Sathiya Saatchiyaaga Nadappathe Pothum
சத்திய சாட்சியாக நடப்பதே போதும்
நித்திய ராஜ்ஜியம் அடைவதே போதும் – 2
ஜீவனை பார்க்கிலும் கிருபையே போதும்
தேவ பக்தியாய் நானும் வாழ்வதே போதும் – 2
1. கர்த்தரை பாடி நான் துதிப்பதே போதும்
காத்திருந்தே தினம் ஜெபிப்பதே போதும் – 2
துன்புற்ற நேரம் துணை இயேசு போதும்
தம் திரு பாதத்தில் ஆறுதல் போதும் – 2 (…சத்திய)
2. கர்த்தரின் வருகையில் பறப்பதே போதும்
கர்த்தரிடம் நானும் சேர்வதே போதும் – 2
வையகம் வேண்டாம் பரலோகம் போதும்
வானவர் இயேசுவை காண்பதே போதும் – 2 (…சத்திய)
உன்னதத்தை நோக்கும் பாதை இன்னிலத்தை தாண்டுதே
என்னை இயேசு தம் பக்கம் இழுத்து கொள்கின்றார்.
எத்தனையோ பயங்கரங்கள் எந்தன் யாத்திரையில்
அத்தனையும் மேற்கொண்டேன் நான் இயேசு நாமத்திலே
ஆண்டவர் என்னோடிருந்து என்னை அதரித்தார்
ஆவி ஆத்துமா தேகம் யாவும் முற்றும் ஒப்படைத்தேன் – உன்னதத்தை
என்னிலே விசுவாசத்தையும் தொடங்கினார் இயேசு
எப்படியும் வெற்றியாக அதை முடித்திடுவார்
ஓடுகின்றேன் பொறுமையோடு இயேசுவை நோக்கி
ஜீவ கிரீடம் சூடிடுவேன் தேவ சந்நிதியில் – உன்னதத்தை
Parisuthar Yesu
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
புகழ் செலுத்தி மகிழ்வோம்
அன்றதி காலை மூன்றாம் நாளில்
சொன்னபடி எழுந்தார்
1. சடுதி பூமி அதிர்ந்ததே
சரீரம் வைத்த கல்லறை
அற்புதமாகத் திறந்திடவே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
தேவனின் வல்ல செயலிதுவே
தேவனால் கூடாததொன்றுமில்லை
கலங்கிடாமல் நம்பிடுவோம்
கைவிடமாட்டார் கடைசி வரை – பரிசுத்தர்
Ananthamai Inba Kanaan
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் – 2
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்.. ஆனந்தமாய்
1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்.. ஆனந்தமாய்
2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்.. ஆனந்தமாய்
3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால் ஆசை இப்பூவில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே.. ஆனந்தமாய்
4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண் பாரும் என்றும் நான் உம் அடிமை.. ஆனந்தமாய்
5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்.. ஆனந்தமாய்
3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே
4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே