Yesu Nallavar Avar Vallavar

Yesu Nallavar Avar Vallavar
இயேசு நல்லவர் அவர் வல்லவர்
அவர் தயையோ என்றும் உள்ளது (2)
பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல

துதித்திடுவோம் அவர் நாமம் (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

யெகோவாவிடம் எடுத்துச் சொன்னேன்
என் குறையெல்லாம் அவர் கேட்டார் (2)
பாவக் குழியில் வீழ்ந்த என்னை
பாசமுடனே தூக்கி விட்டார் (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

எந்தன் கால்களை வலுப்படுத்தி
எந்தன் மனதை சுத்திகரித்தார் (2)
புதுப் பாடல் எனக்குத் தந்தார்
அன்பர் அவரை புகழ்ந்திடவே (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

எந்தன் கர்த்தாவே எந்தன் இறைவா
நீயல்லாமல் எனக்கு நன்மையுண்டோ (2)
பூமியிலுள்ள உந்தன் புனிதர்
யாவரும் எந்தன் சொந்தங்களன்றோ (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *