Song Tags: Jesus Redeems Songs

En Nesar Yesuve – என் நேசர் இயேசுவே

En Nesar Yesuve
என் நேசர் இயேசுவே
என் அன்பு இரட்சகா
நீரே வழி நீரே சத்யம்
நீரே எந்தன் தஞ்சம் அன்றோ (2)

உம்மையல்லாமல் எங்கே நான் போவேன்
நீரே என் ஜீவனன்றோ (2)
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

மனிதரின் அன்பால் கைவிடப்பட்டேன்
நோவுக்குள் தள்ளப் பட்டேன்
மாந்தரின் அன்பால் நொருக்கப் பட்டேன்
உம் நேசத்தினால் என்னை அனைத்தீரே
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

Sathikalam Neva Nanbane – சாதிக்கலாம் நீ வா நண்பனே

Sathikalam Neva Nanbane
சாதிக்கலாம் நீ வா நண்பனே
உன்னை பெலப்படுத்து நேசர் இயேசுவாலே
நீயும் சாதனை செய்திடலாம்

1. காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலர்கள் மணம் வீசுதே
உறவுகள் இல்லாத பறவைகள் கூட
மகிழ்வுடன் வாழ்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

2. தேவன் சொல்லாலே உலகினில் உதிக்கும்
ஆதவன் ஓளி வீசுதே
வானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூட
தினமும் ஒளிர்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

Sathikalam Neva Nanbane

Saadhikalaam neevaa nanbanae
Unnai belapaduthu neasar yaesuvaalae
Neeyum saadhanai seidhidalaamae

1.Kaalaiyil malarndhu maalaiyil maraiyum
Malargal manam veesudhae
Uravugal illaadha paravaigal kooda
Magizhvudan vaazhgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal

2.Dhaevan sollaalae ulaginil udhikkum
Aadhavan oli veesudhae
Vaanatthil minnidum vinmeengal kooda
Dhinamum olirgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

Kalvari Sneham

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை (என்றும்)
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும் (இன்னமும்) – 2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் – 2
கும்பிடுவோரை குணமாக்கும் வேகம் (…கல்வாரி)

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண – 2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் – 2
என்னை காணுவோர் உம்மை காணட்டும் (…கல்வாரி)

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா – 2
நான் சிறுகவும் நீர் பெருகவும் – 2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் (…கல்வாரி)

Kalvaari Snegam Karaiththidum Ennai (Endrum)
Kalmanam Maattri Karainthoda Seiyyum – 2

1. Kaalangal Thorum Kaavalil Ullor
Kaanattum Ummai Kalippodu Endrum (Innamum) – 2
Kurusathin Raththam Kural Kodukkattum – 2
Kumbiduvorai Kunamaakkum Vegam (…Kalvaari)

2. Irundathor Vaazhvil Innamum Vaazhvor
Iniyaavathu Um Thirumugam Kaana – 2
Naathaa Um Snegam Perugattum Ennil – 2
Ennai Kaanuvor Ummai Kaanattum (…Kalvaari)

3. Arpamaana Vaazhvu Arputhamaai Maara
Anaiththaiyum Thanthen Aatkollum Devaa – 2
Naan Sirugavum Neer Perugavum – 2
Theebaththin Thiriyaai Eduththaatkollum (…Kalvaari)

Siluvaiyinadiyil Sindhina – சிலுவையினடியில் சிந்தின

Siluvaiyinadiyil Sindhina
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா (2)
உன் தூய இரத்ததால்
என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா (2)

1. சிந்தையின் பாவங்கள் போக்கிட
சிரசினில் முல்முடி அறைந்தனரோ (2)
முட்களால் சிந்தின இரத்தத்தாலே (2)
சிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா

2. திருக்குள்ள இதயத்தைக் கழுவிட
ஈட்டியால் இதயத்தைப் பிளந்தனரோ (2)
மாசில்லா உம் திரு இரத்தத்தாலே (2)
கேடுள்ள இருதயம் கழுவிடுமே (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா

3. கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்
இரத்தத்தில் மூழ்கிட வந்தேனைய்யா (2)
பரிசுத்த வாழ்வினைத் தந்திடுமே (2)
உன் தூய இரத்தத்தால் மூடுமைய்யா (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா

Siluvaiyinadiyil Sindhina Rathathil
Moozhgida vandhaenaiyaa (2)
Un thooya irathathaal
Ennaiyum kazhuvi parisuthamaakkum aiyyaa (2)

1. Sindhaiyin paavangal poakkida
Sirasinil mulmudi araindhanaroa (2)
Mutkalaal sindhina rathathaalae (2)
Sindhaiyai parisutham aakkidumae (2)
Siluvaiyinadiyil sindhina rathathil
Moozhgida vandhaenaiyaa

2. Thirukkulla idhayathai kazhuvida
Eettiyaal idhayathai pilandhanaroa (2)
Maasillaa um thiru rathathaalae (2)
Kaedulla irudhayam kazhuvidumae (2)
Siluvaiyinadiyil sindhina rathathil
Moozhgida vandhaenaiyaa

3. Kolkadhaa maettinil paaidthidum
Rathathil moozgkida vandhaenaiyyaa (2)
Parisutha vaazhvinai thandhidumea (2)
Un thooya rathathaal moodumaiyyaa (2)
Siluvaiyinadiyil sindhina rathathil
Moozhgida vandhaenaiyaa

Endhan Aaththumaave – எந்தன் ஆத்துமாவே கர்த்தரை

Endhan Aaththumaave
எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி
எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி

அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே
கன்மலைமேல் என்னை நிறுத்தினிரே
உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

And on that day when my strength is failing
The end draws near and my time has come
Still my soul will sing Your praise unending
Ten thousand years and then forever more

Bless the Lord, O my soul
O my soul
Worship His holy name
Sing like never before
O my soul
I worship His holy name

*********************

Endhan aaththumaave karththarai thudhi karththaraiyae thudhi
Endhan muzhu ullamae avar naamaththaiyae endrendrum sthoaththari

Anbin karaththaalae thookki eduththeerae
Kanmalaimael ennai niruththinirae
Ummaith thuthiththidum puthu paadal thandheerae
Aayiram naavugal poadhaadhae – Endhan

Nanmai kirubaiyinaal mudisoottineer enaiyae
Thoodharilum maelaai uyarththineerae
Um nanmaiyai ninaiththu naan endrum thudhippaen
Aayiram naavugal poadhaadhae – Endhan

Naatkal nagarndhittaalum kaalam kadandhittaalum
Karththarae neer endrum maaraadhavar
Un kirubaiyai endrum enni naan thudhippeanae
Aayiram naavugal poadhaadhae – Endhan

Siluvai Naadhar Yesuvin – சிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Naadhar Yesuvin
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன

1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்

2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்

3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்

4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர்

Siluvai Naadhar Yaesuvin
Paeroli Veesidum Thooya Kangal
Ennai Noakki Paarkkindrana
Tham Kaayangalai Paarkkindrana

1. En Kaiyaal Paavangal Seidhittaal
Tham Kaiyin Kaayangal Paarkkindraarae
Theeya Vazhiyil En Kaalgal Sendraal
Tham Kaalin Kaayangal Paarkkindraarae – Siluvai Naadhar

2. Theettulla Ennam En Idhayam Kondaal
Eetti Paaindha Nenjai Noakkukindraar
Veenperumai Ennil Idampetraal
Mulmudi Paarththida Aengukindraar – Siluvai Naadhar

3. Avar Rattham En Paavam Kazhuvidum
Avar Kanneer Ennai Merugaetridum
Kalangarai Vilakkaaga Oli Veesuvaen
Kalanguvoarai Avar Mandhai Saerpaen – Siluvai Naadhar

4. Thirundhidaa Paavikkaai Azhukindraar
Varundhidaa Pillaikkaai Kalangukindraar
Tham Kanneer Kaayaththil Vizhundhida
Kanneerum Ratthamum Sindhukindraar – Siluvai Naadhar