Manavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு

Manavalan Karthar Yesu
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?

பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்

1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே

2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே

3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே

One thought on “Manavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *