All Songs by david

Paaduven Naan – பாடுவேன் நான்

Paaduven Naan
பாடுவேன் நான்
அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான்
அவர் வல்லவரே

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

யெகோவா யீரே
எல்லாம் பார்த்து கொள்வீர்
யெகோவா நிசியே
என்றும் ஜெயம் தருவீர் – நீரே

யெகோவா ஷலோம்
எனக்கு சமதானமே
யெகோவா ஷம்மா
என் துணையாளரே – நீரே

யெகோவா ரூவா
நல் மேய்ப்பரே
யெகோவா ரப்பா
சுகம் அளிப்பீர் – நீரே

ஹலேல்லூயா (4)

Paaduvaen naan
Avar nallavarae
Vaazhthuvaen naan
Avar vallavarae

Neerea en needhiyin dhaevan
neerae en ratchippin dhaevan
neerae ennai kaankindra dhaevan
neerae ennai kaakkindra dhaevan

Yehoavaa yeerae
Ellaam paarthu kolveer
Yehoavaa nisiyae
Endrum jeyam tharuveer

Yehoavaa shaloam
Enakku samadhaanamae
Yehoavaa shammaa
En thunaiyaalarae

Yehoavaa roovaa
Nal meipparae
Yehoavaa raphaa
Sugam alippeer

Halleluiyah (4)

Thozhugirom Engal – தொழுகிறோம் எங்கள் பிதாவே

Thozhugirom Engal
தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்

கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல (2)
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்

அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்

பாவிநேசன் பாவநாசன்
பரமபாதன் வரமே வாசன் (2)
துங்காசிங்கன் மங்காதங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்

பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்

Thozhugiroam engal pidhaavae
Pozhudhellaam aavi unmaiyudanae
Parisutha alangaarathudanae
Dharisippadhinaal saranam saranam

Venmaiyum sivappumaanavar
Unmaiyae uruvaai kondavar (2)
Ennaiyae meettu kondavar
Annaiyae idhoa saranam saranam – Thozhugiroam

Kangal puraakkangal poala
Kannangal paathigal poala (2)
Sinnangal sirandhadhaalae
Ennillaadha saranam saranam – Thozhugiroam

Adiyaargalin asthibaaram
Arivukkettaadha visthaaram (2)
Koodivantha em alangaaram
Koadaa koadiyaam saranam saranam – Thozhugiroam

Paavineasan paavanaasan
Paramapaadhan varamae vaasan (2)
Thungaasingan mangaathangan
Thuyya anganae saranam saranam – Thozhugiroam

Paarthibanae gana thoaththiram
Keerthanam mangalam nithiyam (2)
Vaazhga vaazhga vaazhga endrum
Allealooyaa aamen aamen – Thozhugiroam

Tholugirom Engal Pithave – தொழுகிறோம் எங்கள் பிதாவே

Tholugirom Engal Pithave
தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்

கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல (2)
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்

அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்

பாவிநேசன் பாவநாசன்
பரமபாதன் வரமே வாசன் (2)
துங்காசிங்கன் மங்காதங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்

பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்

Thozhugiroam engal pidhaavae
Pozhudhellaam aavi unmaiyudanae

Parisutha alangaarathudanae
Dharisippadhinaal saranam saranam

Venmaiyum sivappumaanavar
Unmaiyae uruvaai kondavar (2)
Ennaiyae meettu kondavar
Annaiyae idhoa saranam saranam – Thozhugiroam

Kangal puraakkangal poala
Kannangal paathigal poala (2)
Sinnangal sirandhadhaalae
Ennillaadha saranam saranam – Thozhugiroam

Adiyaargalin asthibaaram
Arivukkettaadha visthaaram (2)
Koodivantha em alangaaram
Koadaa koadiyaam saranam saranam – Thozhugiroam

Paavineasan paavanaasan
Paramapaadhan varamae vaasan (2)
Thungaasingan mangaathangan
Thuyya anganae saranam saranam – Thozhugiroam

Paarthibanae gana thoaththiram
Keerthanam mangalam nithiyam (2)
Vaazhga vaazhga vaazhga endrum
Allealooyaa aamen aamen – Thozhugiroam

Potri Paduvom – போற்றி பாடி துதிப்போம்

Potri Paduvom
போற்றி பாடி துதிப்போம்
இயேசு நாமம் துதிப்போம்
சர்வலோக நாதா உமக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
தேவனே வாரும் ஆவியே வாரும்
ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2

இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்
உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே (2)
ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளை
வானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – தேவனே

கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்
மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் (2)
தூதர் வாழ்த்தும் தேவன் துயர் போற்றும் தேவன்
மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- தேவனே

நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து பாடுவோம்
நியாயமே செய்வோரை கீர்த்தனம் செய்வோம் (2)
ஆனந்தமாய் பாடி தோத்திரங்கள் கூறி
இயேசுவே தேவனென்று அகிலமெல்லாம் கூறுவோம்- தேவனே

Poatri paadi thudhippoam
Yaesu naamam thudhippoam
Sarvaloaga naadhaa umakku
Koadi koadi Sthoathiram
Dhaevanae vaarum aaviyae vaarum
Aarparikindroam allaeluyaa – 2

Yaesu namadhu kartharendru ennum vaelaiyil
Ullamae pongudhae pongi paadudhae (2)
Aaraadhikkum vaelai aarpparikkum vaelai
Vaanamae boomiyae kartharai kondaadidu – Dhaevanae

Karthar seidha nanmaigalai enni paaduvoam
Magimaiyin dhaevanai poatri paaduvoam (2)
Thoodhar vaazhthum dhaevan thuyar poatrum dhaevan
Maasillaa yaesuvai vaazhthi endrum vananguvoam- Dhaevanae

Needhi dhaevan yaesuvai pugazhndhu paaduvoam
Niyaayamea seivoarai keerthanam seivoam (2)
Aanandhamaai paadi sthoathirangal koori
Yaesuvae dhaevanendru agilamellaam kooruvoam- Dhaevanae

Uyarntha Adaikalame – உயர்ந்த அடைக்கலமே

Uyarntha Adaikalame
உயர்ந்த அடைக்கலமே
தேவன் உயர்ந்த அடைக்கலமே
ஆபத்துக் காலத்திலே
தேவன் அரனான கோட்டயாமே

பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும்
அலைகள் கொந்தளித்தாலும் (2)
பர்வதங்கள் அதிர்ந்தாலும் பாழ்க்கடிப்பே வந்தாலும்
பயப்படவே மாட்டேன்
நான் பயப்படவே மாட்டேன் – உயர்ந்த

ஜாதிகள் கொந்தளித்து இராஜ்ஜியங்கள் தத்தளித்து
பூமியே உருகி போனாலும் (2)
யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால்
எதற்கும் துணிந்திடலாம்
நாம் எதற்கும் துணிந்திடலாம் – உயர்ந்த

பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின்
செய்கைகளை வந்து பாருங்கள் (2)
வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முறிக்கிறார்
இரதங்களை சுட்டெறிக்கிறார்
இயேசு இரதங்களை சுட்டெறிக்கிறார் – உயர்ந்த

Uyarndha adaikkalamae
Dhaevan uyarndha adaikkalamae
Aabathu kaalathilae
Dhaevan aranaana koattaiyaamae

Boomi maarinaalum malaigal saaindhaalum
Alaigal kondhalithaalum (2)
Parvathangal adhirndhaalum paazhkkadippae vandhaalum
Bayappadavae maattaen
Naan bayappadavae maattaen – Uyarndha

Jaathigal kondhalithu raajjiyangal thathalithu
Boomiyae urugi poanaalum (2)
Yaakkoabin dhaevan nammoadiruppadhaal
Edharkum thunindhidalaam
Naam edharkum thunindhidalaam – Uyarndha

Boomiyilea paazhkkadippai nadappikkum dhaevanin
Seigaigalai vandhu paarungal (2)
Villai odikkiraar eettiyai murikkiraar
Radhangalai sutterikkiraar
Yaesu radhangalai sutterikkiraar – Uyarndha

Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா

Nambi Vanthen Mesiya
நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

Aani Konda Um Kayangalai – ஆணி கொண்ட உம் காயங்களை

Aani Konda Um Kayangalai
ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
ஆயனே என்னை மன்னியும்

1. வலது கரத்தின் காயமே -2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. இடது கரத்தின் காயமே -2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

3. வலது பாதக் காயமே -2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

4. இடது பாதக் காயமே -2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

5. திருவிலாவின் காயமே -2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

Aani Konda Um Kayangalai
Aanni Konnda Um Kaayangalai
Anpudan Muththi Seykinten (2)
Paavaththaal Ummaik Kontenae -2
Aayanae Ennai Manniyum

1. Valathu Karaththin Kaayamae -2
Alaku Niraintha Raththinamae
Anpudan Muththi Seykinten

2. Idathu Karaththin Kaayamae -2
Kadavulin Thiru Anpuruvae
Anpudan Muththi Seykinten

3. Valathu Paathak Kaayamae -2
Palan Mikath Tharum Narkaniyae
Anpudan Muththi Seykinten

4. Idathu Paathak Kaayamae -2
Thidam Mikaththarum Thaenamuthae
Anpudan Muththi Seykinten

5. Thiruvilaavin Kaayamae -2
Arul Sorinthidum Aalayamae
Anpudan Muththi Seykinten

Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா

Ummai Vittu Vazha Mudiyathu
உம்மை விட்டு வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா

என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே

1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

Aruvadaiyo Miguthi – அறுவடையோ மிகுதி

Aruvadaiyo Miguthi
அறுவடையோ மிகுதி
ஆட்களோ கொஞ்சம்
அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்

1. வயல் நிலங்கள் எல்லாம்
விளைந்து விட்டதன்றோ
ஓடி ஓடி அறுப்போம்
களஞ்சியத்தில் சேர்ப்போம் – அறுவடையோ

2. திறப்பிலே நிற்போம்
விரிசல்களை அடைப்போம்
விழித்திருந்து ஜெபிப்போம்
வெற்றி கண்டு மகிழ்வோம் – அறுவடையோ

3. நதியளவு கண்ணீர்
நாள்முழுதும் வடிப்போம்
இந்தியாவை நினைப்போம்
இரவும் பகலும் ஜெபிப்போம் – அறுவடையோ

4. ஆத்ம பாரம் கொள்வோம்
ஆர்வத்தோடு செல்வோம்
யுத்த களத்தில் நிற்போம்
கோலியாத்தை வெல்வோம் – அறுவடையோ

5. தொடர்ந்து நன்மை செய்வோம்
சோர்வில்லாமல் செல்வோம்
குறித்த காலம் வருமே
அறுவடை நிச்சயமே – அறுவடையோ

Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே

Avar Arputhamaanavarae
1. அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்

3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்

4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்