Siluvaiyil Araiyunda
சிலுவையில் அறையுண்ட இயேசையா
உம் முகம் பார்க்கின்றேன்
கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
பரிசுத்தரே இறை மகனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.