Poovinil Vanthan Vin Theyne!
பூவினில் வந்த விண் தேனே இவ்வேழையைப்
பாதத்தில் சேர்ப்பதற்காய்
இந்த காசினி மீதிலே ஞானப் பொன்னரசே
பானமாய் தீர்ந்தனீரோ? – இராஜா
1. கெத்சமனேயிலே தங்கமே உந்தனின்
அங்கத்தின் வேர்வையாலே – இராஜா
தேவ சங்கத்தின் மத்தியில் பங்கம் இல்லாமல் நான்
துங்கனாய் வாழ்ந்திடவோ? – இராஜா – பூவினில்
2. சேவகர் இயேசுவை கள்ளனைப் போலுமே
வதைத்து உதைத்தனரோ? – ரோம
கன மேலோக மத்தியில் வாதை இல்லாமல் நான்
கானங்கள் செய்திடவோ? – இராஜா – பூவினில்
3. ஒன்னார்கள் யூதரும் மன்னவா உந்தனின்
கண்களைக் கட்டினாரோ? – இராஜா
எந்தன் பாவக் கண்கள் இல்லா ஞானக் கண்களினால்
விண் புறா ஆகிடவோ – இராஜா – பூவினில்
4. கல்வாரிப் பாதையில் பாரச் சிலுவையை
நொந்து சுமந்தனீரோ?
மணப்பந்தரின் மத்தியில் சிந்தை பாரம் நீங்கி
சோபை நான் ஆகிடவோ? – இராஜா – பூவினில்
5. தலையோட்டு மேட்டிலே வண்டக் கள்ளர்களின்
மத்தியில் தொங்கினீரோ? – இராஜா
நவஜோதி பிரகாசமாய் தங்க மாளிகையில்
நான் அங்குலாவிடவோ? – இராஜா – பூவினில்
Poovinil Vantha Vin Thaenae Ivvezhaiyai
Paathathil Serpatharkkaai
Intha Kaasini Meethile Gnana Ponnarasae
Paanamaai Theernthaneero – Raja
1. Gethsamanaiyile Thangame Undhanin
Angaththin Vervaiyaale – Raja
Deva Sangaththin Maththiyil Bangam Illaamal Naan
Thunganaai Vaazhnthidavo – Raja (…Poovinil)
2. Sevagar Yesuvai Kallanai Polume
Vadhaiththu Udhaiththanaro? – Roma
Gana Maeloga Maththiyil Vaadhai Illaamal Naan
Gaanangal Seithidavo – Raja (…Poovinil)
3. Onnaargal Yutharum Mannavaa Unthanin
Kangalai Kattinaaro – Raja
Enthan Paava Kangal Illaa Gnaana Kangalinaal
Vin Pura Aagidavo – Raja (…Poovinil)
4. Kalvaari Paathaiyil Baara Siluvaiyai
Nonthu Sumanthaneero
Manapantharin Maththiyil Sindhai Baaram Neengi
Sobai Naan Aagidavo – Raja (…Poovinil)
5. Thalaiyottu Maettile Vanda Kallarkalin
Maththiyil Thongineero – Raja
Navajothi Pragaasamaai Thanga Maaligaiyil
Naan Angulaavidavo – Raja (…Poovinil)