Song Category: Tamil

Kalvari Ratham Enakkaga Sinthi – கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி

Kalvari Ratham Enakkaga Sinthi

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்

அல்லேலூயா அல்லேலூயா

கைகளில் ஆணிகளோ
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு

முட்கிரீடம் தரித்தவராய்
சிலுவையில் அறைந்தனரே
சிலுவையில் தொங்கினாரே இயேசு

உடைந்த உள்ளத்தோடு
சிலுவையில் மரித்தீரே
எனக்காய் மரித்தீரே இயேசு

Kalvaari Iraththam Enakkaaka Sinthi
Kalvaari Iraththaththaal Kaluvukinteer

Alleuiaa Alleuiaa

Kaikalil Aannikalo
Enakkaaka Atikkappattir
Enakkaaka Iraththam Sinthineer Yesu

Mutkireedam Thariththavaraay
Siluvaiyil Arainthanarae
Siluvaiyil Thonginaarae Yesu

Utaintha Ullaththodu
Siluvaiyil Mariththeerae
Enakkaay Mariththeerae Yesu

Kurusinmel Kurusinmel – குருசின்மேல் குருசின்மேல்

Kurusinmael Kurusinmael

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

பாவத்தின் காட்சியை
ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

Kurusinmael Kurusinmael
Kaannkintathaarivar
Piraananaathan Piraananaathan
En Paerkkaaych Saakintar

Paavaththin Kaatchiyai
Aaththumaavae Paarththidaay
Thaevakumaaran Maa Saapaththilaayinaar

Intha Maa Naesaththai Ninthaiyaay Thallinaen
Immakaa Paavaththai Enthaiyae Mannippeer

Paavaththai Naesikka Naan Inich Selvaeno
Thaevanin Pillaiyaay Jeevippaen Naanitho

Kashdangal Vanthaalum Nashdangal Naernthaalum
Kurusin Kaatchiyai Tharisiththuth Thaeruvaen

Sooraavaliyaip Pol Soolnthidum Aapaththil
Siluvaiyin Naesaththai Sinthiththu Nnokkuvaen

Immakaa Naesaththai Aathmaavae Sinthippaay
Immaanuvaelae Neer Ennaiyum Naesiththeer

Punnnniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

Punnnniyar Ivar Yaaro

புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Punnnniyar Ivar Yaaro Veelnthu Jepikkum
Purushan Sanjalam Yaatho

Thannnnilal Solaiyilae Saamanadu Vaelaiyilae
Mannnnil Kuppura Veelnthu Vanangimantatik Kenjum

Vaelai Neengaatho Venkiraar Kodumarana
Vaethanai Yuttenenkiraar
Aaluthaviyumillai Atiyaar Thuyilukintar
Neelun Thuyarkkadalil Neenthith Thaththalikkintar

Paaththiram Neekku Menkiraar Pithaavae Inthap
Paadakalaatho Venkiraar
Naeththiram Neer Poliya Nimalan Maeniyil Raththam
Neettu Viyarvaiyaaka Nilaththil Sottamantadum

Ensiththam Malla Venkiraar Appaa Nin Siththam
Entaikkumaaka Venkiraar
Anpin Kadavul Thamatharung Karaththilaeyeentha
Thunpap Paaththiraththati Vanndalaiyum Parukum

Kolkothaa Malai Meethilae – கொல்கொதா மலை மீதிலே

Kolkothaa Malai Meethilae

கொல்கொதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்

அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்

மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சசித்தார்

உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்

செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்

வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை

Kolkothaa Malai Meethilae
Siluvai Sumanthaekinaar
Unnatha Pithaavin Siththamaay
Uththamar Iraththam Sinthinaar

Antho Erusalaemae
Aanndavar Pavani Vanthaar
Antha Naalai Nee Maranthaay
Anparo Kannnneer Sinthinaar

Maeniyil Kasaiyatikal
Eththanai Vasai Molikal
Aththanaiyum Avar Unakkaay
Anpudan Sumanthu Sasiththaar

Uththama Thaeva Mainthanae
Suththamaay Raththam Sinthiyae
Niththiya Vaalvu Thanaiyae
Neesanaam Enakkaliththaar

Senneero Kannnneeraay Maari
Tharanniyil Paaynthathangae
Unnilai Ninaiththavarae
Thannilai Maranthu Sakiththaar

Vanjaka Ulakinilae
Vanangaa Kaluththudanae
Valipokum Aaththumaavae
Vanthidu Nee Yesuvanntai

Kolkothaa Maettinilae – கொல்கொதா மேட்டினிலே

Kolkothaa Maettinilae

கொல்கொதா மேட்டினிலே
கொடூர பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவ குமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்

பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்

மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்

இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்

கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பி னிலே

உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

Kolkothaa Maettinilae
Kotoora Paavi Enthanukkaay
Kuttamillaatha Thaeva Kumaaran
Kuruthi Vatinthae Thonginaar

Paava Saapangal Sumanthaarae
Paaviyai Meetka Paadupattar
Paavamillaatha Thaevakumaaran
Paathakan Enakkaay Thonginaar

Matinthidum Mannuyirkkaay
Makimai Yaavum Ilanthoraay
Maasillaatha Thaevakumaaran
Moontanni Meethinil Thonginaar

Irathathin Peruvellam Oda
Iratchippin Nathi Ennil Paaya
Aatharavillaa Thaevakumaaran
Akorak Kaatchiyaay Thonginaar

Kalvaari Kaatchi Itho
Kanndiduvaayae Kannkalanga
Katina Manamum Urukidumae
Karththarin Maaraatha Anpi Nilae

Ullamae Nee Thiravaayo
Urukum Saththam Nee Kaelaayo
Un Karam Patti Unnai Nadaththa
Un Nenjai Aavalaay Thattukiraar

Vaan Pugal Valla – வான் புகழ் வல்ல தேவனையே

Vaan Pugal Valla Thaevanaiyae
வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கரகதின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்
யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்

2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான்

3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
சுற்றி உலாவின நித்திய தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்

4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்

5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை
தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
வழுவ விடாமலே காத்திடும் தேவன்
மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்

6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
மணவாளன் வரும்வேளை அறியலாகாதே
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்

Vaan Pugal Valla Thaevanaiyae Nitham
Vaalthiyae Thuthiyam Seythiduvomae
Kaathidum Karamathin Vallamaiyai Entrum
Kanivudan Paadiyae Pottiduvomae

1. Yakobin Yeanniyin Mun Nintravar Thaam
Yakobin Thaevanin Senai Avar Thaam
Yaathiraiyil Nammai Soolnthidum Karthar
Naethiram Pol Paathu Kaathiduvaarae — Vaan

2. Patchikkum Singangal Vaayilirunthu
Ratchithaarae Veera Thaaniyaelin Thaevan
Arputha Adaiyaalam Nikalthiyae Niththam
Karthan Than Senaikondu Kaathiduvaarae — Vaan

3. Ukkiramaay Eriyum Akkini Naduvil
Sutti Ulaavina Nithiya Thaevan
Magimaiyin Saayalaay Thikalnthidum Karthar
Muttrum Tham Thaasarai Kaathiduvaarae — Vaan

4. Siraichalai Kathavukal Athirnthu Norunga
Seesharai Sirai Meettar Sathiya Thaevan
Sathuruvin Ennangal Sitharundu Maala
Senaikalin Karthar Kaathiduvaarae — Vaan

5. Alaiththanarae Tham Makimaikkentre Emmai
Therintheduthaarae Tham Saayalai Aniya
Valuva Vidaamalae Kaaththidum Thaevan
Maasattoraay Thammun Niruthiduvaarae — Vaan

6. Makathuva Thaevan Vaanil Aayathamaaka
Makimaiyaay Nirkiraar Saduthiyaay Iranga
Manavaalan Varumvaelai Ariyalaakaathae
Manavaatti Sabaiyae Neer Vilippudan Iruppeer — Vaan

Saaronin Rojaavae – சாரோனின் ரோஜாவே

Saaronin Rojaavae
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே

ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே

வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே

அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம்
கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்

Saaronin Rojaavae
Pallaththaakkin Leeliyae
Ullaththin Naesamae
Yesu En Piriyamae

Aaththuma Naesarae Um Naesam Inpamae
Poorana Roopamae Paluthontum Illaiyae

Varuvaenenturaiththavar Seekkiram Varukiraar
Vaakku Maaraathavar Thaamatham Seyyaarae

Anparai Santhikka Aayaththamaakuvom
Karththarin Karamathil Nammai Thanthiduvom

Enakaai Karuthuvaar – எனக்காய் கருதுவார்

Enakaai Karuthuvaar
எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார் – 2

நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வவல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு – 2

1. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் – 2 (…நம்புவதற்கு)

2. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் – 2 (…நம்புவதற்கு)

3. சேருவேன் நான் இயேசுவோடு
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசால் திருப்தியாக்குவார் – 2 (…நம்புவதற்கு)

Enakkaay karuthuvaar Ennai poshippaar
Enthan Thaevaikal Ellaam Santhippaar
Thunpa Naalil Kaividaamal
Tham Sirakin Nizhalil Maraippaar – 2

Nampuvatharku Enakkentrum
Sarva vallavar Kooda Iruppaar
Thalaraamal Vanaanthiraththil
Prayaanam Seyvaen Nampikkaiyodu – 2

1. Pollaappukal Neridaathu
Vaathaiyo Unnai Anukaathu
Paathaikalil Thaevanutaiya
Thootharkal Karangalil Thaanguvaar – 2 (…Nampuvatharku)

2. Iravinilae Payangaramum
Pakalil Parakkum Ampukalukkum
Irulathilae Nadamaadum
Kollai Noykalukkum Naan Payappaden – 2 (…Nampuvatharku)

3. Seruvaen Naan Yesuvodu
Avar Naamaththin Vallamai Arivaen
Kashta Naatkalil kooda Iruppaar
Theerkkaayusaal Thrupthiyaakkuvaar – 2 (…Nampuvatharku)

Deva Ganam Ketkude – தேவ கானம் கேட்குதே

Deva Ganam Ketkude
தேவ கானம் கேட்குதே
தென்றல் வந்து வீசுதே
தேவ மைந்தனின் வரவாலே
தேவை யாவும் தீர்ந்ததே
– தேவகானம்
Happy Birthday Jesus (4)

1. வான் புகழ் ராஜனாம் இயேசு
வையகம் வந்ததால்
வாதை நோய் துன்பம் எல்லாம்
வழிவிட்டு மறைந்திடுதே (2)
கவலை ஒன்றும் இல்லை தேவனே
இறைமகன் இயேசு உள்ளார்
நமக்கினி சுமை ஒன்றும் இல்லையே
நமக்காக அவர் சுமப்பார் (2)
– தேவகானம்
Happy Birthday Jesus(4)
Hallelujah(4)
உன்னதத்தில் ஒசன்னா (2)

2. நல்ல ஆயனாம் இயேசு
நமக்கினி உள்ளதால்
கண்ணீர் கவலை எல்லாம்
களிப்பாய் மாற்றிடுவார்
பசும்புல் மேய்ச்சலும் உண்டு
பரமனின் திருச்சபையில்
நமக்கினி சுமை ஒன்றும் இல்லையே
நம் விண்ணப்பம் கேட்டிடுவார் (2)

Deva Ganam Ketkude
Thendral Vandhu Veesuthe
Deva Myndanin Varavaalae
Thevai Yavum Theerndhadae
Deva Ganam
Happy Birthday Jesus (4)
1. Vaan Pugazh Rajanaam Yesu
Vaiyagam Vandhadaal
Vadhai Noi Thunbam Yellam
Vazhi Vittu Maraindhiduthae(2)
Kavalai Ondrum Illai Devanae
Iraimagan yesu ullar
Namakkini Sumai Ondrum Illaiyae
Namakkaga Avar sumappaar(2)
Deva Ganam
Happy Birthday Jesus(4)
Hallelujah(4)
Unnathaththil Osanna(2)

2. Nalla Aayanaam Yesu
Namakkini Ulladhaal
Kanneer Kavalai Yellam
Kalippai Matriduvaar
Pasumpul Meychallum Undu
Paramanin Thiruchabaiyil
Namakkini Sumai Ondrum Illaiyae
Num Vinnappam Ketiduvaar (2)

Aarathipen Yesu Rajanai – ஆராதிப்போம் இயேசு ராஜனை

Aarathipen Yesu Rajanai

ஆராதிப்போம் இயேசு ராஜனை ராக்காலத்தில் நிற்கும் ஊழியரே நம் கைகளை உயர்த்திநேராய் ஆராதிப்போம் இயேசு ராஜனை

ருசித்துப்பார் இயேசு நல்லவர் – 3
ஆராதிப்போம் இயேசு ராஜனை

தூக்கினாரே சேற்றினின்று
நிறுத்தினாரே கன்மலைமேல்
புதுப்பாட்டை எந்தன் நாவில் தந்தார்
துதிபாடுவேன் துதிபாடுவேன்

Come Bless The Lord All Ye Servants in Tamil Song