Mun Sellum Megame
முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே (2)
ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே – (2)
1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2)
ஆவியானவரே – (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே (2)
2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)
ஆவியானவரே – (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
ஆவியானவரே – (2)