Oh Parisutha Aaviyae
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன்
1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னை தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும்
நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் – ஓ பரிசுத்த ஆவியே } – 2
Parama Kuyavanae Ennai Vanaiyumae
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே
1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர் (2)
எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம
2. உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே (2)
விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம
3. உமது சித்தத்தின் மையத்தில் என்னை
வைத்து என்றும் வழி நடத்திடும் (2)
உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன் – என்னை – பரம
Parama Kuyavanae Ennai Vanaiyumae
Um Sithatham Pol Ennai Vanayumae(2)
Sontham Endru Solli Kolla Ummai Vida Yaarum Illa
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே
1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன், நான் பெலனானேன்
2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்
3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்
Sothu Endru Alli Kolla Ummai Vida Yethum Illa
Yesuvey Yesuvey Ellam Yesuvey (2)
Um Thalumbugalal Naan Sugamaanen
Um Vaarthaiyinaal Naan Belanaanen – Sontham
Um Kiraubayinaal Naan Pizhaithu Konden
Um Paasathinaal Naan Thigaithu Ponen – Sontham
Um Aaviyaanal Naan Piranthu Vitten
Um Ooliyathirkkai Naan Uyir Vazhven – Sontham