Naan Anaathai Endru Aluthaen
நான் அனாதை என்று அழுதேன்
நீ அனாதையில்லை எந்தன்
சொந்தம் என்றீர் ஐயா
அனாதை என்று அழுதேன்
1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன்
கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
மகிமை செலுத்திடுவேன்
2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
நான் கதறி முறையிட்டு அழுதேன்
கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்
3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை
அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்