Song Category: Tamil

Kangal Ummai Thaeduthae – கண்கள் உம்மை தேடுதே

Kangal Ummai Thaeduthae
கண்கள் உம்மை தேடுதே
காத்திருந்து ஏங்குதே
உம சத்தம் கேட்டிட
என் இதயம் துடிக்குதே

எத்தனை எத்தனை இன்பம் – 4

1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
உம்மை தான் என் கண்கள் தேடுதே – 2

2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2

3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே என் மனது துடிக்குதே – 2

Kangal Ummai Thaeduthae
Kaaththirundhu Yaengudhae
Um Saththam Kaettida
En Idhayam Thudikkudhae

Eththanai Eththanai Inbam – 4

1. En inba Nesarae En Yesurajanae
Ummai thaan En Kangal Thedudhae – 2

2. Thenilum Inimaiyae Nesarin Nesamae
Um Nesaththaalae En Nenjam Negiludhae – 2

3. Saronin Rojavae En Magarajanae
Ummai Kaanavae En Manadhu Thudikkudhae – 2

En Devane En Anbane – என் தேவனே என் அன்பனே

En Devane En Anbane
என் தேவனே என் அன்பனே
வந்திடுவீர் வல்லமையாய்
அனுபல்லவி
ஆசீர்வாத நிறைவுடனே
அன்பே என்மேல் இறங்கிடும்

இரண்டோ மூன்றோ பேர்கள் எங்கே
உண்டோ அங்கே நானிருப்பேன்
என்றுரைத்த வாக்குப்படி
இன்று எம்மை சந்தித்திடும் – என்

கல்வாரியில் ஜீவன் தந்த
எங்கள் தேவா யேசு நாதா
எங்களுள்ளம் உந்தனன்பால்
நிறைந்தும்மைத் துதித்திட – என்

அந்தோ ஜனம் பாவங்களால்
நொந்து மனம் வாடுதையோ
இன்ப முகம் கண்டால் போதும்
இருள் நீங்கி ஒளி காண்பாய் – என்

ஆதரவாய் அன்றும் கரம்
நீட்டி சுகம் ஈந்த தேவா
ஆவலுடன் வந்தோர் பிணி
யாவும் தீரும் அருள் நாதா – என்

ஆதி அன்பால் தேவ ஜனம்
தாவி மனம் மகிழ்ந்திட
ஆவி ஆத்மா சரீரமும்
பரிசுத்தம் அடைந்திட – என்

ஆவலுடன் உம் வரவை
எதிர் நோக்கிக் காத்திருக்க
ஆவிவரம் யாவும் பெற்று
நிறைவுடன் இலங்கிட – என்

Kalangal Kadandha Podhu – காலங்கள் கடந்தபோது

Kalangal Kadandha Podhu

காலங்கள் கடந்தபோது
என் பாதைகள் மாறினபோது
என் காலங்கள் கடந்தபோது
என் பாதைகள் மாறினபோது
என் கால்கள் சரிந்ததே
என் அழைப்பு தவறினதே

அதனால் தேடினேன்
என் அருகில் வந்தீர்
தோளிலே சுமந்தீர்
ஒரு தகப்பனை போலவே

வாழ்க்கை பாதையிலே
பிறர் நெருக்கும் வேளையிலே
என் வாழ்க்கை பாதையிலே
பிறர் நெருக்கும் வேளையிலே
எனக்காய் வந்தவரே
என்னோடு இருப்பவரே

அதனால் தேடினேன்
என் அருகில் வந்தீர்
தோளிலே சுமந்தீர்
ஒரு தகப்பனை போலவே
ஒரு தகப்பனை போலவே
ஒரு தகப்பனை போலவே
தடுமாறின போது சுமந்திர்
தோளின் மேலே

தேடினேன்
என் அருகில் வந்தீர்
தோளிலே சுமந்திர்
ஒரு தகப்பனை போலவே

Kalangal Kadandha Podhu
En Padhaigal Marina Podhu
En Kalangal Kadandha Podhu
En Padhaigal Marina Podhu
En Kalgal Sarindhadhae
En Azhaippu Thavarinadhae

Adhanal Thedinen
En Arugil Vandheer
Thozhilae Sumandheer
Oru Thagappanai Polavae

Vazhkai Padhaiyilae
Pirar Nerukkum Velaiyilae
En Vazhkai Padhaiyilae
Pirar Nerukkum Velaiyilae
Enakkai Vandhavarae
Ennodu Iruppavarae

Adhanal Thedinen
En Arugil Vandheer
Thozhilae Sumandheer
Oru Thagappanai Polavae
Oru Thagappanai Polavae
Oru Thagappanai Polavae
Thadumarina Podhu Sumandheer
Thozhin Melae

Thedinen
En Arugil Vandheer
Thozhilae Sumandheer
Oru Thagappanai Polavae

Ooivu Naal Ithu Manname – ஓய்வு நாள் இது மனமே

Ooivu Naal Ithu Manname
ஓய்வு நாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானஞ் செய் கவனமே

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே

ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே

ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துனை இதற் கழைக்கிறார்

கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்

Aaviyanavar Acharamaai Enakulle – ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே

Aaviyanavar Acharamaai Enakulle ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே இருக்கின்றார் வழுவாமலே என்னை காத்திடுவார் என்றும் நடத்திடுவார் ளூயடய டய டய ……………………

1. ஆவியானவர் பிரசன்னத்தால் கறைகள் நீங்கிற்றே தம் பெலத்தால் என்னை நிறைத்திடுவார் பாதை காட்டிடுவார்

2. ஆவியானவர் தேற்றிடுவார் அனுதினம் போதிப்பார் பரிசுத்தமாய் என்னை வனைந்திடுவார் கனிகள் தந்திடுவார்

Karthar Ellaam Paarthukolvaar – கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்

Karthar Ellaam Paarthukolvaar
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை (நம்மை) நடத்திடுவார் – 2

1. மேய்ப்பரின் பக்கம் சார்ந்திருப்பேன்
தாழ்ச்சியடைவதில்லை – 2
மரணத்தின் இருளில் நான் நடந்தாலும்
நீர் என்னை விடுவதில்லை – 2 (…கர்த்தர்)

2. சேனையின் கர்த்தர் என்னோடு உண்டு
தோல்வி எனக்கில்லையே – 2
எதிரிகள் எத்தனை பெருகினாலும்
பயம் என்பது எனக்கில்லையே – 2 (…கர்த்தர்)

3. அழைத்தவர் என்னோடு வருவதினால்
வாக்குகள் நிறைவேற்றுவார் – 2
எரிகோ கோட்டையே எதிர்த்தாலும்
துதித்து நான் ஜெயித்திடுவேன் – 2 (…கர்த்தர்)

குறைவுகள் நிறைவாக்குவார்
குறித்தென்னை உயர்த்திடுவார் – 2 (…கர்த்தர்)

Karththar ellaam paarthukkolvaar
Devan thevaigal niraivettruvaar
Ithuvarai uthavina ebinesare
Iniyum ennai (nammai) nadaththiduvaar – 2

1.Meipparin pakkam saarnthiruppen
Thaazhchiyadaivathillai – 2
Maranaththin irulil naan nadanthaalum
Neer ennai viduvathillai – 2 (…Karththar)

2.Senaiyin karththar ennodu undu
Thozhvi enakkillaiye – 2
Ethirigal eththanai peruginaalum
Bayam enbathenakkillaiye – 2 (…Karththar)

3.Azhaiththavar ennodu varuvathinaal
Vaakkugal niraivettruvaar – 2
Erigo kottaiye ethirththaalum
Thuthiththu naan jeyiththiduven – 2 (…Karththar)

kuraivugal niraivaakkuvaar
kuriththennai uyarththiduvaar – 2 (…Karththar)

Thuthipathum Sotharipathum Engal Santhosamae – துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே

Thuthipathum Sotharipathum Engal Santhosamae
துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே
ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும் எங்கள் சந்தோஷமே

1. எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால்
எங்கள் சந்தோஷமே
இந்த லோகம் தராத சந்தோஷமே
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

2. காலை எழுவதும் பாடி மகிழ்வதும்
எங்கள் சந்தோஷமே
புது கிருபையால் தினம் நிறைவதும்
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

3. பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும்
எங்கள் சந்தோஷமே
பரன் இயேசுவிலே களிகூறுவதும்
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

4. இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும்
எங்கள் சந்தோஷமே
அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும்
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

5. விசுவாசத்தில் நல்ல போராட்டமே
எங்கள் சந்தோஷமே
பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

Naamum En Veetaarum – நானும் என் வீட்டாரும்

Naamum En Veetaarum

நானும் என் வீட்டாரும்
உம்மையே சேவிப்போம்
ஒன்றும் இல்லாமையில் எமை தெரிந்துகொண்டீரே
ஒரு குறைவுன்றி இதுவரை
காத்துக்கொண்டீரே (காத்து வந்தீரே)

கர்த்தர் எமக்கு நன்மையே செய்திருக்க
யாரை யாம் சேவிப்போம்
உம்மை எமது தேவனாய் கொண்டதெம் பாக்கியமே
ஒன்றும் இல்லாமையில் எமை தெரிந்துகொண்டீரே
ஒரு குறைவுன்றி இதுவரை
காத்துக்கொண்டீரே (காத்து வந்தீரே)

கர்த்தரே உம்மை எக்காலமும் சேவிப்பதே
எமக்கு உகந்ததே
உம்மை எமது தேவனாய் கொண்டதெம் பாக்கியமே
ஒன்றும் இல்லாமையில் எமை தெரிந்துகொண்டீரே
ஒரு குறைவுன்றி இதுவரை
காத்துக்கொண்டீரே (காத்து வந்தீரே)

Naamum En Veetaarum
Ummaiye Sevippom
Ontrum Illamaiyil Emai Therindhu Konteere
Oru Kuraivintri Idhuvarai Kaathu Konteere (Vantheere)

Karthar Emakku Nanmaiye Seithirukke
Yaarai Yam Sevippom
Ummai Yemadhu Devanai Kondathem Bakkiyame
Ontrum Illamaiyil Emai Therindhu Konteere
Oru Kuraivintri Idhuvarai Kaathu Konteere (Vantheere)

Karthare Ummai Ekkalamum Sevipathey
Emakku Uganthathey
Ummai Yemadhu Devanai Kondathem Bakkiyame
Ontrum Illamaiyil Emai Therindhu Konteere
Oru Kuraivintri Idhuvarai Kaathu Konteere (Vantheere)

En Ullam Um Anbai Paadum – என் உள்ளம் உம் அன்பை பாடும்

En Ullam Um Anbai
என் உள்ளம் உம் அன்பை பாடும்
என் நாவு உம் நாமம் போற்றும்
என் இதயம் உம்மில் மகிழும்
எனக்கென்றும் நீர் போதும்

உம் அன்பு பெரியது
உம் நாமம் உயர்ந்தது
என் இதயம் மகிழ்ந்தது
நீர் போதும் என்றது

1. உம் நேசத்தாலே சோகமானேனே
உம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனே
உம் நாமத்திற்குள் சுகம் கண்டேனே
உம்மாலே இரட்சிக்கப்பட்டேனே

2. உம் கண்களில் கிருபை பெற்றேனே
உம் கரத்தால் சுமக்கப்பட்டேனே
உம் மடியில் நான் தேற்றப்பட்டேனே
உம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே

En Ullam Um Anbai Paadum
En Naavu Um Naamam Pottrum
En Idhayam Ummil Makizhum
Enakentrum Neer Pothum

Um Anbu Periyathu
Um Naamam Uyarnthathu
En Idhayam Makizhnthathu
Neer Pothum Entrathu

1. Um Nesathaalae Sogamaanaenae
Um Paasathaal Pidikka Pattaenae
Um Namathirkul Sugam Kandaenae
Ummaalae Ratchika Pattaenae

2. Um Kangalil Kirubai Pettaenae
Um Karathaal Sumakka Pattaenae
Um Madiyil Naan Thaettra Pattaenae
Ummaalae Naan Vaazhkai Pettraenae

Um Paatham Ondre Aaruthal – உம் பாதம் ஒன்றே ஆறுதல்

Um Paatham Ondre Aaruthal
உம் பாதம் ஒன்றே ஆறுதல்
தேடி வந்தேன் இயேசுவே (2) – 2

1. பாவம் என்னை சூழ்ந்தது
சாபம் என்னை தொடர்ந்தது – 2
பாருமே என் இயேசுவே (2)
கிருபையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)

2. உலகம் என்னை வெறுத்தது
உற்றார் நண்பர் பகைத்தனர் – 2
சோர்வுதான் என் வாழ்க்கையே (2)
பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)

3. எந்தன் பாரம் சுமந்தவர்
எந்தன் துக்கம் ஏற்றவர் – 2
கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2)
கருணையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)

Um Paatham ondre Aaruthal
Thedi vanthen Yesuve (2) – 2

1. Paavam ennai Soozhnthathu
Saabam ennai thodarnthathu – 2
Paarume En Yesuve (2)
Kirubaiyaal Ennai Thettridum
Nambi vanthen yesuve (…Um Paatham)

2. Ulagam ennai veruththathu
Uttraar nanbar pagaiththanar – 2
Sorvu thaan en Vaazhkkaiye (2)
Belathinaal Ennai thettridum
Nambi Vanthen Yesuve (…Um Paatham)

3. Enthan baaram Sumanthavar
Enthan thukkam Yettravar – 2
Kanneer than En Vaazhkkaiye (2)
Karunaiyaal ennai thettridum
Nambi vanthen Yesuve (…Um Paatham)