Song Category: Tamil

Naan Sellum Paathai En – நான் செல்லும் பாதை என்

Nan Sellum Paathai En

நான் செல்லும் பாதை என் நேசர் அறிவாரே
நாசம் அணுகாமல் காப்பாரே – 2

1. மரணப் பள்ளத்தாக்கிலும்
நான் வரும் எத்தீமைக்கும் அஞ்சேன் – 2
கருத்தாய்க் காத்திட வாக்குத் தவறிடா
வல்ல ஓர் தேவன் உண்டெனக்கு – 2 (…நான் செல்லும்)

2. கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ
இது தண்ணீர் இல்லாப் பாலை அன்றோ? – 2
கண்ணீரை மாற்றியே சந்தோஷம் பொங்கிடும்
தண்ணீர்த் தடாகமாய் மாற்றிடுவார் – 2 (…நான் செல்லும்)

3. பாடுகள் சகித்த இயேசு
அவர் நடந்த பாதை இதல்லோ? – 2
ஓடியே வீரனாம் இயேசுவை நோக்கியே
பாடுவேன் நம்பிக்கையுடனே – 2 (…நான் செல்லும்)

4. மண் வாழ்வின் இன்பம் வெறுத்தேன்
மேல் விண் வாழ்வின் இன்பத்தை கண்டே – 2
துன்பங்கள் மூலமாய் சுத்தரானோருடன்
பொன் நகரம் சேர்ந்து வாழுவேன் – 2 (…நான் செல்லும்)

5. ஆதரவாய் இடை கட்டி
என்னை ஆனந்தமாய் ஓடச் செய்தார் – 2
ஆவி அச்சாரத்தால் புத்திர சுவிகாரம்
ஆளுகையும் அன்று பெறுவேன் (…நான் செல்லும்)

6. மங்கள கீதம் முழங்க
சபை எங்கும் துதிகளைச் சாற்ற – 2
எங்களின் மன்னவன் மங்கிடா நீதியின்
செங்கோலும் ஓங்குமே நித்தியமாய் – 2 (…நான் செல்லும்)

Nan Sellum Paathai En Nesar Arivaare
Naasam Anughaamal Kappare – 2

1. Marana Pallaththaakkilum
Naan Varum Yeththeemaikkum Anjen – 2
Karuththaai Kaaththida Vaakku Thavaridaa
Valla Or Devan Undenakku – 2 (…Nan Sellum)

2. Kanneerin Pallaththaakallo
Idhu Thanneer Illaa Paalai Andro? – 2
Kanneerai Mattriye Sandhosham Pongidum
Thanneer Thadaagamaai Maattriduvar – 2 (…Nan Sellum)

3. Paadugal Saghiththa Yesu
Avar Nadandha Paathai Idhallo? – 2
Oodiye Veeranam Yesuvai Nokkiye
Paaduven Nambikaiyudane – 2 (…Nan Sellum)

4. Mann Vaazhvin Inbam Veruththen
Mel Vinn Vaazhvin Inbaththai Kande – 2
Thunbangal Moolamaai Suththaraanorudan
Ponn Nagaram Sernthu Vaazhuven – 2 (…Nan Sellum)

5. Aatharavaai Idai Katti
Ennai Aananthamaai Oda Seithaar – 2
Aavi Achchaaraththaal Puththira Suvigaaram
Aalugaiyum Andru Peruven (…Nan Sellum)

6. Mangala Geetham Muzhanga
Sabai Engum Thuthigalai Saattra – 2
Engalin Mannavan Mangidaa Neethiyin
Sengolum Ongume Niththiyamaai – 2 (Naan Sellum)

Maamari Paalanaaga – மாமரி பாலனாக

Maamari Paalanaaga

மாமரி பாலனாக
பெத்லகேம் ஊரினிலே
இயேசு பிறந்தாரே
தாழ்மையின் ரூபமாக – 2

ஹா..என் உள்ளம் பொங்குதே
அவர் அன்பை நினைக்கையிலே – 2
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
எனக்காய் பூமி வந்தார் – 2
மா மரி பாலனாக….

1. தூதர்கள் பாடினரே
மேய்ப்பர்கள் வாழ்த்தினரே
சாஸ்திரிகள் பணிந்தனரே
இயேசு பிறந்தாரே – 2 (…ஹா..என் உள்ளம்)

2. பூமியில் சமாதானம்
மனுடர் மேல் பிரியமும்
மகிழ்ந்து களிகூர்ந்திட
இரட்சகர் இயேசு பிறந்தார் – 2 (…ஹா..என் உள்ளம்)

Maamari Paalanaaga
Bethlehem Oorinile
Yesu Piranthaare
Thaazhmaiyin Roobamaaga – 2

Haaa..En Ullam Ponguthe
Avar Anbai Ninaikkaiyile – 2
Devaathi Devan Raajaathi Raajan
Enakkai Boomi Vanthaar – 2
Maa Mari Paalanaga….

1.Thoothargal Paadinare
Meipparkal Vaazhthinare
Saasthrigal Paninthanare
Yesu Piranthaare – 2 (…Haaa..En ullam)

2. Boomiyil Samaathaanam
Manudar Mel Piriyamum
Magizhnthu Kalikoornthida
Ratchakar Yesu Piranthaar – 2 (…Haaa..En Ullam)

Vaanam Nirkka Megam Nirkka – வானம் நிற்க மேகம் நிற்க

Vaanam Nirkka Megam Nirkka

வானம் நிற்க மேகம் நிற்க நிமிடம் ஓர் சுவாசம் நிற்க
தேவன் கொஞ்சம் கை அசைத்தால் என்ன செய்வோம்?
வாழ்க்கை சுற்றி நடப்பதெல்லாம் தவறாய் நமக்கிருந்தால்
தேவன் சொல்லும் சொல்லை மீறி என்ன செய்வோம் ?

பல இன்பங்கள் தந்த நம் சொந்தம் இழந்தோம்
கோடி நினைவுகள் விட்டு சென்ற அன்பை இழந்தோம்
ஓ அழகென்று சேர்த்து வைத்த செல்வம் இழந்தோம்
இனி நமக்கென்று ஏதும் இல்லை இயேசு மட்டும் தான்

இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு வாழ்க்கை கடப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு துன்பம் மறப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு கண்ணீர் துடைப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு நித்யம் நினைப்போம் – 2

தக்கத்தை (6) தக்கதோம் (2) (1) – 2

பதில் ஒன்றும் அறியாத பல கேள்விகள்
நம் மனதின் ஓரங்களை ஆட்கொள்வதேன்
தவறேதும் செய்யாத தேவன் அவர்
அவர் பிள்ளைகள் நம் வாழ்வில் நன்மை செய்வார்

வாழ்வில் ஒன்றும் அறியோம்
நம் வாழ்கை ஒவ்வொன்றையும் முற்றும் அறிவார்
நம் சிந்தையின் கேள்விக்கு பதிலும் இல்லை
அவர் பாதங்கள் ஒன்றே என்று பற்றிக்கொள்வோம் வா… (…பல இன்பங்கள்)

Vaanam Nirkka Megam Nirkka Nimidam Oar Swaasam Nirkka
Devan Konjam Kai Asaiththaal Enna Seivom ?
Vaazhkkai Suttri Nadappathellaam Thavaraai Namakkirundhaal
Devan Sollum Sollai Meeri Enna Seivom ?

Pala Inbangal Thandha Nam Sondham Izhandhom
Kodi Ninaivugal Vittu Chendra Anbai Izhandhom
O Azhagendru Serththu Vaiththa Selvam Izhandhom
Ini Namakkendru Ethum Illai Yesu Mattum Dhaan

Yesu Endra Oar Naamam Kondu Vaazhkkai Kadappom
Yesu Endra Oar Naamam Kondu Thunbam Marappom
Yesu Endra Oar Naamam Kondu Kanneer Thudaippom
Yesu Endra Oar Naamam Kondu Nithyam Ninaippom – 2

Thakkaththai (6) Thakkaththom (2) (1) – 2

Badhil Ondrum Ariyaatha Pala Kelvigal
Nam Manadhin Orangalai Aatkolvadhen
Thavaredhum Seiyaadha Dhevan Avar
Avar Pillaigal Nam Vaazhvil Nanmai Seivaar

Vaazhvil Ondrum Ariyom
Nam Vaazhkkai Ovvondraiyum Muttrum Arivaar
Nam Sindhaiyin Kelvikku Badhilum Illai
Avar Paadhangal Ondre Endru Patrikkolvom Vaa (…Pala Inbangal)

Um Naamam Solla Solla – உம் நாமம் சொல்ல சொல்ல

Um Naamam Solla Solla
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

1. மாணிக்க தேரோடு காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமா
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உமக்கது ஈடாகுமா – 2 (…உம் நாமம்)

2. பாலென்பேன் தேனென்பேன் தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறையென்பேன் நிறையென்பேன் நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன் – 2 (…உம் நாமம்)

3. முதலென்பேன் முடிவென்பேன் மூன்றில் ஓர் வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன்
மொழியென்பேன் ஒளியென்பேன் வற்றாத ஊற்றென்பேன்
வாழ்க உம் நாமம் என்பேன் – 2 (…உம் நாமம்)

4. ஊரெல்லாம் உலகெல்லாம் உயிர்கொண்ட பேரெல்லாம்
உம் நாமம் சொல்லாதோ
பாரெல்லாம் வாழ்கின்ற படைப்புக்கள் எல்லாமே
உம் நாமம் புகழாதோ – 2 (…உம் நாமம்)

Um Naamam Solla Solla
En Ullam Magizhuthaiyaa
En Vaazhvil Mella Mella
Um Inbam Peruguthaiyaa

1. Maanikka Therodu Kaanikkai Thanthaalum
Umakkathu Inaiyaaguma
Ulagame Vanthaalum Uravugal Nindraalum
Umakkathu Eedaaguma – 2 (…Um Naamam)

2. Paalenben Thenenben Thevittaatha Amuthenben
Um Naamam Ennavenben
Maraiyenben Niraiyenben Neengaatha Ninaivenben
Um Naamam Ennavenben – 2 (…Um Naamam)

3. Mudhalenben Mudivenben Moondril Or Vadivenben
Munnavar Neere Enben
Mozhiyenben Oliyenben Vattraatha Ootrenben
Vaazhga Um Naamam Enben – 2 (…Um Naamam)

4. Oorellaam Ulakellaam Uyirkonda Paerellaam
Um Naamam Sollaatho
Paarellaam Vaazhkindra Padaippukkal Ellaame
Um Naamam Pugazhaatho – 2 (…Um Naamam)

Kaalaiyum Maalaiyum Hallelujaah – காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum Hallelujaah

காலையும் மாலையும் அல்லே-லூயா
நான் விடும் சுவாசமே அல்லே-லூயா – 2
நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும்
நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும்

அல்லே-லூயா – (4)

என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
அல்லே-லூயா (2)

1. கன்மலை உச்சியில் அல்லே-லூயா
ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா – 2
நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும்
நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
அல்லே-லூயா – (4) (…என் உயர்விலும்)

2. சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
ஏளனம் செய்கையில் அல்லே-லூயா – 2
என் எதிரி பெருக பெருக என் பந்தி அளவும் பெருகும்
நான் துதித்துப் பாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும்
அல்லே-லூயா – (8) (…என் உயர்விலும்)

Kaalaiyum Maalaiyum Halle-lujaah
Naan Vidum Swasamey Halle-lujaah (2)
Naan Sorndhu Pogum Podhu En Belanaaga Maarum
Naan Sorkkalattra Neram En Aathumaavum Paadum

Halle-lujaah (4)

En Uyarvilum En Thaazhvilum En Aathumaa Paadum
Halle-lujaah (2)

1.Kanmalai Utchiyil Halle-lujaah
Aazhiyin Vilimbilum Halle-lujaah – 2
Naan Uyara Pogum Podhu En Vetri Geedham Aagum
Naan Thaazha Nirkkumpodhu Ennai Thettrum Geedham Aagum
Halle-lujaah (4) (… En Uyarvilum)

2. Saththuru Sirikkaiyil Halle-lujaah
Yelanam Seigaiyil Halle-lujaah (2)
En Edhiri Peruga Peruga En Pandhi Alavum Perugum
Naan Thuthitthu Paadum Podhu Siraichaalai Kadhavum Thirakkum
Halle-lujaah (8) (… En Uyarvilum)

Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை

Naan Orupothum Unnai

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை
என்றுறை செய்தேனன்றோ – 2
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் உன் அருகில் நான்
என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை – 2 (…நான் ஒருபோதும்)

1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
என்ன வந்தாலும் பயமே இல்லை
மாறாத இயேசு உண்டெனக்கு
மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே – 2 (…என்றுறை)

2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
நல்வசனத்தின் வல்லமையாய் 
வல்லவரின் சமூகம் நிறைந்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே – 2 (…என்றுறை)

Naan Orupothum Unnai Kaividuvathillai
Endrurai Seithenandro – 2
Kadal Aazhaththilum Akkini Soolaiyilum
Unnai Kaaththidum Belavaanandro
Visha Sarbangalo Singa Koottangalo
Bayam Vendaam Un Arugil Naan

Endrurai Seithavarai Aaraathippom
Aaviyil Aaraathanai – 2 (…Naan Orupothum)

1. Aaruthal Thara Oru Vaarthai Illai
Enna Vanthaalum Bayame Illai
Maaraatha Yesu Undenakku
Manathu Orupothum Kalangavillaiye

Yelai Enakku Adaikkalame
Avar Puyalil En Kanmalaiye – 2 (…Endrurai)

2. Ninthaigal Unnai Soozhkindratho
Tham Karangal Endrum Uyarnthidume
Nalvasanaththin Vallamaiyaay
Vallavarin Samoogam Nirainthidume

Eliyaavin Devan Enge
Endra Arputham Nadanthidume – 2 (…Endrurai)

Vallavare En Meetpar Neere – வல்லவரே என் மீட்பர் நீரே

Vallavare En Meetpar Neere

வல்லவரே என் மீட்பர் நீரே
இயேசு பரனே என் ஜீவ ஊற்றே
ஒரு குறையில்லா வாழ்வு நான் வாழ
குறையற்ற ரத்தம் சிந்தினீரே

ரட்சித்தீரே கிருபையினாலே
ரட்சகரே என் இயேசுவே – 2 (…வல்லவரே)

அப்பா நன்றி ராஜா நன்றி
உம் அன்பு எனை தாங்குதே
அப்பா நன்றி ராஜா நன்றி
உம் அன்பு எனை தேற்றுதே – 2 (…வல்லவரே)

ஊழியம் கொள்ளாமல் ஊழியம் செய்ய
வந்த நேச குமாரனே – 2
இழந்ததை தேடவும் ரட்சிக்கவும்
பூமியில் அவதரித்தீர் – 2 (…அப்பா)

உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த
தேவ ஆட்டுக்குட்டி நீரே – 2
சிலுவையிலும் அன்பை வெளிப்படுத்தி
பலியாக ஈந்தவரே – 2 (…அப்பா)

Magimayin Megamaaga Irangi – மகிமையின் மேகமாக இறங்கி

Magimayin Megamaaga Irangi

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே

வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ‌ஆறுதலே

மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்
கேரூபீன்கள்‌ மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே

முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே

சீடர்களின் மத்தியில்
மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே

Magimayin Megamaaga Irangi Vandheerae
Aasaripu Koodarathil Irangi Vandheerae

Vaarum Iyya, Nallavarae,
Thunaiyaalarae, Engal Aarudhalae

Maga Parisuth Sthalathinil
Kerbeengal Mathiyil
Kirubaasanam Meethinil
Irangi Vandheerae

Mutchediyin Mathiyil
Seenai Malai Utchiyil
Kanmalayin Vedipinil
Irangi Vandheerae

Seedargalin Mathiyil
Mel Veetu Araiyinil
Bendhecosthe Naalinil
Irangi Vandheerae

Um Kirubai Ennaku Pothum – உம் கிருபை எனக்கு போதும்

Um Kirubai Ennaku Pothum

உம் கிருபை எனக்கு போதும் (3)

என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும் – 2

1. தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்
கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்
வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்
ஒண்ணுமே இல்லனாலும் உம் கிருபை போதும்

இயேசப்பா நீங்க மட்டும் – 2
என் கூட இருந்தா

போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே – 2 (…என் பெலவீனத்தில்)

2. மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்
தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்
அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும் (…இயேசப்பா நீங்க)

Um Kirubai Enakku Podhum – 3

En Belaveenatthil Um Belamo
Pooraṇamaai Vilangum – 2

1. Thaazhvil Irundhaalum Um Kirubai Podhum
Kanneeril Moozhginaalum Um Kirubai Podhum
Vedhanai Irundhaalum Um Kirubai Podhum
Onnume Illanaalum Um Kirubai Podhum

Yesappaa Neenga Mattum – 2
En Kooda Irundhaa

Podhume Kirubai Podhume
Maarume Ellaame Maarume – 2 (…En Belaveenatthil)

2. Malaigal Vilaginaalum Um Kirubai Podhum
Parvadhangal Peyarndhaalum Um Kirubai Podhum
Thanneerai Kadandhaalum Um Kirubai Podhum
Akkiniyil Nadandhaalum Um Kirubai Podhum (…Yesappa Neenga)

Puthiya Varudathirkul – புதிய வருடத்திற்குள் நடத்தியவர்

Puthiya Varudathirkul

புதிய வருடத்திற்குள் நடத்தியவர் நீர்தானே
புதிய வாக்குத்தத்தம் குடுத்து விட்டீர் – 2

பேரோ புகழோ தேசமெங்கிலும்
பறக்கும் கழுகைப்போல மாற்றினீரையா

கீர்த்தியும் புகழ்ச்சியும் கூட்டு சேர்த்திரே
வெட்கப்பட்ட தேசத்தில் உயர்த்தி வைத்தீரே – 2 (…புதிய)

1. ஏங்கி நின்ற என் கரங்களெல்லாம்
குடுக்கும் கரங்களாய் மாற்றினீரையா

அனைத்து தேவைகளை சந்தித்தீரே
நீர் அளவிற்கு அதிகமாக ஆசீர்வதித்தீரே – 2 (…புதிய)

2. வியாதி ஒருபக்கம் மரணமோ ஒருபக்கம்
இயேசு மறுபக்கம் நின்றீரையா

அன்பான மார்பில் என்னை சுமந்து கொண்டீரே
அணைக்கும் கரங்களால் அரவணைத்தீரே – 2 (…புதிய)

Puthiya Varudaththirkul Nadaththiyavar Neerthane
Puthiya Vaakkuththaththam Kuduththuviteer – 2

Paero Pugazho Desamengilum
Parakkum Kazhugai Pola Mattrineeraiya

Keerththiyum Pugazhchchiyum Koottu Serththire
Vetkappatta Desaththil Uyarththi Vaitheere – 2 (…Puthiya)

1. Yengi Nindra En Karangalellaam
Kudukkum Karangalaai Maattrineeraiyaa

Anaiththu Thevaikalai Santhiththeere
Neer Alavirkku Athigamaaga Asirvathiththeere – 2 (…Puthiya)

2. Vyaathi Oru Pakkam Maranamo Oru Pakkam
Yesu Marupakkam Nindreeraiyaa

Anbaana Maarbil Ennai Sumanthu Kondeere
Anaikkum Karangalaal Aravanaiththeere – 2 (…Puthiya)