Kangallai Pathiyavaipom
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்
1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறித் தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
2. இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
3. தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்
சோர்ந்து போகமாட்டோம்
4. ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் -நம்
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு
5. மேகம் போன்ற சாட்சிகள்
நம்மை சூழ்ந்து நிற்க
நியமித்த ஓட்டத்திலே
ஓடுவோம் பொறுமையோடு