Engalukule Vasam Seiyum Aaviyanavare
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
வேதவசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)
2. கவலை கண்ணீர் மறக்கணும்..
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே
3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
வழிநடத்தும் ஆவியானவரே
உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து றிறுத்தும் ஆவியானவரே
4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் சூழ்ச்சிகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
Engalukkulle Vaasam Seyyum Aaviyanavare
Innaalil um Siththam pol Nadaththich chellumaiya
Aaviyanavare. . . Aaviyanavare. . . Parisuththa Aaviyanavare
Periyavar Enakkulle
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே…
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே
Thedi Yesu Vanthar
தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்
1. கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
2. பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார்
3. நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் – நான்
4. எத்தனை ஆண்டுகளோ – நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை
Um Pedathai Sutri
உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே, இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா
1. உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
2. உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்
Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்
காத்துக் கொள் காத்துக் கொள்
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை
காத்துக்கொள்
1. பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால்
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அநுதினமும் நடத்திச் செல்வாரே
Umakku Priyamana
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே
Veru Oru Aasai
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
1. உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
2. இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே
3. மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
5. இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
6. செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்