலை – உம்மையன்றி

Anbe Thooya Anbe – அன்பே தூய அன்பே

Anbe Thooya Anbe

அன்பே தூய அன்பே
உந்தன் மறுபெயர் இயேசுவோ
உந்தன் நீளம், உந்தன் அகலம்
உந்தன் ஆழம், உந்தன் உயரம்
அதை அளவிட முடியாதய்யா
அதை இயேசுவே தருவாரய்யா – அன்பே

1. உலகம் உன்னை வெறுத்திட்டாலும்
உற்றார் உன்னை பகைத்திட்டாலும்
அவர் அன்பென்றும் வெறுக்காதையா
அந்த அன்பொன்றே அழியாதைய்யா – அன்பே

2. சகலமும் அன்பு சகிக்கும்
சகலமும் அந்த அன்பு தாங்கும்
அந்த அன்பொன்றே மேலானது
அந்த அன்பையே நாடிடுவோம் (வாய்) – அன்பே

Thuthippen Thuthippen – துதிப்பேன் துதிப்பேன்

Thuthippen Thuthippen

துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டிருப்பேன்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் வணங்குவேன்
வல்லவர் இயேசுவே – துதிப்பேன்

1. சூரியனே சந்திரனே
வான்வெளி நட்சத்திரமே
இயேசுவை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் அன்பு என்றும் மாறாதது – துதிப்பேன்

2. மலைகளே குன்றுகளே
மலர்களே மச்சங்களே
இயேசுவைத் துதியுங்கள்
அற்புதர் அற்புதரே அவர்
அதிசயமானவரே – துதிப்பேன்

3. வாலிபரே கன்னியரே
பிள்ளைகளே பெரியவரே
இயேசுவைத் துதியுங்கள்
கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர்
ராஜாதி ராஜன் தானே – துதிப்பேன்

Kanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே

Kanmalaiyin Kural Ithuve

கன்மலையின் குரல் இதுவே
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி

2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி

Neethiman Selithu Vaalvan – நீதிமான் செழித்து வாழ்வான்

Neethiman Selithu Vaalvan
நீதிமான் செழித்து வாழ்வான்
நீதிமான் பனையைப் போல
செழித்து வாழ்வான்
லீபனோனின் கேதுருவாய்
வளருவான் (2)

1. தீமையை வெறுத்திடுங்கள்
நன்மையே செய்திடுங்கள்
கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி

2. கலங்கிடாதிருங்கள்
கண்ணீர் விடாதிருங்கள்
கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி

3. சிறுமைப்பட்ட நாட்கள்
துன்பத்தின் வருடங்கள்
சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி

4. ஆகாரத்தை தண்ணீரில் போடு
அநேக நாள் பிறகு அதின் பலனை
களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி