Poovinil Vanthan Vin Theyne! – பூவினில் வந்த விண் தேனே!

Poovinil Vanthan Vin Theyne!
பூவினில் வந்த விண் தேனே! இவ்வேழையைப் பாதத்தில் சேர்ப்பதற்காய்

இந்த காசினி மீதிலே ஞானப் பொன்னரசே பானமாய் தீர்ந்தனீரோ? – இராஜா

1. கெத்சமனேயிலே தங்கமே உந்தனின் அங்கத்தின் வேர்வையாலே – இராஜா
தேவ சங்கத்தின் மத்தியில் பங்கம் இல்லாமல் நான் துங்கனாய் வாழ்ந்திடவோ? – இராஜா – பூவினில்

2. சேவகர் இயேசுவை கள்ளனைப் போலும் வதைத்து உதைத்தனரோ? – ரோம
கன மேலோக மத்தியில் வாதை இல்லாமல் நான் கானங்கள் செய்திடவோ? – இராஜா – பூவினில்

3. ஒன்னார்கள் யூதரும் மன்னவா உந்தனின் கண்களைக் கட்டினாரோ? – இராஜா
எந்தன் பாவக் கண்கள் இல்லா ஞானக் கண்களினால் விண் புறா ஆகிடவோ – இராஜா – பூவினில்

4. கல்வாரிப் பாதையில் பாரச் சிலுவையை நொந்து சுமந்தனீரோ? – இராஜா மணப்பந்தரின் மத்தியில் சிந்தை பாரம் நீங்கி சோபை நான் ஆகிடவோ? – இராஜா – பூவினில்

5. தலையோட்டு மேட்டிலே வண்டக் கள்ளர்களின் மத்தியில் தொங்கினீரோ? – இராஜா
நவஜோதி பிரகாசமாய் தங்க மாளிகையில் நான் அங்குலாவிடவோ? – இராஜா – பூவினில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *