Song Category: Tamil

Yesappa Ummai Thedi – இயேசப்பா உம்மை தேடி

Yesappa Ummai Thedi
இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே

1. சொந்தம் என்று சொன்ன உடனே
உம்மை தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இன்று நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்

2. என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்து கொள்வார் யாரும் இல்லை
இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாரும் இல்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்து என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா

Siluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட

Siluvaiyil Araiyunda
சிலுவையில் அறையுண்ட இயேசையா
உம் முகம் பார்க்கின்றேன்
கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
பரிசுத்தரே இறை மகனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.

Enna Vanthalum – என்ன வந்தாலும் நம்பிடுவேனே

Enna Vanthalum
என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே
யார் கை விட்டாலும் பின் செல்லுவேன் உம்மை பின் செல்லுவேன்
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே

1. துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்
மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

2. வியாதியின் மத்தியில் மரித்தாலும்
பாடுகள் என்னை நெருக்கினாலும்
திகையாதே கலங்காதே என்று சொன்னீரே
என்னையும் நடத்திடுமே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

3. சோதனை என்னை சூழ்ந்தாலும் வேதனை என்னை நெருக்கினாலும்
சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி
தூக்கி சுமப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

4. நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்
நம்பினோர் என்னை கை விட்டாலும்
முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன் என்று சொன்னவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும்

Naan Nirpathum Nirmulam
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2

1. காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

2. கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

Ummai Pola Theivam Illai – உம்மைப் போல தெய்வம்

Ummai Pola Theivam Illai

உம்மைப் போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை – 2
கண்ணில் கண்ணால் வாழும் முல்லை (2)
உம் அன்பிற்கு அளவே இல்லை (2)
1. முள்ளில் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் – 2
நீர் இல்லா மீனைப்போல் துடித்தேன் நான்
தாய் இல்லா பிள்ளைபோல் அழுதேன் நான் – 2
மார்போடு அணைத்தீரே
ஒரு தாயைப் போல் காத்தீரே – 2 (…உம்மை)

2. உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
உந்தன் பாதையை மறந்தேன் நான் – 2
நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
உம்மில் ஜீவனை தந்தேன் நான் – 2
வழிகாட்டும் தெய்வமே
என்னைக் காக்கும் கர்த்தரே – 2 (…உம்மை)

Ummai Pola Theivam Illai
Neer illai Entraal Naanum Illai – 2
Kannil Kannaal Vaazhum Mullai (2)
Um Anpirku Alave Illai (2)
1. Mullil Paathaiyil Nadanthen Naan
Enthan Vaazhkkaiyai Izhanthen Naan – 2
Neer Illaa Meenaippol Thudiththen Naan
Thaai Illaa Pillaippola Azhuthen Naan – 2
Maarbodu Annaiththeere
Oru Thaayaip Pol Kaaththeere – 2 (…Ummai)

2. Unthan Vaarththaiyai Veruththen Naan
Unthan Paathaiyai Maranthen Naan – 2
Neere Vaazhvu Entru Unarnthen Naan
Ummil Jeevanai thanthen Naan – 2
Vazhikaattum Theivame
Ennaik Kaakkum Karththare – 2 (…Ummai)

Unga Prasannam Illamal – உங்க பிரசன்னம் இல்லாமல்

Unga Prasannam Illamal
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் ஒன்றும் செய்ய முடியாதையா
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் பாட முடியாததையா

மோசை கண்ட பிரசன்னம்
நானும் காண வேண்டும்
கன்மலையின் வெடிப்பிலே
என்னை நிற்க்கச் செய்யும்
உம் பிரசன்னம் என்னை பாட செய்யும்
உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர்
நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர்
உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்
உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

உந்தன் பிரசன்னத்தால் காற்றும் கடலும் அடங்கும்
உந்தன் பிரசன்னத்தால் பேய்கள் நடு நடுங்கும்
உம் பிரசன்னத்திலே சுகம் உண்டு
உம் பிரசன்னத்திலே பெலன் உண்டு
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

Um Kirubai Thaan – உம் கிருபை தான்

Um Kirubai Thaan
உம் கிருபை தான் ஐயா ………..
மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை
பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ……….

1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை
தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ………..

2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை
சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
உம் கிருபை தான் ஐயா………..

Sollal Aguma – சொல்லால் ஆகுமா

Sollal Aguma
சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா
என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா
முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும்
மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா

1. மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார்
கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன்

2. கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன்
வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் தர வல்லவர்

Ezhai Enthan – ஏழை எந்தன் மீது

Ezhai Enthan Meethu
ஏழை எந்தன் மீது அன்பு தேவா
ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
பாவியான எந்தன் மீது நாதா
ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!!

1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
பாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!!

2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து
நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!!

3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ
அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா

Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த

Ummai Pola Intha Ulagile
உம்மைப் போல இந்த உலகிலே
வேறஒருவரும் இல்லையே

அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் ஆத்ம நேசர் நீரால்லோ
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் இதய துடிப்பும் நீரால்லோ

1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்
வேதனையில் நான் வாடுகையில்
உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்

2. குழப்பமான சில நேரங்களில்
கேள்விகள் அநேகம் எழுகையில்
உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்