Aathumave Nandri Sollu – ஆத்துமாவே நன்றி சொல்லு

Aathumave Nandri Sollu
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே – என் – 2

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒரு நாளும் மறவாதே – 2 (…ஆத்துமாவே)

1. குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே – 2
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2 (…கர்த்தர் செய்த)

2. கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார் – 2
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார் – 2 (…கர்த்தர் செய்த)

3. இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம் – 2
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – நாம் – 2 (…கர்த்தர் செய்த)

4. கர்த்தர் தம் வழிகளெல்லாம்
மோசேக்கு வெளிப்படுத்தினார் – 2
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார் – 2 (…கர்த்தர் செய்த)

5. எப்போதும் கடிந்து கொள்ளார்
என்றென்றும் கோபம் கொண்டிரார் – 2
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே – 2 (…கர்த்தர் செய்த)

6. தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
தயவு காட்டுவது போல் – 2
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார் – 2 (…கர்த்தர் செய்த)

7. அவரது பேரன்பு
வானளவு உயர்ந்துள்ளது – 2
கிழக்கு மேற்கு தூரம் போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள் – 2 (…கர்த்தர் செய்த)

Aaththumave Nandri Sollu
Muzhu Ullathode – En – 2

Karthar Seidha Nanmaigalai
Oru Naalum Maravadhe – 2 (…Aaththumave)

1. Kuttrangalai Mannithare
Noigalai Neekkinaare – 2
Padukuzhiyinindru Meettaare
Jeevanai Meettaare – 2 (…Karthar Seidha)

2. Kirubai Irakkangalaal
Manimudi Soottugindraar – 2
Vaazhnaalellaam Nanmaigalaal
Thirupthi Aakkugindraar – 2 (…Karthar Seidha)

3. Ilamai Kazhugu Pola
Pudhidhaakki Magizhgindraar – Nam – 2
Odinaalum Nadandhaalum
Belan Kuraivadhillai – Naam – 2 (…Karthar Seidha)

4. Karthar Tham Vazhigalellaam
Mosekku Velippaduththinaar – 2
Adhisaya Seyalgal Kaanach Cheidhaar
Janangal Kaanach Cheidhaar – 2 (…Karthar Seidha)

5. Eppodhum Kadindhu Kollaar
Endrendrum Kobam Kondiraar – 2
Kuttrangalukkerppa Nadaththuvadhillai
Manniththu Marandhaare – 2 (…Karthar Seidha)

6. Thagappan Than Pillaigal Mel
Dhayavu Kaattuvadhu Pol – 2
Karunai Irakkam Kaattugiraar
Maravaamal Ninaikkindraar – 2 (…Karthar Seidha)

7. Avaradhu Peranbu
Vaanalavu Uyarndhulladhu – 2
Kizhakku Merkku Dhooram Pola
Agattrivittaar Nam Kuttrangal (…Karthar Seidha)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *