Parisuthar Yesu
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
புகழ் செலுத்தி மகிழ்வோம்
அன்றதி காலை மூன்றாம் நாளில்
சொன்னபடி எழுந்தார்
1. சடுதி பூமி அதிர்ந்ததே
சரீரம் வைத்த கல்லறை
அற்புதமாகத் திறந்திடவே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
தேவனின் வல்ல செயலிதுவே
தேவனால் கூடாததொன்றுமில்லை
கலங்கிடாமல் நம்பிடுவோம்
கைவிடமாட்டார் கடைசி வரை – பரிசுத்தர்
2. அழிவைக் காணார் பரிசுத்தர்
அகல பாதாளம் வென்றார்
பூமியிலே தாழ்விடங்களிலே
புண்ணியராக இறங்கினாரே
சிறைப் பட்டவரை சிறையாக்கி
சிறந்த வரங்கள் அளித்தாரே
வானாதி வானம் ஏறினாரே
வலது பாரிசம் வீற்றிடவே – பரிசுத்தர்
3. பரிசுத்தாவி பெலத்தினால்
மரித்தவர் எழுந்தாரே
சரீரமாம் தம் திருச்சபை மேல்
சத்திய ஆவி பொழிந்தனரே
ஆவியால் தேவன் இறங்கிடவே
ஆவியால் தேகம் நிரம்பிடுதே
ஆகமதில் உலவுகின்றார்
ஆனந்த பாக்கியம் அடைகிறோமே – பரிசுத்தர்
4. பரம சீயோன் சேருவோம்
மரணமோ நம் ஜீவனோ
கடைசி நேரம் கேட்டிடுவோம்
எக்காள சத்தம் முழங்கிடுமே
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தவர்கள்
கல்லறை திறக்க எழும்பிடவே
மறுரூபம் கண்ணிமைப் பொழுதே
மகிமை அடைந்தே பறந்து செல்வோம் – பரிசுத்தர்