Sthothiram Yesu Natha
ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்
1. வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப்பாடி துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு
2. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்
3. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்
4. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
5. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே
Sthothiram Yesu Natha
Umakkendrum sthoathiram yaesu naadhaa
Sthoathiram seigiroam ninnadiyaar
Thiru naamathin aadharavil
1. Vaana thoodhar saenaigal
Manoagara keedhangalaal eppoadhum
Oayvindri paadi thudhikka maaperum
Mannavanea umakku
2. Itthanai magathuvamulla
Padhavi ivveazhaigal engalukku
Ethanai maadhayavu nin kirubai
Ethanai aachariyam
3. Nin udhiramadhinaal
Thirandha nin jeeva pudhu vazhiyaam
Nin adiyaarkku pidhaavin sannidhi
Saeravumae sandhadham
4. Indrai dhinamadhilum
Orumithukkooda um naamathinaal
Thandha nin kirubaikkaai umakkendrum
Sthoathiram, sthoathiramae
5. Neerallaal engalukku
Paraloagil yaarundu jeevanaadhaa
Neeraeyandri igathil vaeroru
Thaetramillai paranae