Magimayaalae Kalikoorungal – மகிமையாலே களிகூருங்கள்

Magimayaalae Kalikoorungal
மகிமையாலே களிகூருங்கள்
அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்

கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர்
கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – மகிமையாலே

1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்
ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் – கிருபை

2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்
கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள் – கிருபை

3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்
வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள் – கிருபை

Magimayaalae Kalikoorungal
Avar Thuthigalai Solli Paadungal

Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
Endru Solli Aarpariyungal – Avar
Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
Endru Solli Aarpariyungal – Magimayaalae

Neer Nallavar Sarva Vallavar – நீர் நல்லவர் சர்வ வல்லவர்

Neer Nallavar Sarva Vallavar
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தெய்வமில்லை
அல்லேலூயா – அல்லேலூயா – 2

1. பாவியான என்னையும் – உம்
பிள்ளையாய் மாற்றினீர் – நீர்

2. என்னை அழைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே – நீர்

3. உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே – நீர்

4. என்னை மறுரூபமாக்கும் – உந்தன்
மகிமையில் சேர்த்திடும் – நீர்

Neer nallavar sarva vallavar
Ummai poal vaeru dheivamillai
Allaelooyaa Allaelooyaa – 2

1. Paaviyaana ennaiyum – um
Pillaiyaai maatrineer – Neer

2. Ennai azhaithavarae
Neer unmaiyullavarae – Neer

3. Undhan parisutha aaviyaal
Ennaiyum niraiththeerae – Neer

4. Ennai ma’uroobamaakkum – undhan
Magimaiyil saerthidum – Neer

Nandriyaal Pongudhe – நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

Nandriyaal Pongudhe

நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய்பல நன்மைகட்காய்
நாள்தோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

நன்றியால் ஸ்தோத்தரிப்போம்

கடந்த வாழ்வில் கருத்துடனே
கண்மணிபோல் நம்மைக் காத்தனரே
கண்ணீர் கவலையினை மாற்றினாரே
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால்

ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதை நடத்தினாரே
ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை அல்லேலூயா

ஜீவனின் அதிபதியை – நன்றியால்

அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள் பல புரிந்தனரே
ஆயிரம் நாவுகள் தான் போதுமா

ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா
ஆண்டவரைத் துதிக்க – நன்றியால்

பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை
பாச கரம் கொண்டு தூக்கினாரே
கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்

கருத்துடன் காத்தனரே அல்லேலூயா
கருத்துடன் காத்தனரே – நன்றியால்

பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி
போர்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்
ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே

நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா
நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்

Nandriyaal pongudhae emadhullam
Naadhan seipala nanmaikadkaai
Naalthoarum nalamudan kaaththanarae
Nandriyaal sthoaththarippoam allaelooyaa
Nandriyaal sthoaththarippoam

Kadandha vaazhvil karuththudanae
ksanmanipoal nammai kaaththanarae
Kanneer kavalaiyinai maatrinaarae
Kanivudan sthoaththarippoam allaelooyaa
Kanivudan sthoaththarippoam – Nandriyaal

Jeevan sugam belan yaavum thandhu
Jeeviya paathai nadaththinaarae
Jeeva kaalamellaam sthoaththarippoam
Jeevanin athipathiyai allaelooyaa
Jeevanin athipathiyai – Nandriyaal

Arputha karam kondu nadaththinaarae
Adhisayangal pala purinthanarae
Aayiram naavugal thaan poadhumaa
Aandavarai thudhikka allaelooyaa
Aandavarai thuthikka – Nandriyaal

Paava saetril amizhntha emmai
Paasa karam kondu thookkinaarae
Kan malaimael nammai niruththi avar
Karuththudan kaaththanarae allaelooyaa
Karuththudan kaaththanarae – Nandriyaal

Poruththanai baligal dhinam seluththi
Poarparan yaesuvai vaazhththiduvoam
Sthoaththira paaththiran yaesuvaiyae
Naeththiramaai thudhippoam allealooyaa
Naeththiramaai thudhippoam – Nandriyaal

Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து

Karthar Nallavar Rusitu
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2

1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2

2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2
அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய் -2

3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2
அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2

Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

Yesu Ratchagar Peyarai
இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே

1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு – இயேசு ரட்சகர்

2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு – இயேசு ரட்சகர்

Enthan Devanal Enthan Devanal – எந்தன் தேவனால்

Enthan Devanal Enthan Devanal
எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன்

2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன்

3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன்

4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் – எந்தன்

Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்

Siluvaiyin Nizhalil

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்

1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்

2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்

Siluvaiyil Nilalil Anuthinam Atiyaan
Saaynthilai Paariduvaen – Aa Aa

Siluvaiyin Anpin Maraivil
Kirupaiyin Iniya Nilalil
Aaththuma Naesarin Arukil
Ataikiraen Aaruthal Manathil – Siluvaiyil

1. Paavap Paarachchumaiyathaal Sornthu
Thalarnthen Jeeviyamae Aa Aa
Siluvaiyanntai Vanthathinaal
Sirantha Santhoshang Kanndathinaal
Ilaippataiyaathu Maelokil
Aekuvaen Paranthae Vaekam – Siluvaiyil

2. Evvitha Kotiya Idarukkum Anjaen
Aesuvai Saarnthu Nirpaen – Aa Aa
Avaniyil Viyaakulam Vanthaal
Avaraiyae Naan Annti Konndaal
Alaimika Mothidum Annaal
Aaruthal Alippathaaych Sonnaar – Siluvaiyil

3. Inpam Suranthidum Thirumoli Kaettae
Innalkal Maranthiduvaen – Aa Aa
Thirumarai Innisai Naatham
Thaeniluminiya Vaetham
Tharumenakkanantha Santhosham
Theerkkumen Ithayaththin Thosham – Siluvaiyil

Neenga Mattum – நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

Neenga Mattum
நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே (2)

1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
அக்கினியில் நடந்த போது – (கடும்) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க

2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க

3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2)
வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) (2)
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) – நீங்க

Neenga mattum illaadhirundhaal
En dhukkathil naan azhindhirupaen (2)
Unga vaarthai mattum thaetraadhirundhaal
Mana sanjalathil marithirupaen (2)
Yaesaiyaa un anbu poadhumae
En naesarae um kirubai poadhumae (2)

1. Thanneergal mathdhiyil nadandha poadhu
Moozhgaamal kaathadhu um kirubaiyappaa (2)
Akkiniyil nadandha poadhu – (Kadum) (2)
Enai meettadhu um kirubaiyappaa (2) – Neenga

2. Nindhaigal avamaanam soozhndha poadhu
Aatriyae anaithadhu um kirubaiyappaa (2)
Vikkinangal soozhndha poadhu – (marana) (2)
Enai meettadhu um kirubaiyappaa (2) – Neenga

3. Annaiyin karuvilae therindhukondu
Immattum kaathadhu um kirubaiyappaa (2)
Vazhithappi alaindha poadhu – (undhan) (2)
Meettu ratchithadhu um kirubaiyappaa (2) – Neenga

Magilchiyodu Thuthikkindrom – மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்

Magilchiyodu Thuthikkindrom
மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா!
எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா, சாரோன் ரோஜா!

1. நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினாரே (2)
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தனாய் (மாய்) மாற்றினீரே (2)
நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும் அன்பு
தெய்வம் நீரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே – மகிழ்ச்சி

2. நெருக்கத்திலே இருந்த என்னை
விசாலத்தில் வைத்தீரே
சேற்றின் நின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமே
இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே – மகிழ்ச்சி

3. அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தாலே கழுவி என்னை
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதமானவரே… உயர்ந்தவரே… இருள்
நீக்கும் ஒளிவிளக்கே
உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே – மகிழ்ச்சி

4. தாயைப்போல் என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ! நல்ல அப்பா அல்லோ!
பிள்ளை அல்லோ! செல்லப்பிள்ளை அல்லோ! – மகிழ்ச்சி

Parisuthar Parisuthar Parisutharae – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

Parisuthar Parisuthar Parisutharae
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவை பணிகின்றேனே

1. பாவியம் என்னையும் நேசித்தீர்
பாசமாய் பாவங்கள் மன்னிதீரே
பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே
பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே

2. பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே
பரிசுத்த பாதையை காட்டிநீரே
பரமனின் சித்தத்தை செய்திடவே
பரலோக ஆவியை தந்தவரே