Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா

Nambi Vanthen Mesiya
நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

2 thoughts on “Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா

  1. Honey mixed songs.
    These people took pain for the praise to ALMIGHTY LORD JESUS CHRIST.
    GOD bless these people involved in these tasks.
    PRAISE The LORD.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *