Azhagai Nirkum Yaar Ivargal
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? – 2
1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் (…அழகாய்)
2. காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் (…அழகாய்)
3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் (…அழகாய்)
4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் (…அழகாய்)
5. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் பிதாவின் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று (…அழகாய்)
6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை (…அழகாய்)
7. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே (…அழகாய்)
Azhagaai Nirkkum Yaar Ivargal
Thiralaai Nirkkum Yaar Ivargal
Senai Thalaivaraam Yesuvin Porttralaththil
Azhagaai Nirkkum Yaar Ivargal – 2
1. Oru Thaalandho Rendu Thaalandho
Aindhu Thaalandho Ubayogiththor
Siridhaanadho Peridhaanadho
Pettra Pani Seidhu Mudiththor (…Azhagaai)
2. Kaadu Medu Kadandhu Sendru
Karththar Anbai Pagarndhavargal
Uyarvinilum Thaazhvinilum
Vookkamaaga Jebiththavargal (…Azhagaai)
3. Thanimaiyilum Varumaiyilum
Laazaru Pondru Nindravargal
Yaasiththaalum Boshiththaalum
Visuvaasaththai Kaaththavargal (…Azhagaai)
4. Ellaa Jaathiyaar Ellaak Koththiram
Ellaa Mozhiyum Pesum Makkalaam
Siluvaiyin Keezh Yesu Raththaththaal
Seer Poraattam Seithu Mudiththor (…Azhagaai)
5. Vellai Angiyai Thariththu Kondu
Vellai Kuruththaam Olai Pidiththu
Aarpparippaar Pithaavin Munbu
Aattukkuttikke Magimaiyendru (…Azhagaai)
6. Ini Ivargal Pasi Adaiyaar
Ini Ivargal Thaagamadaiyaar
Veyilaagilum Analaagilum
Vethanaiyai Alippathillai (…Azhagaai)
7. Aattukkutty Thaan Ivar Kanneerai
Ara Agattri Thudaiththiduvaar
Azhaiththu Selvaar Inba Oottrukke
Allip Paruga Yesu Thaame (…Azhagaai)
A good job. god bless you all