Song Category: Tamil

Kerubin Serabingal – கேரூபீன் சேராபின்கள்

Kerubin Serabingal
கேரூபின் சேராபின்கள்
ஓய்வின்றி உம்மைப் போற்றுதே
பூலோக திருச்சபை எல்லாம்
ஓய்வின்றி உம்மை போற்றிட – 2

நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே
இந்த வானம் பூமியுள்ளோர் யாவும்
உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே – 2 (…கேரூபின்)

1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே – 2
துதி கன மகிமைக்குப் பாத்திரர்
எல்லாப் புகழும் உமக்குத் தானே – 2 (…நீர் பரிசுத்தர்)

2. வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நாங்கள் உந்தன் தேவ ஆலயம்
நீர் தங்கும் தூயஸ்தலம் – 2
சகலமும் படைத்த என் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே – 2 (…நீர் பரிசுத்தர்)

3. பரலோகத்தில் உம்மை அல்லா
யாருண்டு தேவனே
பூலோகத்தில் உம்மைத் தவிர
வேறொரு விருப்பம் இல்லை – 2
என்றும் உம்மோடு வாழ
எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர் – 2 (…நீர் பரிசுத்தர்)

Kerubin Seraabingal
Oyvindri Ummaip Pottruthe
Pooloka Thiruchchabai Ellaam
Oyvindri Ummai Pottrida – 2

Neer Parisuththar Parisuththar Parisuththar
Engal Paraloga Raajaave
Intha Vaanam Boomiyullor Yaavum
Unthan Naamathai Uyarththattume – 2 (…Kerubin)

1. Boomiyanaiththilum Unthan Magimai
Nirainthu Vazhikindrathe
Aalayaththilum Unthan Magimai
Alaiyalaiyaay Asaikindrathe – 2
Thuthi Kana Makimaikkup Paaththirar
Ellaap Pukazhum Umakkuth Thaanae – 2 (…Neer Parisuththar)

2. Vaanam Umathu Singaasanam
Poomi Unthan Paathapati
Naangal Unthan Deva Aalayam
Neer Thaangum Thooyasthalam – 2
Sakalamum Padaiththa En Devaa
Neer Niththiya Sirushtikarae – 2 (…Neer Parisuththar)

3. Paralokaththil Ummai Allaa
Yaarundu Devane
Poolokaththil Ummaith Thavira
Veroru Viruppam Illai
Endrum Ummodu Vaazha
Emmai Umakkaay Therintheduththeer (…Neer Parisuththar)

Yellavatrilum Mellanavar – எல்லாவற்றிலும் மேலானவர்

Yellavatrilum Mellanavar

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வத்தில் உயர்ந்தவர் – 2

உம்மைப்போல் வேறொரு தேவன் இல்லை
நீரே நீர் மாத்ரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (2) (…எல்லாவற்றிலும்)

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – 4
நீரே நீர் மாத்ரமே (2)

Ellaavattrilum Neer Melaanavar
Ellorilum Periyavar
Sagalavattraiyum Sirushtiththavar
Sarvaththil Uyarnthavar – 2

Ummaippol Veroru Devan Illai
Neerey Neer Mathramey
Parisuththar Parisuththar Parisuththarey (4)
Neerey Neer Mathramey (2) (…Ellaavattrilum)

Oruvarum Sera Koodaatha Oliyil
Vaasam Seibavare – 2
Neere Parisuththa Theivam (2)
Neerey Neer Mathramey (2)
Parisuththar Neer Parisuththar – 4
Neerey Neer Mathramey (2)

 

 

எல்லாவற்றிலும் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வத்தில் உயர்ந்தவர்

உம்மை போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்றமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே
நீரே பரிசுத்த தெய்வம்-2
நீரே நீர் மாத்றமே-2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

Oruvarum sera koodatha oliyil Vaasam Seibavarey (2)
Neerey parisutha Deivam (2)
Neerey Neer Mathramey (2)
Oruvarum sera koodatha oliyil Vaasam Seibavarey (2)
Neerey parisutha Deivam (2)
Neerey Neer Mathramey (2)

Parisuthar Neer Parisuthar, Parisuthar Neer Parisuthar (2)
Neerey Neer Mathramey (Deivamey) (2)

Oruvarum sera koodatha oliyil Vaasam Seibavarey (2)
Neerey parisutha Deivam (2)
Neerey Neer Mathramey (2)

Parisuthar Neer Parisuthar, Parisuthar Neer Parisuthar (2)
Neerey Neer Mathramey (Deivamey) (2)
Neerey Neer Mathramey (Deivamey) (2) Yesuvey
Neerey Neer Mathramey (Rajaney)
Neerey Neer Mathramey (Engal Deivamey)
Neerey Neer Mathramey (2)

Ellavatrilum Neer Mellanavar
ellorilum Periyavar
Sagalavatraiyum Shrishtithavar
Sarva Vallavarey
Ellavatrilum Neer Mellanavar
ellorilum Periyavar
Sagalavatraiyum Shrishtithavar
Sarva Vallavarey

Ummai pol ver Oru Deivam illai
Neerey Neer Mathramey
Ummai pol ver Oru Deivam illai
Neerey Neer Mathramey

Parisuthar Parisuthar Parisutharey (4)
Neerey Neer Mathramey (Deivamey)
Neerey Neer Mathramey (3)

Parisuthar Parisuthar (Avar) Parisutharey (4)
Parisuthar Parisuthar (Avar) Parisutharey (4)
Neerey Neer Mathramey (10)

Lesana Kariyam – லேசான காரியம் உமக்கு அது

Lesana Kariyam
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 )

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் ( 2 )
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 )
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2 )

Sarva Srettikum Ejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே

Sarva Srettikum Ejamaan
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்

ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.

வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா

சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய் – ஆஹா ஹா

எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னை காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே – ஆஹா ஹா

Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும்

Enakkaga Yavaiyum Seidumudikkum
எனக்காக யாவையும்
செய்து முடிக்கும்
தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2
அவர் நல்லவராக வல்லவராக
இருப்பதினால் ஸ்தோத்திரம் – 2

நான் கூப்பிட்ட வேலைகளில்
பதில் கொடுத்தீர் ஐயா – 2
இன்னலை நீக்கிவிட்டீர்
பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர்

தாழ்மையில் இருந்த என்னை
உயர்த்தினிரே ஐஸ்ô
உந்தனின் செயல்களையே
நான் பாடியே துதித்திடுவேன்

நான் பயப்படும் நேரங்களில்
உறுதியாய் நம்பிடுவேன்
நீரே என் கோட்டை
என் இரட்சிப்புமானவர்

Azhagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்

Azhagai Nirkum Yaar Ivargal

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? – 2

1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் (…அழகாய்)

2. காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் (…அழகாய்)

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் (…அழகாய்)

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் (…அழகாய்)

5. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் பிதாவின் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று (…அழகாய்)

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை (…அழகாய்)

7. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே (…அழகாய்)

Azhagaai Nirkkum Yaar Ivargal
Thiralaai Nirkkum Yaar Ivargal
Senai Thalaivaraam Yesuvin Porttralaththil
Azhagaai Nirkkum Yaar Ivargal – 2

1. Oru Thaalandho Rendu Thaalandho
Aindhu Thaalandho Ubayogiththor
Siridhaanadho Peridhaanadho
Pettra Pani Seidhu Mudiththor (…Azhagaai)

2. Kaadu Medu Kadandhu Sendru
Karththar Anbai Pagarndhavargal
Uyarvinilum Thaazhvinilum
Vookkamaaga Jebiththavargal (…Azhagaai)

3. Thanimaiyilum Varumaiyilum
Laazaru Pondru Nindravargal
Yaasiththaalum Boshiththaalum
Visuvaasaththai Kaaththavargal (…Azhagaai)

4. Ellaa Jaathiyaar Ellaak Koththiram
Ellaa Mozhiyum Pesum Makkalaam
Siluvaiyin Keezh Yesu Raththaththaal
Seer Poraattam Seithu Mudiththor (…Azhagaai)

5. Vellai Angiyai Thariththu Kondu
Vellai Kuruththaam Olai Pidiththu
Aarpparippaar Pithaavin Munbu
Aattukkuttikke Magimaiyendru (…Azhagaai)

6. Ini Ivargal Pasi Adaiyaar
Ini Ivargal Thaagamadaiyaar
Veyilaagilum Analaagilum
Vethanaiyai Alippathillai (…Azhagaai)

7. Aattukkutty Thaan Ivar Kanneerai
Ara Agattri Thudaiththiduvaar
Azhaiththu Selvaar Inba Oottrukke
Allip Paruga Yesu Thaame (…Azhagaai)

Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal – நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்

Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)

நடக்க முடியல டாடி நடக்க முடியல – என்னை
தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க

என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல — நடக்க

என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல — நடக்க

Karthave En Belane – கர்த்தாவே என் பெலனே

Karthave En Belane
கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்

1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்

2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே

3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதா காலமும் ஜெயம் எடுப்பேன்

4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே

5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி
நீதியின் சால்வையை எனக்குத் தந்து
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்

Arpanithen Ennai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

Arpanithen Ennai Muttrilumaai
1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்

Parama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

Parama Alaipin Pandhaya
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலுயா அல்லேலுயா -2

1. இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

3. என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

4. என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்