Ootru Thanneere – ஊற்றுத் தண்ணீரே

Ootru Thanneere

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா – 2
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே – 2
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் – 2

1. கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே – 2
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் – 2
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே – 2 (…ஊற்றுத்)

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர் – 2
கனி தந்திட நான் செழித்தோங்கிட – 2
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட – 2 (…ஊற்றுத்)

3. இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே – 2
ஆத்ம பாரமும் பரிசுத்தமும் – 2
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே – 2 (…ஊற்றுத்)

4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே – 2
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட – 2
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட – 2 (…ஊற்றுத்)

5. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புது பெலனடைந்து நான் மகிழ்ந்திடவே – 2
பரிசுத்தத்தை நான் பயத்துடனே – 2
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே – 2 (…ஊற்றுத்)

Ootru Thanneere Enthan Dheva Aaviye
Jeevanadhiye Ennil Pongi Pongi Vaa – 2
Aasirvathiyum En Nesa Karthare – 2
Aaviyin Varangalinaal Ennai Nirappum – 2

1. Kanmalaiyai Pilanthu Vanaanthiraththile
Karthaave Um Janangalin Thaagam Theerththeere – 2
Pallaththaakkilum Malaigalilum – 2
Thanneer Paayum Dhesathai Neer Vaakkalitheere – 2 (… Ootru)

2. Jeevath Thanneeraam Enthan Nalla Karthaave
Jeeva Ootrinaal Ennai Niraithiduveer – 2
Kani Thanthida Naan Sezhiththongida – 2
Kartharin Karathil Niththam Kanam Pettrida – 2 (… Ootru)

3. Ratchippin Ootrugal Enthan Sabaithanile
Ezhumbida Intha Velai Irangidume – 2
Aathma Baaramum Parisuthamum – 2
Aavaludan Pettridave Varam Thaarume – 2 (… Ootru)

4. Thirakkapattadhaam Ootru Siluvaiyile
Ratchagarin Kayangal Velippaduthe – 2
Paavakkaraigal Muttrum Neengida – 2
Parisuthar Samoogaththil Jeyam Pettrida – 2 (… Ootru)

5. Kirubaiyin Ootrugal Perugidave
Pudhu Belanadainthu Naan Maghizhnthidave – 2
Parisuthaththai Nan Bayaththudane – 2
Pooranamaakkida Dheva Belan Thaarume – 2 (… Ootru)

 

7 thoughts on “Ootru Thanneere – ஊற்றுத் தண்ணீரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *