All Songs by david

Perumazhai Peruvellam Varapoguthu – பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

Perumazhai Peruvellam Varapoguthu
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு
இராஜாவின் பேழைக்குள் – நீ

1. மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது வந்துவிடு – பெருமழை

2. குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே – பெருமழை

3. நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது – பெருமழை

4. பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார் – பெருமழை

Ungal Meethu Kangal – உங்கள் மீது கண்கள் வைத்து

Ungal Meethu Kangal
உங்கள் மீது கண்கள் வைத்து
கருத்தாய் விசாரிப்பவர்
இன்ப நல் மீட்பர்
இயேசுவின் மீது உங்கள்
பாரத்தை வைத்திடுங்கள்

உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5

தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்தி
வீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள்

உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5

Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை

Sathurvin Kootaiyai
சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய
யூதா முதலில் செல்லட்டுமே
நம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரிய
துதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே

யூதாவின் செங்கோல்
துதியின் ஆளுகை
நம் தேவனின் ராஜ்யம்
என்றும் துதியின் ராஜ்யம்

யூதாவே நீ எழுந்து துதி
தேவ சமூகம் உன்னோடுதான்
துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய்
துதி அபிஷேகம் உன்னோடு தான்

யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும்
உன் கரமும் சத்துருவின் பிடரியின் மேல் இருக்கும்

சமாதானத்தின் தேவனவர்
உன்னை விட்டு நீங்கமாட்டார்
ஜாதிகளும் ஜனங்களுமே
உன்னிடத்தில் சேர்த்திடுவார்

Kaakkum Karangal – காக்கும் கரங்கள் உண்டெனக்கு

Kaakkum Karangal
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பி வா இயேசுவை!
நம்பி வா இயேசுவை!

2. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்

3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன்

4. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

நம்புவேன் இயேசுவை!
நம்புவேன் இயேசுவை!

Kaakkum karangal undenakku
Kaathiduvaar kirubaiyaalae
Allaelooyaa paadippaadi
Alaigalai naan thaandiduvaen

Nambivaa yaesuvai
Nambivaa yaesuvai

1. Nindhanaigal poaraattam vandhum
Needhiyin dhaevan thaanginaarae
Naesakkodi en mael parakka
Naesarukkaai jeevithiduvaen

2. Kanmalaigal peyarkkum padiyaai
Karthar ennai karampidithaar
Kaathirundhu belan adainthu
Kazhugu poala ezhumbiduvaai

3. Aththimaram thulir vidaamal
Aattumandhai mudhalatraalum
Kartharukku kaathiruppoar
Vetkappattu poavadhillai

Nambuven yaesuvai
Nambuven yaesuvai

Yesuve Andavar Yesuve Andavar – இயேசுவே ஆண்டவர் இயேசுவே

Yesuve Andavar Yesuve Andavar
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
வானம் பூமி யாவையும்
தம் வார்த்தையாலே படைத்தார்
சர்வ சிருஷ்டியின் நாயகன்
சர்வ லோகத்தின் ஆண்டவர்

1. நம் இயேசுவால் கூடாதது
ஒன்றுமே இல்லையே
அவரையே நம்புவோம்
என்றென்றும் ஆராதிப்போம்

2. இயேசு நீதி நிறைந்தவர்
சமாதான காரணர்
சர்வ வல்லவர்
சகல அதிகாரம் உடையவர்

3. நம் இயேசுவைப் போலவே
வேறே இரட்சகர் இல்லையே
நம் இரட்சண்ய கன்மலை
அவரே நம் தஞ்சமே

Magimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு

Magimaiyin Raja Magimaiyodu

மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்

ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே

1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

Kartharin Satham Vallamai Ulladhu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

Kartharin Satham Vallamai Ulladhu
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

1. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்

2. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்

3. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதான மீந்து
பரண் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்

Yesuvin Anbinai Arivithida – இயேசுவின் அன்பினை அறிவித்திட

Yesuvin Anbinai Arivithida
இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம் (2)

நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே (2)

நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் -2
தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் -2
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ (2) – நம் பாரதம்

காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே-2
இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே -2
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம் (2) – நம் பாரதம்

Thuli Thuli Odugira – துள்ளி துள்ளி ஓடுகிற

Thuli Thuli Odugira
துள்ளி துள்ளி ஓடுகிற
சின்னஞ்சிறு வாண்டு கூட்டமே
காதில் ஒன்று சொல்ல போறேன் கேளு
நீ கேட்டிட்டு அப்படியே வாழு
…டிங்… டிங்கா…டிங்கா….டிங்க….டிங்க
அப்பா அம்மாவ மதிச்சிக்கோ
அதிகாலையில் எழுந்துக்கோ
ஆண்டவர துதிச்சுக்கோ
அன்றாட கடமைய செய்துக்கோ

சும்மா ஊர நீ சுத்தாத
Facebook Watsapp ன்னு மாட்டிக்காத
கீழ்ப்படிந்து நீ நடந்துக்கோ
உன் வாழ்க்கைய நீ மாத்திக்கோ

Dekiri Dappa Dekiri Dappa – டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா

Dekiri Dappa Dekiri Dappa
டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா டிங்கிரி டியாலோ -4
ஊசி மணி பாசி மணி விக்கிறோமுங்க – நாங்க
ஊரு ஊரா சுத்தி சுத்தி வந்தோமுங்க சொல்லப் போற
சங்கதியை கேட்டுப் பாருங்க

ஆயத்தத்தோட வேதம் வாசிங்கோ
ஆர்வத்தோட வசனம் கேளுங்கோ
ஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோ
ஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ

பரிசுத்த வாழ்க்கை வாழ ஆயத்தம் வேணுங்கோ
படச்சவரை பார்க்க ஆயத்தம் வேணுங்கோ
ஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோ
ஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ