All Songs by david

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே

Uruguayo Nenjame
1. உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்!
கரங் கால்கள் ஆணி யேறித்
திரு மேனி நையுதே!

2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நிலமெல் லாம் புரக்க
ஈனக் குரு சேறினார்

3. தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்

4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்

5. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கினார் அன்றோ?

Uruguayo Nenjame
1. Urukaayo Nenjamae Nee
Kurusinil Antho Paar!
Karang Kaalkal Aanni Yaerith
Thiru Maeni Naiyuthae!

2. Mannuyirkkaayth Thannuyirai
Maaykka Vantha Mannavanaam
Innilamel Laam Purakka
Eenak Kuru Serinaar

3. Thaaka Minji Naavaranndu
Thanga Maeni Manguthae
Aeka Paran Kannayarnthu
Ethanaiyaay Aenguraar

4. Moovulakaith Thaangum Thaevan
Moontanni Thaangidavo?
Saavu Vaelai Vantha Pothu
Siluvaiyil Thonginaar

5. Valla Paeyai Vella Vaanam
Vittu Vantha Theyvam Paaraay
Pullar Itho Nanti Kettup
Puram Paakkinaar Anto?

Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும்

Patham Ondre Vendum
பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்

1. நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம்

2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம்

3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் – பாதம்

5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் – பாதம்

6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் – பாதம்

Bavani Selkirar – பவனி செல்கின்றார் ராசா

Bavani Selkirar
பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா

அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்

1. எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!

2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத

3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற

Hosanna Paduvom – ஓசன்னா பாடுவோம்

Hosanna Paduvom
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம்

2. சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்

5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்

Hosannaa Paaduvom, Yesuvin Thaasarae,
Unnathathilae Thaaveethu Mainthanuku Hosannaa!

1. Munnum Pinnum Saalaem Nagar Sinnapaalar Paatinaar
Andru Pola Intrum Naamum Anbaai Thuthi Paaduvom

2. Sinna Mari Meethil Yeri Anbar Pavani Ponaar
Innum En Akathil Avar Endrum Arasaaluvaar

3. Paavamathai Pokkavum Ippaaviyai Kaithookkavum
Paasamulla Aesaiyaa Pavaniyaaka Pokiraar

4. Paalarkalin Geetham Kaettu Paasamaaka Makilnthaar
Jaalar Veennaiyodu Paatith Thaalaimuthi Seikuvom

5. Kurutholai Njaayitil Nam Kurupaatham Pannivom
Kooti Arul Pettu Naamum Thiriyaekarai Pottuvom

Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே

Kurusinil Thongiye
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ – குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை – குருசினில்

3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார் – குருசினில்

5. எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ – குருசினில்

Kurusinil Thongiye Kuruthiyum Vatiya
Kolkothaa Malaithanilae Nam
Kuruvaesu Suvaami Kodunthuyar Paavi
Kollaay Kann Konndu

1. Sirasinil Mulmuti Uruththida Arainthae
Siluvaiyil Serththaiyo – Theeyar
Thirukkarang Kaalkalil Aannikalatiththaar
Senaiththiral Soola – Kurusinil

2. Paathakar Naduvil Paaviyinaesan
Paathakanpol Thonga – Yootha
Paathakar Parikaasangal Pannnni
Patiththiya Kodumaithanai – Kurusinil

3. Santhirasooriya Sakala Vaan Senaikal
Sakiyamaal Naanuthaiyo – Deva
Sunthara Mainthanuyir Vidukaatchiyaal
Thutikkaaka Nenjunntoo – Kurusinil

4. Eettiyaal Sevakan Ettiyae Kuththa
Iraivan Vilaavathilae – Avar
Theettiya Theetchai Kuruthiyum Jalamum
Thiranthoorthoduthu Paar – Kurusinil

5. Yerusalaem Maathae Maruthi Neeyaluthu
Aengip Pulampalaiyo – Nin
Erusalaiyathipan Ila Manavaalaan
Eduththa Kolamitho – Kurusinil

Yesuvin Namame Thirunamam – இயேசுவின் நாமமே திருநாமம்

Yesuvin Namame Thirunamam
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின்

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின்

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்த நாமம் – இயேசுவின்

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்- கடி
கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் – இயேசுவின்

5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்

Yaesuvin naamamae thirunaamam muzhu
Irudhayathaal thozhuvoam naamum

Kaasiniyil adhanu kinaiyillaiyae
Visuvaasithavargaluku kuraiyillaiyae – Yaesu

Iththaraiyil metha adhisayanaamam
Adhai nithamun thozhubavarku jeyanaamam – Yaesu

Uththama magimai pirasitha naamam
Idhu saththiya vidhaeya manamoththa naamam – Yaesu

Vinnavarum pannudan kondaadum naamam
Nammai andidumpaei payandhoadum dhaevanaamam – Yaesu

Patchamulla rachai seiyum ubagaari
Perum paava pinigal neekkum parigaari – Yaesu

Rasa Rasa Pitha – ராச ராச பிதா

Rasa Rasa Pitha
ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச

1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச

2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித – ராச

3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ – ராச

4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர – ராச

Amen Alleluia – ஆமென் அல்லேலூயா

Amen Alleluia
ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென்

1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்

2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென்

3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – ஆமென்

Vaarum Naam Ellarum – வாரும் நாம் எல்லாரும்

Vaarum Naam Ellarum
வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்
மாசிலா நம் இயேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம் ஆ!

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – வாரும்

3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – வாரும்

Vaarum Naam Ellaarum Kooti
Makil Kondaaduvom – Sattum
Maasilaa Naam Yesu Naatharai
Vaalththi Paaduvom Aa!

1. Thaarakam Atta Aelaikal Thalaikka Naayanaar – Inthath
Thaaranni Yilae Manudava Thaaram Aayinaar – Vaarum

2. Maa Pathaviyai Ilanthu Variyar Aana Naam – Angae
Maatchi Ura Vaenntiyae Avar Thaalchchi Aayinaar – Vaarum

3. Njaalamathil Avarkkinnai Nannpar Yaarular – Paarum
Nam Uyirai Metkavae Avar Tham Uyir Vittar – Vaarum

4. Maa Kotiya Saavaththin Valimai Neekkiyae – Intha
Manndalaththi Nintuyirth Thavar Vinndalanj Sentar – Vaarum

5. Paavikat Kaayp Paranidam Parinthu Vaenntiyae – Avar
Patcham Vaiththurum Tholum Parai Ratchamo Seykiraar – Vaarum

Anandame Jeya Jeya – ஆனந்தமே ஜெயா ஜெயா

Anandame Jeya Jeya
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே

1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே

2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே

3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே