Kartharai Nambiye Jeevippom
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் – 2
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம் – 2
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் (…கர்த்தரை)
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை – 2
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் (…கர்த்தரை)
3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் – 2
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் (…கர்த்தரை)
4. அன்பு மிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம் – 2
தம் மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார் (…கர்த்தரை)
5. நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே – 2
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே (…கர்த்தரை)
6. இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம் – 2
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை இராஜ்ஜியத்தில் (…கர்த்தரை)
Karththarai Nambiye Jeevippom
Kavalai Kastangal Theernthidum
Kaividaa Kaaththidum Paramanin
Karangalai Naam Pattri Kolvom – 2
1. Jeeva Devan Pin Selluvom
Jeeva Olithanai Kandadaivom – 2
Manathin Kaarirul Neengidave
Maa Samaathaanam Thangum (…Karththarai)
2. Unmai Vazhi Nadanthidum
Uththamanukkendrum Karththar Thunai – 2
Kangal Avan Meethu Veiththiduvaar
Karuththaai Kaaththiduvaar (…Karththarai)
3. Ullamathin Baarangalai
Ookkamaai Karththaridam Solluvom – 2
Ikkattu Neraththil Kooppiduvom
Yesu Vanthaatharippaar (…Karththarai)
4. Anbu Migum Annalivar
Arumai Yesuvai Nerunguvom – 2
Tham Mandai Vanthorai Thallidaare
Thaangi Anaiththiduvaar (…Karththarai)
5. Neethimaanin Sirasin Mel
Niththiya Aasir Vanthirangume – 2
Kirubai Nanmaigal Thodarume
Ketpathu Kidaikkume (…Karththarai)
6. Immaikkettra Inbangalai
Nammai Vitte Muttrum Agattruvom – 2
Maaraatha Santhosam Thediduvom
Marumai Raajjiyaththil (…Karththarai)
I love this song because Whenever i have been hopeless in my life, this song will feed hope for me. “Jesus never give up me”
Amen….Trust in Jesus alone